Saturday, December 7, 2013
அச்சத்தில் "உலக சாம்பியன்' ஸ்பெயின்
மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, "நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது.
"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது உலக கோப்பை தொடர், வரும் 2014, ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வெளியானது.
மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 32 நாட்களில் 64 போட்டிகள் நடக்கும். லீக் முறையில் நடக்கும் போட்டிகள் முடிந்த பின், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், "நாக்-அவுட்' ("ரவுண்டு-16') சுற்றுக்கு முன்னேறும். ரியோ டி ஜெனிரோவில் பைனல் (ஜூலை 13) நடக்கும்.
பிரேசில் சாதகம்:
ஜூன் 12ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் ("ஏ' பிரிவு), தொடரை நடத்தும் பிரேசில், குரோசியா அணிகள் மோதவுள்ளன. சொந்தமண் என்பதால் பிரேசில் அணி இம்முறை கோப்பை வெல்லும் என, நம்பப்படுகிறது.
ஸ்பெயினுக்கு சிக்கல்:
"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் அணி, இம்முறை "பி' பிரிவில் உள்ளது. இத்துடன் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகளும் உள்ளன. கடந்த 2010ல், லீக் சுற்றில் சிலி அணியை சிரமப்பட்டு தான் ஸ்பெயின் வென்றது.
தவிர, ஸ்பெயின் அணி தனது முதல் போட்டியில் (ஜூன் 13) , 2010 தொடரின் பைனலில் வீழ்த்திய நெதர்லாந்து அணியைத் தான் சந்திக்கிறது.
வீரர்கள் காயம்:
இதுகுறித்து முன்னணி பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியில், "பி' பிரிவை "குரூப் ஆப் டெத்' என தெரிவித்துள்ளன. அணியின் முன்னணி வீரர்கள் இனியஸ்டா, அலோன்சோ, ஜாவி ஹெர்னாண்டஸ் காயத்தால் அவதிப்படுவதும் பலவீனம் தான்.
கோல் கீப்பர் கேப்டன் இகர் கேசிலாஸ், ரியல் மாட்ரிட் அணியில் மாற்று வீரராகத் தான் உள்ளார். சமீபத்திய போட்டிகளில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ஸ்பெயின். இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த கான்பெடரேஷன் தொடர் பைனலில், ஸ்பெயின் அணி, பிரேசிலிடம் 0-3 என, வீழ்ந்தது.
இதுபோன்ற காரணங்களால் ஸ்பெயின் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லவே கடுமையாக போராடும் நிலை தான் <உள்ளது. இதனால், மீண்டும் உலக கோப்பையை தக்கவைப்பது கடினம் தான்.
பிரிவு "ஏ' பிரிவு "பி' பிரிவு "சி' பிரிவு "டி'
பிரேசில் ஸ்பெயின் கொலம்பியா உருகுவே
குரோசியா நெதர்லாந்து கிரீஸ் கோஸ்டாரிகா
மெக்சிகோ சிலி ஐவரி கோஸ்ட் இங்கிலாந்து
காமரூன் ஆஸ்திரேலியா ஜப்பான் இத்தாலி
பிரிவு "இ' பிரிவு "எப்' பிரிவு "ஜி' பிரிவு "எச்'
சுவிட்சர்லாந்து அர்ஜென்டினா ஜெர்மனி பெல்ஜியம்
ஈகுவடார் போஸ்னியா போர்ச்சுகல் அல்ஜீரியா
பிரான்ஸ் ஈரான் கானா ரஷ்யா
ஹோண்டுராஸ் நைஜீரியா அமெரிக்கா தென் கொரியா
Wednesday, October 16, 2013
உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியா, ஸ்பெயின் தகுதி

உலககோப்பை கால்பந்து: ஸ்பெயின் தகுதி

Sunday, October 13, 2013
உலக கோப்பை கால்பந்து :பெல்ஜியம், ஜெர்மனி தகுதி
அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன.
பிரேசிலில், 20வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர், அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, உட்பட 6 பிரிவுகளாக நடக்கின்றன.
ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதிச் சுற்றில், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 53 அணிகள் 9 பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளுடன், சிறந்த இரண்டாவது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகளை சேர்த்து 13 அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.
"ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பெல்ஜியம், குரோஷியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் சார்பில் ரோமிலு லுகாகு இரண்டு கோல் அடித்தார். இதுவரை விளையாடிய 9 போட்டியில் 8 வெற்றி, ஒரு "டிரா' உட்பட 25 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் இருந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. கடைசியாக பெல்ஜியம் அணி, 2002ல் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்றது.
மற்ற ஐரோப்பிய பிரிவுகளில் நடந்த போட்டிகளின் முடிவில், ஜெர்மனி (சி), நெதர்லாந்து (டி), சுவிட்சர்லாந்து (இ) அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.
கொலம்பியா தகுதி:
தெற்கு அமெரிக்கா பிரிவில், கொலம்பியா, சிலி அணிகள் மோதிய போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. இதன்மூலம் கொலம்பிய அணி, 1998ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா, பெரு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணி ஏற்கனவே உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.
இதுவரை பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான், தென் கொரியா, நெதர்லாந்து, இத்தாலி, காஸ்டா ரிகா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட 14 அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
Friday, October 11, 2013
உலக கோப்பை கால்பந்து: பெல்ஜியம் தகுதி
.jpg)
நம்பரில் தெண்டுல்கரின் சாதனை

Wednesday, October 9, 2013
தோனி, சச்சினை முந்தும் கோஹ்லி

Saturday, September 21, 2013
சாதிக்குமா சென்னை அணி :சாம்பியன்ஸ் லீக் அதிரடி ஆரம்பம்

Wednesday, September 11, 2013
2014 உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா, ஆர்ஜெண்டினா தகுதி

ரஃபேல் நடால் சாம்பியன்

Monday, September 9, 2013
நடால் சாம்பியன் : யு.எஸ்., ஓபனில் அசத்தல்: ஜோகோவிச் ஏமாற்றம்

ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம்: ஓட்டெடுப்பில் அமோக வெற்றி

Sunday, September 8, 2013
டோக்கியோவில்2020 ஒலிம்பிக்!

Saturday, September 7, 2013
நடப்புச் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த பயஸ் ஜோடி

Wednesday, August 28, 2013
என் பலம் எனக்குத் தெரியும்!”

இந்தியாவின் அடுத்த சானியா மிர்ஸா!
அங்கிதா ரெய்னா...’ இந்தியாவின் இளம் டென்னிஸ் புயல்!
20-வது வயதிலேயே இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை அங்கீகாரம் பெற்றிருக்கும் அங்கிதா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.காம்., மாணவியான அங்கிதா, இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கிறார்.
''இந்தியாவின் அடுத்த சானியா மிர்ஸா தயாராகிறாரா?''
''அப்படிச் சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன். அஞ்சு வருடங்கள் முன் சானியா மிர்ஸா, ஷிகா, சுனிதா ராவ் என இந்தியாவிலிருந்து மூன்று வீராங்கனைகள் சர்வதேச அளவில் விளையாடிவந்தார்கள். அதன் பிறகு சர்வதேச அளவில் இந்திய வீராங்கனைகள் முத்திரைப் பதிக்கவில்லை. இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அடுத்த ஆண்டு 'கிராண்ட்ஸ்லாம்’ பந்தயங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவேன். புல் மற்றும் களிமண் என இரண்டு வகையான மைதானங்களிலும் சிறப்பாக விளையாடிவருவது எனக்கு அதிக நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது!''
டென்னிஸ் ஆர்வம் எப்படி வந்தது?''
''என் அம்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை. எங்கள் வீட்டுக்குப் பின்னாலேயே டென்னிஸ் மைதானம் இருந்தது. அதனால் நான்கு வயது முதல் என் அம்மா அந்த விளையாட்டு மைதானத்துக்கு என்னை அழைத்துச் செல்வார். எனக்கு டென்னிஸ் பிடித்துப்போக, முழுவதுமாக டென்னிஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கடந்த ஆறு ஆண்டுகளாக புனே-வில் தங்கி பயிற்சி எடுத்துவருகிறேன்!''
''உங்களை மிகவும் உற்சாகப்படுத்திய பாராட்டு எது?''
''ஸ்பெயினில் ஸ்பானிஷ் வீரருடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது உலகின் மூன்றாம் நிலை வீரரான டேவிட் ஃபெர்ரரும் அவருடைய பயிற்சியாளரும் அந்தப் பக்கமாகச் சென்றார்கள். அடுத்த கோர்ட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் என் ஆட்டத்தைப் பார்த்து அங்கேயே நின்றுவிட்டனர். டேவிட் ஃபெர்ரரின் பயிற்சியாளர் என்னிடம், 'உனக்கு பேக்ஹேண்ட் நன்றாக வருகிறது. விரைவில் உன்னை சர்வதேச அரங்கில் பார்க்கலாம்’ என்று பாராட்டினார். அந்தப் பாராட்டை என்னால் மறக்கவே முடியாது!''
''உங்களுடைய ரோல் மாடல்?''
''ரஃபேல் நடால். அவருடைய எனர்ஜியும் டெக்னிக்கும்... அதிசயம்!''
''சர்வதேச அளவில் விளையாடச் செல்லும் இந்திய வீராங்கனைகள் சந்திக்கும் சவால்கள் என்ன?''
''வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பெரும்பாலும் தனியாகத்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கூடுதலான பணம் செலவாகும் என்பதால், வீட்டிலிருந்து துணைக்கு யாரையும் அழைத்துச்செல்ல முடிவதில்லை.
ஒருமுறை நானும் இன்னொரு டென்னிஸ் வீராங்கனையும் மொராக்கோவுக்கு விளையாடச் சென்றோம். அங்கே நாங்கள் விளையாட வேண்டிய இடத்துக்கு செல்ல ரயில் ஏறினோம். அங்கே மக்கள் அனைவரும் பிரெஞ்சு மொழியில்தான் பேசினார்கள். நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் பெயரை எப்படிச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. கடைசியில், நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பிய சில விநாடிகளில் ஒருவர், 'இதுதான் நீங்கள் இறங்கவேண்டிய ஸ்டேஷன்’ என்றார். போட்டிக்குத் தாமதமாகிறது என்பதால், ரயிலை நிறுத்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தேன். செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்து 6,000 திராம் அபராதம் விதித்துவிட்டார். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துதான் எங்களை விடுவித்தார்கள். அன்று எங்களால் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.
இப்படியான சூழல்தான் மிகப் பெரிய சவால். பெரியவர்களுடன் செல்லும்போது இதுபோன்ற சூழலில் இருந்து தப்பிக்கலாம். போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தலாம்!''
''உங்கள் லட்சியம்?''
''இந்திய வீராங்கனைகள் யாரும் இதுவரை ஒற்றையர் பிரிவில் 'கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்றது இல்லை. அதேபோல் ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்றது இல்லை. இந்த இரண்டு சாதனைகளையும் படைக்கவேண்டும் என்பதே என் லட்சியம்!''
Friday, August 23, 2013
ஸ்குவாஷ் தீபிகா... காதல் பத்திக்கிச்சு!

Monday, March 18, 2013
ஆணாக மாறியம்பெண், தாயாரின் தோழியை காதலித்து திருமணம்

கனடிய செக்ஸ் பிரியர்களுக்க்கு விருந்தாகும் குழந்தைகள்.

Sunday, March 17, 2013
ஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை

விபச்சாரத்தில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்திய இரட்டை சகோதரிகள் ஓய்வு.

அலுவலக நேரத்தில் ஆபாச படம் பார்த்த ஆஸ்திரேலிய அதிகாரி

தலைகீழாக பொருட்களைப் பார்க்கும் செர்பிய இளம்பெண்.

நோயாளிகளை ஆபாச படம் எடுத்த டாக்டர் கைது.
.jpg)
Wednesday, March 13, 2013
ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாண்டவராக தேர்வு

Subscribe to:
Posts (Atom)