
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான டுவிட்டரில் போஸ்ட் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை செய்யாமல் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை அந்த அலுவலகத்தின் வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து சாலையில் செல்வோர் பலரும் ஆபாச படத்தை அலுவலகத்தின் முன் நின்றுகொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்த அதிகாரி உடனே தன்னுடைய கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு மறைவான பகுதிக்கு சென்று ஒளிந்து கொண்டார்.
இந்த வீடியோவை James P என்ற யூசர்நேம் உள்ள டுவிட்டர் ரசிகர் ஒருவர் தன்னுடைய பகுதியில் பதிவு செய்துள்ளார். ஏராளமான இண்டர்நெட் ரசிகர்கள் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அலுவலக நேரத்தின்போது ஆபாச படம் பார்க்கும் நிலை அதிகரித்து வருவதாகவும், இதுமட்டுமின்றி அலுவலக கேண்டீன், டாய்லட் முதலிய இடங்களிலும் பலர் தங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தி ஆபாச் படம் பார்த்து வருவதாகவும் டுவிட்டரில் பலர் கமெண்ட் எழுதியுள்ளனர்.
No comments:
Post a Comment