Saturday, September 21, 2013

சாதிக்குமா சென்னை அணி :சாம்பியன்ஸ் லீக் அதிரடி ஆரம்பம்

உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய அணிகள் மோதும், சாம்பியன்ஸ் லீக் தொடர் அதிரடியாக ஆரம்பமாகிறது. இதில் மும்பை, சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் கோப்பை வெல்ல களத்தில் குதித்துள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20'தொடரை நடத்துகின்றன. இதில் இந்தியாவில் இருந்து பிரிமியர் தொடர் சாம்பியன் மும்பை, இரண்டு மற்றும் 3வது இடம் பெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. தவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ என, 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இரண்டு அணிகள் செப்., 17 முதல் 20 வரை நடந்த தகுதிச்சுற்றின் மூலம் தேர்வு பெற்றன. தோனி நம்பிக்கை: சென்னை அணியை பொறுத்தவரையில், பிரிமியர் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும். ஆனால், சாம்பியன்ஸ் லீக் தொடர் என்றதும், அப்படியே தலை கீழ் நிலை தான். இதுவரை நடந்த நான்கு தொடர்களில் 2010ல் மட்டும் கோப்பை வென்றது. மற்றபடி 2009ல் தகுதி பெறவில்லை. 2011, 2012ல் லீக் சுற்றுடன் திரும்பியது. அடுத்த ஆண்டில் புதிய ஏலம் நடக்கிறது. இதனால், சென்னை அணி வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்த, இது தான் கடைசி வாய்ப்பு. இதற்கேற்ப கேப்டன் தோனி, சொந்தமண்ணில் ஏதாவது மாயம் நிகழ்த்துவார் என்று நம்பப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில், சமீபகாலமாக வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள தோனிக்கு, வழக்கம் போல முரளி விஜய் (14 போட்டி, 414 ரன்),ரெய்னா (14 போட்டி, 384 ரன்) கைகொடுக்க வேண்டும். சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 4, 5வது இடத்திலுள்ள இவர்களுடன் பத்ரிநாத்தும் உதவலாம். தவிர, கடந்த பிரிமியர் தொடரில் பேட்டிங்கில் எழுச்சி பெற்ற மைக்கேல் ஹசி இருப்பது கூடுதல் பலம். பவுலிங்கில் சமீபகாலமாக சர்வதேச அரங்கில் எழுச்சி பெற்றுள்ள ரவிந்திர ஜடேஜா, முக்கிய ஆயுதமாக இருப்பார். ஒருநாள் தரவரிசையில் "நம்பர்-1' பவுலராக உருவெடுத்துள்ள இவருடன், தமிழகத்தின் அஷ்வினும் இணைந்து வெற்றிதேடித் தரவேண்டும். தவிர, டுவைன் பிராவோ, ஆல்பி மார்கல், கிறிஸ் மோரிசும் உள்ளனர். சச்சினுக்கு கடைசி: கடந்த 2011 தொடரில் சாம்பியன்ஸ் கோப்பை வென்றது மும்பை அணி. கடந்த பிரிமியர் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் கோப்பை வென்றது. தற்போது, "சாம்பியன்' அணியாக களமிறங்குகிறது. அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பங்கேற்கும் கடைசி தொடராக இது பார்க்கப்படுகிறது. அவருக்காக எப்படியும் கோப்பை வெல்ல அணி வீரர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு போலார்டு, தினேஷ் கார்த்திக் உதவலாம். பவுலிங்கில் "யார்க்கர்' மலிங்கா இல்லாதது பெரும் பலவீனம் தான். மற்றபடி, மிட்சல் ஜான்சன், அம்பதி ராயுடு, மேக்ஸ்வெல், டுவைன் ஸ்மித், பிரக்யான் ஓஜா, அபு நேச்சிம், முனாப் படேலும் அணியில் உள்ளனர். இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப போராடி வரும் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சோதனையில் டிராவிட்: கடந்த 2008ல் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான் அணி. ஆனால், தொடர் ரத்து செய்யப்பட்டது. இம்முறை டிராவிட் தலைமையில், பிரிமியர் தொடரில் எழுச்சி பெற்றது. இடையில், ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், சித்தார்த் திரிவேதி சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது, அணியின் வெற்றியை பாதித்தது. ஒருவழியாக மூன்றாவது இடம் பெற்று, முதன் முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கிறது. அனுபவ வீரர் வாட்சன், ரகானே, இளம் வீரர் சஞ்சு சாம்சன், அசோக் மனேரியா பேட்டிங்கில் கைகொடுக்கலாம். பவுலிங்கை பொறுத்தவரையில் ஷான் டெய்ட், பால்க்னர், கெவான் கூப்பர் உதவலாம். மிரட்டுமா லயன்ஸ்: இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த உள்ளூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹைவெல்டு லயன்ஸ், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கிறது. கேப்டன் ஆல்விரோ பீட்டர்சன் சர்வதேச அனுபவம் வாய்ந்தவர். தவிர, குயின்டன் டி காக், பங்கிசோ கைகொடுத்தால் மீண்டும் பைனலுக்கு முன்னேறலாம். தென் ஆப்ரிக்காவின் மற்றொரு அணி டைட்டன்ஸ். டிவிலியர்ஸ், பெகர்டியன், கேப்டன் ஜார்ஸ்வெல்டு, அனுபவ ருடால்ப் போன்றவர்கள் பேட்டிங்கில் உதவினால், இங்கு சாதிக்கலாம். பவுலிங்கை பொறுத்தவரையில் வான்டர் மெர்வி, புனே அணியில் இருந்த அல்போன்சா தாமஸ் மற்றும் மார்னே மார்கல் மிரட்ட காத்திருக்கின்றனர். பெர்த்-பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரில் வெற்றி பெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, முதன் முறையாக இத்தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்காக விளையாடிய வாட்சன் (ராஜஸ்தான்), ஸ்டைன், திசாரா பெரேரா (ஐதராபாத்), மிட்சல் ஜான்சன் (மும்பை) போன்ற முன்னணி வீரர்கள், தற்போது பிற அணிகளுக்காக விளையாடுகின்றனர். இதனால், பிரிஸ்பேன் அணி "பல் பிடுங்கப்பட்ட பாம்பாக' உள்ளது. வேறு வழியில்லாததால், "செக்ஸ்' சர்ச்சையில் சிக்கிய பாமர்ஸ்பச், பீட்டர் பாரஸ்ட், கேப்டன் ஜேம்ஸ் ஹோப்சை நம்பி களம் காணுகிறது. இங்கும் இப்படித்தான்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியிலும் இப்படித்தான் சிக்கல் நிலவுகிறது. மைக்கேல் ஹசி, சென்னைக்காக பங்கேற்கிறார். ஷான் மார்ஷ் காயத்தால் விலகிவிட்டார். இருப்பினும், 38 வயது "சீனியர்' சைமன் காடிச், மார்கஸ் நார்த், 42வயதான பிராட் ஹாக் மீது நம்பிக்கை உள்ளது. தவிர, சமீபத்திய ஆஷஸ் தொடரில் அறிமுகம் ஆன இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் ஏகாரும் கைகொடுக்கலாம். டிரினிடாட் வாய்ப்பு: வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ அணிக்கு இம்முறை அதிர்ஷ்டம் தான். கடந்தமுறை தகுதிச்சுற்றில் தோற்று வெளியேறிய இந்த அணி, இத்தொடரில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டது. உள்ளூர் தொடரில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கோப்பை வென்றது டிரினிடாட் அணி. தினேஷ் ராம்தினை கேப்டனாக கொண்ட இந்த அணியில், அட்ரியன் பரத், டேரன் பிராவோ, ரவி ராம்பால் என, "சீனியர்கள்' <உள்ளனர். சுழல் "மாயாவி' சுனில் நரைனுக்கு இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை அத்துப்படி என்பதால், மற்ற அணிகளுக்கு சிக்கல் தான். ஜாம்பவான் பிரையன் லாரா, ஆலோசகராக உள்ளது கூடுதல் பலம். மலிங்கா இல்லை மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. பிரிமியர் (103 விக்.,) மற்றும் சாம்பியன்ஸ் லீக் (24) தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அணியின் வெற்றியில் இவருக்கு பெரும் பங்குண்டு. இவரது மனைவிக்கு பிரசவம் நடக்க இருப்பதால், இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், 6வது பிரிமியர் தொடரில் 20 சதவீத சம்பளத்தை இழக்க நேரிட்டுள்ளது. தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக பணமும் கிடைக்காது. இதுவரை சாம்பியன்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இதுவரை சாம்பியன் கோப்பை வென்ற அணிகளின் விவரம். ஆண்டு சாம்பியன் எதிரணி இடம் 2009 நியூ சவுத் வேல்ஸ் (ஆஸி.,) டிரினிடாட் (வெ.இ.,) ஐதராபாத் 2010 சென்னை (இந்தியா) வாரியர்ஸ் (தெ.ஆ.,) ஜோகனஸ்பர்க் 2011 மும்பை (இந்தியா) பெங்களூரு (இந்தியா) சென்னை 2012 சிட்னி சிக்சர்ஸ் (ஆஸி.,) லயன்ஸ் (தெ.ஆ.,) ஜோகனஸ்பர்க் 2013 ? ? புதுடில்லி பரிசு எவ்வளவு இந்த ஆண்டு சாம்-பி-யன்ஸ் லீக் "டு-வென்-டி--20' தொட-ரில் கோப்பை வெல்-லும் அணிக்கு ரூ. 15.81 கோடி பரி-சாக கிடைக்-கும். இரண்-டா-வது இடம் பெறும் அணி ரூ. 8.2 கோடி வழங்கப்படும். அரை-யி-று-தி-யில் தோல்வியடையும் அணிக-ளுக்கு தலா ரூ. 3.1 கோடி தரப்-ப-டும். லீக் சுற்-றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ. 1.26 கோடி கிடைக்கும். பைனலுக்கு செல்லும் பாதை சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்-கேற்-கும் 10 அணி-கள், இரு பிரி-வுகளாக பிரிக்-கப்-ப-டும். போட்-டி-கள் "ரவுண்டு ராபின்' முறை-யில் நடக்-கும். ஒவ்-வொரு அணி-யும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்-றின் முடி-வில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்-களை பிடிக்கும் அணிகள், வரும் அக்., 4, 5ல் ஜெய்ப்பூர், டில்லியில் நடக்-கும் அரை-யி-றுதிக்கு தகுதி பெறும். இத்தொடரின் பைனல் வரும் அக்., 6ல் டில்லியில் நடக்கிறது. பங்கேற்கும் அணிகள் பிரிவு "ஏ' * மும்பை (இந்தியா) * ராஜஸ்தான் (இந்தியா) * ஹைவெல்டு லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா) * பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா) * தகுதிச் சுற்றில் முதலிடம் பிரிவு "பி' * சென்னை (இந்தியா) * டைட்டன்ஸ் (தென் ஆப்ரிக்கா) * பிரிஸ்பேன் ஹீட் (ஆஸ்திரேலியா) * டிரினிடாட் அண்டு டுபாகோ (வெஸ்ட் இண்டீஸ்) * தகுதிச் சுற்றில் இரண்டாவது இடம் நான்கு சதம் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இதுவரை நான்கு சதம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ல் ஐதராபாத்தில் நடந்த ஒடாகோ (நியூசிலாந்து) அணிக்கு எதிரான போட்டியில் கேப் கோப்ராஸ் (தென் ஆப்ரிக்கா) அணியின் ஆன்ட்ரூ புட்டிக் (104 ரன்) முதல் சதம் அடித்தார். நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா) அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் (135, 123 ரன்கள்) அதிகபட்சமாக இரண்டு சதம் அடித்தார். இந்தியா சார்பில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 94 ரன்கள் (எதிர்-பெங்களூரு, 2010) எடுத்தார். மலிங்கா அதிகம் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் மும்பை அணியின் லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். இவர் 14 போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றினார். அடுத்த நான்கு இடங்களில் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்காக பங்கேற்ற ஹென்ரிக்ஸ் (22 விக்கெட்), சென்னை அணியின் போலிஞ்சர் (22), டுவைன் பிராவோ (21), அஷ்வின் (21) ஆகியோர் உள்ளனர். கோஹ்லி "-டாப்' அ-திக "கேட்ச்' பிடித்த பீல்-டர்-கள் வரி-சை-யில் பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி முன்-னிலை வகிக்-கி-றார். இவர், 15 போட்-டி-யில் 10 "கேட்ச்' பிடித்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் சாமர்-சட் அணி-யின் சுப்-பையா (9 கேட்ச்), சென்னை அணியின் ரெய்னா (9), டிரி-னி-டாட் அணியின் சிம்-மன்ஸ் (9) ஆகியோர் உள்ளனர். * ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் கேப் கோப்ராஸ் வீரர் ஓவைஸ் ஷா (4 கேட்ச், எதிர்- மும்பை, 2011) உள்ளார். 215 அ-தி-க-பட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி-கள் வரி-சை-யில் இந்தியாவின் பெங்-க-ளூரு அணி முதலிடத்தில் உள்ளது. பெங்-க-ளூருவில் 2011ல் நடந்த தெற்கு ஆஸ்-தி-ரே-லி-யா-வுக்கு எதி-ரான போட்டியில், 20 ஓவ-ரில் 8 விக்-கெட்-டுக்கு 215 ரன்-கள் எடுத்தது. இப்போட்டியில் முத-லில் பேட் செய்த தெற்கு ஆஸ்-தி-ரே-லியா அணி 20 ஓவ-ரில் 214 ரன்-கள் எடுத்-து, இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. 70 குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்த அணிகள் வரி-சை-யில் நியூ-சி-லாந்-தின் சென்ட்ரல் டிஸ்டிரிக்ஸ் முன்னிலை வகிக்கிறது. போர்ட்எலிசபெத் நகரில் 2010ல் நடந்த போட்டியில் இலங்கையின் வயம்பா அணிக்கு எதிராக 70 ரன்களுக்கு சுருண்டது. சிக்சர் மன்னன் இத்தொடரில் அ-திக சிக்-சர் விளாசிய வீரர்-கள் -பட்டியலில் மும்பை, டிரினிடாட் அணிகளுக்காக பங்கேற்ற போலார்டு முதலிடத்தில் உள்ளார். இவர், 20 போட்-டிகளில் 38 சிக்-சர் அடித்-துள்ளார். * அடுத்த மூன்று இடங்களில் டில்லி, நியூ சவுத் வேல்ஸ் அணி-யின் டேவிட் வார்-னர் (27 சிக்-சர்), பெங்-க-ளூரு அணியின் கிறிஸ் கெய்ல் (24), சென்னை அணியின் ரெய்னா (17) ஆகியோர் உள்ளனர். தோனி தான் "டாப்' அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் வரிசையில் சென்னை அணி கேப்டன் தோனி முன்னிலை வகிக்கிறார். இவர், 14 போட்டி-யில் 10 "கேட்ச்', 8 "ஸ்டம்பிங்' என மொத்தம் 18 விக்-கெட் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளார். இவரை அடுத்து கோல்கட்டா, சிட்னி சிக்சர்ஸ் அணி-யின் பிராட் ஹாடின் (12 விக்-கெட்) உள்ளார். வார்னர் முன்னிலை சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் முன்னிலை வகிக்கிறார். டில்லி, நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 13 போட்டியில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 556 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து போலார்டு (479 ரன்கள், மும்பை, டிரினிடாட்), விராத் கோஹ்லி (424, பெங்களூரு), முரளி விஜய் (414, சென்னை), சுரேஷ் ரெய்னா (387, சென்னை), காலிஸ் (380, கோல்கட்டா, பெங்களூரு) உள்ளனர். சூப்பர் ஜோடி சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் வாரியர்ஸ் அணியின்(தென் ஆப்ரிக்கா) ஜேக்கப்ஸ், பிரின்ஸ் ஜோடி உள்ளது. 2010ல் போர்ட் எலிசபெத் நகரில் நடந்த சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. 20 அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் போலிஞ்சர் (சென்னை, நியூ சவுத் வேல்ஸ்), டிர்க் நானஸ் (டில்லி, பெங்களூரு, விக்டோரியா), போலார்டு (மும்பை, டிரினிடாட்) உள்ளனர். இவர்கள் மூவரும் தலா 20 போட்டியில் விளையாடி உள்ளனர். இவர்களை அடுத்து ஹென்ரிக்ஸ் (நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ்), ஸ்மித் (நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ்) ஆகியோர் தலா 17 போட்டியில் விளையாடி உள்ளனர். 13 அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்கள் வரிசையில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் உள்ளார். இவர், இதுவரை 13 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

Wednesday, September 11, 2013

2014 உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா, ஆர்ஜெண்டினா தகுதி

2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆர்ஜெண்டினா, அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிரேசிலில் 2014-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி முத் ஜூலை 13-ம் தேதி வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக பிரேசில் நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பிரேசிலில் 2-வது முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் அந்த 32 அணிகள் தேர்வு செய்யப்படும். போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில், பலம் வாய்ந்த பிரேசில் அணி ஏற்கெனவே தகுதி பெற்று விட்டது. மற்ற அணிகள் தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. கண்டங்களில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு இடையே நடைபெறும் கால்பந்து தொடரில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் உலகக் கோப்பைக்கு அணிகள் தகுதிபெறும். தகுதிச்சுற்றுகள்: உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பராகுவேயின் தலைநகர் அசன்சியனில் பராகுவேயும், ஆர்ஜெண்டினாவும் மோதின. இந்த ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணி 5-2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கோப்பைக்கு போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆர்ஜெண்டினாவுக்கு கிடைத்த இரு பெனால்டி வாய்ப்புகளை மெஸ்ஸி கோலாக மாற்றினார். அதேசமயம், தென் அமெரிக்க பிரிவில் கொலம்பியா, உருகுவே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கொலம்பியா அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அந்த அணிக்கு மேலும் ஒரு புள்ளிகள் வேண்டும். 1998-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற கொலம்பியா அணி போராடி வருகிறது. அமெரிக்கா, கோஸ்டா ரிகா: மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள நாடுகளுக்கு இடையேயான தகுதிச்சுற்றுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அமெரிக்க 2-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஜமைக்கா அணியுடனான ஆட்டத்தில் 1-1 என்று டிரா செய்ததன் மூலம் கோஸ்டா ரிகா அணியும் உலகக் கோப்பைக்கு முன்னேறியது. முதல் ஐரோப்பிய நாடுகள்: உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் ஐரோப்பிய நாடுகள் என்ற பெருமையை இத்தாலியும், நெதர்லாந்தும் பெற்றுள்ளன. நெதர்லாந்து அணி, கடந்த உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் துரின் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செக் குடியரசுக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. 1958-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியைத் தவிர, மற்ற உலகக் கோப்பை போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது அந்த அணிக்கு உள்ள சிறப்பாகும். அதேசமயம், கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்படும் ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் விளிம்பில் உள்ளது.
மாறாக ரஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெறுவது, வரும் காலங்களில் தகுதிச்சுற்றில் அந்த அணிகள் விளையாடும் ஆட்டங்களைப் பொறுத்தே உள்ளது. 2014 உலகக் கோப்பைக்கு இதுவரை தகுதி பெற்றுள்ள அணிகள் அணி தகுதிபெற்ற நாள் உலகக் கோப்பையில் சிறந்த பட்சம் பிரேசில் அக்டோபர்-2007 20-வது முறை வெற்றி (1958, 1962, 1970, 1994, 2002) ஜப்பான் ஜூன்-2013 5-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று (2002, 2010) ஆஸ்திரேலியா ஜுன்-2013 4-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று (2006) ஈரான் ஜுன்-2013 4-வது முறை அணிப் பிரிவுகளில் (1978, 1998, 2006) தென் கொரியா ஜூன்-2013 9-வது முறை 4-ம் இடம் (2002) நெதர்லாந்து செப்டம்பர்-2013 10-வது முறை 2-ம் இடம் (1974, 1978, 2010) இத்தாலி செப்டம்பர்-2013 18-வது முறை வெற்றி (1934, 1938, 1982, 2006) அமெரிக்கா செப்டம்பர்-2013 10-வது முறை 3-ம் இடம் (1930) கோஸ்டா ரிகா செப்டம்பர்-2013 4-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று (1990) ஆர்ஜெண்டினா செப்டம்பர்-2013 16-வது முறை வெற்றி (1978, 1986)

ரஃபேல் நடால் சாம்பியன்

ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோலவே, "ஹார்ட் கோர்ட்' மைதானத்தில் ஜொலித்து வரும் நடால், 2013-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். நியூயார்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 6-2, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். நடாலுக்கு இது இரண்டாவது அமெரிக்க ஓபன் பட்டமாகும். இதற்கு முன், அவர் 2010-ம் ஆண்டு ஜோகோவிச்சை வீழ்த்தி இப்பட்டத்தை கைப்பற்றியிருந்தார். இப்பட்டத்தை வென்று, தனது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கையை 13ஆக உயர்த்தினார் நடால். இன்னும், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றால், முதலிடத்தில் உள்ள ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்ய முடியும். 27 வயது நிரம்பிய நடால், அந்த சாதனையை விரைவில் புரிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த சகுனம்: திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்று, தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள வீரர்களுக்கு இடையேயான ஆட்டம் என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மைதானத்தில் குவித்திருந்தனர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் நடால், 42 நிமிடங்களுக்குள் கைப்பற்றினார். இதுவரை, தான் விளையாடிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் 154 ஆட்டங்களில் 151 ஆட்டங்களில் முதல் செட்டை நடால் கைப்பற்றியுள்ளார். இதனால், அமெரிக்க ஓபனில் முதல் செட்டைக் கைப்பற்றியது சிறந்த சகுனமாகக் கருதப்பட்டது. ஆனால், அடுத்த செட்டில் ஜோகோவிச் கடும் சவால் அளித்தார். இறுதியில் அவரின் நெருக்கடிக்கு நடால் பணிந்தார். இதனால் 2-வது செட்டை 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். முதலில் பின்னடைவைச் சந்தித்து, பின்னர் சரிவிலிருந்து மீண்டு வெற்றி பெறுபவர் என்ற பெயரைப் பெற்றுள்ள நடால், 3-வது செட்டில் சுதாரித்துக் கொண்டார். இந்த செட்டில் ஜோகோவிச், தேவையற்ற தவறுகளை புரிந்தார். அதனால், இந்த செட்டை அவர் 4-6 என்ற கணக்கில் நடாலிடம் இழந்தார். ஜோகோவிச்சின் தேவையற்ற தவறு 4-வது செட்டிலும் தொடர்ந்ததால், அந்த செட்டை நடால் 6-1 என்று கைப்பற்றி அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். பரிசுத் தொகை: அமெரிக்க ஓபனை வென்றதன் மூலம், நடாலுக்கு 23 கோடி ரூபாய் ரொக்கம் (போனஸ் தொகையுடன்) பரிசளிக்கப்பட்டது. வெற்றி குறித்து நடால் கூறுகையில், "இந்த வெற்றி என்னை உணர்ச்சி வசப்படுத்தியது. எனது அணியினருக்கு இது குறித்து நன்கு தெரியும். ஜோகோவிச், சிறந்த வீரர். என்னுடைய சிறந்த ஆட்டத்தை அவர் எப்போதும் வெளிக்கொண்டு வருபவர்' என்று தெரிவித்தார். ஏமாற்றம்: அமெரிக்க ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தொடர்ச்சியாக 4 முறை முன்னேறிய ஜோகோவிச், 2011-ம் ஆண்டு மட்டும் நடாலை வீழ்த்தி வெற்றி பெற்றார். மற்ற மூன்று முறையும் அவர் தோல்வியையே தழுவியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனை வென்று இந்த சீசனை சிறப்பாக தொடங்கினார் ஜோகோவிச். ஆனால், பிரெஞ்சு ஓபனில் அரையிறுதியிலும், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளில் இறுதிச்சுற்றிலும் தோற்றிருப்பது ஜோகோவிச்சுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்குப் பின் ஜோகோவிச் கூறுகையில், "வெற்றி பெற வேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். ஆனால், விளையாட்டில் தோல்வியும் ஓர் அங்கமே. இந்த ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் நடால் சிறப்பாக விளையாடினார். இந்த வெற்றிக்கு நடால் தகுதியானவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய வயது 26. இன்னும் சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்தவில்லை. வரும் காலங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்' என்று தெரிவித்தார். 2013-இல் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் பட்டம் - வீரர் - வீராங்கனை ஆஸ்திரேலிய ஓபன் நோவக் ஜோகோவிச் விக்டோரியா அசரென்கா பிரெஞ்சு ஓபன் ரஃபேல் நடால் செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் ஆன்டி முர்ரே மரியோன் பர்டோலி அமெரிக்க ஓபன் ரஃபேல் நடால் செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியதுடன் நடால் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு 18 முறை முன்னேறியுள்ள நடால், 13இல் வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஓபன்: 2009 பிரெஞ்சு ஓபன்: 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013 விம்பிள்டன்: 2008, 2010 அமெரிக்க ஓபன்: 2010, 2013 மொத்த ஒற்றையர் பட்டங்கள்: 60 இந்த ஆண்டில் நடால் வென்ற பட்டங்கள் 2013-ம் ஆண்டு நடாலுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. 2012-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபனை வென்ற பின், காயத்தால் அவதிப்பட்டு வந்த நடால், 7 மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயத்துக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் களத்துக்குத் திரும்பிய நடால், இந்த சீசனில் இதுவரை 10 பட்டங்களை வென்றுள்ளார். மாதம் - வென்ற பட்டம் பிப்ரவரி-17 பிரேசில் ஓபன் மார்ச்-2 மெக்ஸிகனோ டெலிசெல் மார்ச்-17 பிஎன்பி பரிபாஸ் ஓபன் ஏப்ரல்-28 பார்சிலோனா ஓபன் மே-12 மேட்ரிட் ஓபன் மே-19 பிஎன்எல் டென்னிஸ் ஜூன்-9 பிரெஞ்சு ஓபன் ஆகஸ்ட்-11 ரோஜர்ஸ் கோப்பை ஆகஸ்ட்-18 சின்சினாட்டி ஓபன் செப்டம்பர்-9 அமெரிக்க ஓபன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர்கள் ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) - 17 பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) - 14 ரஃபேல் நடால் (ஸ்பெயின்) - 13 ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா) - 12 ஜான் போர்க் (ஸ்விட்சர்லாந்து) - 11 ராட் லேவர் (ஆஸ்திரேலியா) - 11 பில் டில்டென் (அமெரிக்கா) - 10 கடைசி 10 ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியன்கள் 2013: ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 2012: ஆன்டி முர்ரே (பிரிட்டன்) 2011: நோவக் ஜோகோவிச் (செர்பியா) 2010: ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 2009: ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ (ஆர்ஜெண்டினா) 2008: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2007: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2006: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2005: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2004: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) ஓர் ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியாது: நடால் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் எனப்படும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். இந்த நான்கு பட்டங்களையும் ஒரே ஆண்டில் வெல்ல வேண்டும் என்று ஒவ்வொரு வீரரும் லட்சியம் கொண்டிருப்பர். இந்த சாதனையை அமெரிக்காவின் டான் பட்ஜ் (1938), ஆஸ்திரேலியாவின் ராட் லேவர் (1962, 1969) ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். அதன்பிறகு, மற்ற வீரர்களால் இந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. இது குறித்து நடால் கூறுகையில், "ஓர் ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தற்போது வெல்வது என்பது முடியாத காரியம் என்றே தோன்றுகிறது. இது என்னுடைய கருத்து. தற்போது சிறந்த வீரர்கள் களத்தில் உள்ளனர். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல வேண்டுமென்றால், ஃபெடரர், ஃபெரர், முர்ரே மற்றும் ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்களை வெல்ல வேண்டும். இந்த வீரர்கள் லீக் சுற்றுகளில் தோல்வியைச் சந்திக்க மாட்டார்கள். இவர்களுக்கு எதிராக வெற்றி பெற்று 4 பட்டங்களையும் வெல்வது கடினம்' என்று தெரிவித்தார். கடைசியாக நடைபெற்ற 35 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில், 34 முறை ஜோகோவிச், நடால், ஃபெடரர் மற்றும் முர்ரே ஆகிய நான்கு பேரில் ஒருவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, September 9, 2013

நடால் சாம்பியன் : யு.எஸ்., ஓபனில் அசத்தல்: ஜோகோவிச் ஏமாற்றம்

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார். நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் "நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள ஸ்பெயினின் நடாலை எதிர் கொண்டார். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். மீண்டும் எழுச்சி கண்ட நடால் அடுத்த இரண்டு செட்களை 6-4, 6-1 என தன்வசப்படுத்தினார். சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த ஆட்டத்தின் முடிவில், நடால் 6-2, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையை தட்டிச் சென்றார். இரண்டாவது முறை: இதன் மூலம், நடால் யு.எஸ்., ஓபன் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதற்கு முன் 2010ம் ஆண்டு இத்தொடரை கைப்பற்றியிருந்தார். தவிர, ஒட்டுமொத்தமாக நடால் பெறும் 13வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு இத்தொடரில் முழங்கால் காயம் காரணமாக விலகிய இவர், பிப்ரவரி மாதம் மீண்டும் போட்டிக்கு திரும்பினார். இந்நிலையில், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, யு.எஸ்., ஓபன் பட்டத்தை வென்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. செரினா அசத்தல்: இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் "நம்பர்-1' வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இரண்டாவது இடத்திலுள்ள பெலாரசின் அசரன்காவை எதிர்கொண்டார். முதல் செட்டை 58 நிமிட போராட்டத்துக்குப் பின் 7-5 என, செரினா கைப்பற்றினார். அடுத்த செட்டில் 4-1 என முன்னிலை பெற்றார். இருப்பினும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய அசரன்கா 6-6 என சமன் செய்தார். பின் "டை பிரேக்கர்' மூலம் இதை 7-6 என வென்று பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது செட்டில் சொதப்பினார் அசரன்கா. இதை பயன்படுத்திக் கொண்ட செரினா 6-1 என வென்றார். 2 மணி நேரம், 45 நிமிடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில், செரினா வில்லியம்ஸ் 7-5, 6-7, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார். இத்துடன் பரிசுப்பணமாக போனஸ் (ரூ. 6.5 கோடி) உட்பட மொத்தம் ரூ. 23.24 கோடி தட்டிச் சென்றார். இதற்கு முன் 1999, 2002, 2008, 2012ல் இத்தொடரில் சாதித்த செரினா, ஐந்தாவது முறையாக யு.எஸ்., ஓபன் பட்டம் கைப்பற்றி அசத்தினார். தவிர, ஆஸ்திரேலிய ஓபனில் 5 (2003, 2005, 2007, 2009, 2010), பிரெஞ்ச் ஓபனில் 2 (2002, 2013), விம்பிள்டனில் 5 (2002, 2003, 2009, 2010, 2012) என மொத்தம், 17 கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றுள்ளார். முதல் வீராங்கனை யு.எஸ்.ஓபன் வரலாற்றில் அதிக வயதில் (31) பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார் செரினா வில்லியம்ஸ். இதற்கு முன் 293 நாட்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் 1973ல் வென்று இருந்தார். * தவிர, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாற்றில் அதிக வயதில் பட்டம் வெல்லும் மூன்றாவது வீராங்கனை செரினா தான். * தரவரிசையில் "நம்பர்-1' இடத்தில் இருந்து, கடந்த 2007ல் ஜஸ்டின் ஹெனின், தற்போதுசெரினா கோப்பை வென்றுள்ளனர். * அதேபோல, 2009-2010க்குப் (கிளைஸ்டர்ஸ்) பின், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கோப்பை வென்றது செரினா மட்டும் தான். மூன்றாவது இடம் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் ஜெர்மனியின் ஸ்டெபி கிராப், அதிகபட்சமாக 22 முறை கோப்பை வென்றார். அடுத்த இடத்தில் அமெரிக்காவின் கிறிஸ் எவர்ட், ö குடியரசின் மார்டினா நவரத்திலோவா ஆகியோர் 18 பட்டம் வென்றுள்ளனர். மூன்றாவது (17) இடத்தில் செரினா வில்லியம் உள்ளார்.

ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம்: ஓட்டெடுப்பில் அமோக வெற்றி

வரும் 2020ல் நடக்கும் ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம் இடம் பெறுகிறது. நேற்று நடந்த ஓட்டெடுப்பில் மகத்தான வெற்றி பெற்றது. இதனால் இந்திய நட்சத்திரங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். உலகின் மிகப் பழமையான விளையாட்டு மல்யுத்தம். நவீன ஒலிம்பிக் துவக்கப்பட்டது (1896) முதல் இடம் பெற்று வருகிறது. இதில், இந்தியாவின் ஜாதவ்(1952, ஹெல்சின்கி), சுஷில் குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் பதக்கம் வென்று அசத்தினர். இதற்கிடையே, போதிய வரவேற்பில்லை என்ற காரணத்துக்காக 2020ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்தம் நீக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) அறிவித்தது. இதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மல்யுத்தத்தை மீண்டும் சேர்க்க ஏற்பாடுகள் நடந்தன. மல்யுத்தம், ஸ்குவாஷ், பேஸ்பால்/சாப்ட்பால் ஆகிய மூன்று போட்டிகளில் ஏதாவது ஒன்று தேர்வு செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஸ்குவாஷ் நிராகரிப்பு: இது தொடர்பாக அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் நடக்கும் ஐ.ஓ.சி., பொதுக்குழு கூட்டத்தில் நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் உள்ள 95 ஓட்டுகளில், மல்யுத்தம் 49 ஓட்டுகளுடன் முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றது. இதையடுத்து 2020, 2024ல் நடக்கும் ஒலிம்பிக்கில் தொடர்ந்து இடம் பெறும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்குவாஷ்(22 ஓட்டு), பேஸ்பால்/சாப்ட்பால் (24 ஓட்டு) போட்டிகள் வாய்ப்பை இழந்தன. சுஷில் மகிழ்ச்சி: இது குறித்து ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கூறுகையில்,""மீண்டும் மல்யுத்தம் சேர்க்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. எதிர்காலத்தில் நம்மவர்கள் மல்யுத்தத்தில் கண்டிப்பாக நிறைய பதக்கம் வெல்வார்கள்,''என்றார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ராஜ் சிங் கூறுகையில்,""வரும் 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமை ஜப்பானுக்கு கிடைத்த போதே மல்யுத்தம் இடம் பெறும் என நம்பினேன். ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் மல்யுத்தத்திற்கு ஆதரவாக ஓட்டு அளித்ததற்கு நன்றி,''என்றார். லண்டன் ஒலம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் கூறுகையில்,"" மல்யுத்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. தற்போது இந்த அச்சம் நீங்கியுள்ளது. இன்னொரு பதக்கம் வென்றது போல உணருகிறேன்,''என்றார். பயிற்சியாளர் சத்பால் சிங் கூறுகையில்,""ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் மல்யுத்தம் மூலம் தான் கிடைத்தன. தற்போதைய செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,''என்றார். சவுரவ் ஏமாற்றம்: இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோசல் கூறுகையில்,""ஸ்குவாஷ் போட்டி அரிய வாய்ப்பை இழந்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஒலிம்பிக்கில் இடம் பெற தொடர்ந்து முயற்சிப்போம்,''என்றார்.

Sunday, September 8, 2013

டோக்கியோவில்2020 ஒலிம்பிக்!

2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை ஜப்பானின் டோக்கியோ நகரம் வென்றுள்ளது. நேற்று, ஆர்ஜெண்டீனாவில் உள்ள பியூனொஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இஸ்தான்புல், மெட்ரிட் ஆகிய நகரங்களை தோற்கடித்து ஜப்பான் இவ்வாய்ப்பை வென்றுள்ளது. இறுதியாக 1964ம் ஆண்டு ஜப்பான் இப்போட்டிகளை நடத்தியிருந்தது. அப்போது 93 நாடுகள் போட்டிகளில் பங்கேற்று இருந்தது. அதுவே முதன் முறையாக ஆசிய நாடொன்று போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்ற தருணம் ஆகும். அதன் பின்னர் 42 வருடங்களுக்கு பிறகு ஜப்பான் மீண்டும் 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது. ஜப்பான் தற்போது ஒலிம்பிக் போட்டிகளுக்காக மீண்டும் போட்டியிட்ட போது புகுஷிமா அணு இல்லையா மீண்டும் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அது போன்று எந்தவொரு சம்பவமும் இனி நடைபெறாது. டோக்கியோ அணு உலையிலிருந்து 150 மைல் தொலைவில் உள்ளது. எனவே எந்தப் பாதிப்பும் ஏற்படாது என ஜப்பானிய பிரதமர் உறுதி அளித்தார். 2011 இல் பூகம்பம், சுனாமி ஜப்பான் வட-கிழக்கு பகுதிகளை தாக்கிய போது புகுஷிமா அணு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 2016 ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவிடம் இந்த வாய்ப்பை இழந்த பின்னர் டோக்கியோ இந்த முறை நேரிடையாக இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளை இரண்டாவது தடவையாக நடத்தும் ஒரே நாடு எனும் பெருமையையும் டோக்கியோ வென்றுள்ளது.

Saturday, September 7, 2013

நடப்புச் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த பயஸ் ஜோடி

அமெரிக்க ஓபனில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி மற்றும் இரட்டையர் அரையிறுதி ஆட்டங்களில் நடப்புச் சாம்பியன்கள் வெளியேற்றப்பட்டனர். இரட்டையர் பிரிவில் இந்த ஆண்டின் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்று 1951-ம் ஆண்டு நிகழ்ந்த சாதனையை சமன் செய்துவிடலாம் என்று எண்ணியிருந்த அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்களின் கனவை தகர்த்தது பயஸ் ஜோடி. நியூயார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக் குடியரசின் ரடேக் ஸ்டீபானெக் ஜோடி 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரையன் சகோதரர்களை தோற்கடித்தது. இந்த ஆண்டில் விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை பிரையன் சகோதரர்கள் வென்றனர். ஆனால், தனது சொந்த நாட்டில் நடைபெற்ற இவ்வாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பிரையன் சகோதரர்களால் வெல்ல முடியவில்லை. பயஸ் ஜோடி, தங்களது இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் அலெக்ஸாண்டர் பியா-பிரேசிலின் புருனே சோரெஸ் ஜோடியை எதிர்கொள்கிறது. பியா-சோரெஸ் ஜோடி, தங்களது அரையிறுதியில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் இவான் டோடிஜ்-பிரேசிலின் மார்சிலோ மிலோ ஜோடியை வீழ்த்தியது. 3-வது அமெரிக்க ஓபன் பட்டம்: லியாண்டர் பயஸ், இதற்கு முன் இரட்டையர் பிரிவில் 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். பிரையன் சகோதரர்களை வீழ்த்திய நம்பிக்கையில், தற்போது அவர் இறுதிச்சுற்றை எதிர்கொள்கிறார். இந்தப் பட்டத்தை வென்றால், இரட்டையர் பிரிவில் பயஸ் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 8ஆக உயரும். முர்ரேவுக்கு அதிர்ச்சி: ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, நேர் செட்களில் தோல்வியடைந்தார். வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவிடம் 6-4, 6-3, 6-2 என்ற செட்களில் முர்ரே தோற்றார். இந்த வெற்றி குறித்து வாவ்ரிங்கா கூறுகையில், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது எனக்கு முதலாவது அரையிறுதி. முர்ரேவை நேர் செட்களில் தோற்கச் செய்ததால், நான் நன்றாகவே விளையாடியுள்ளேன் என்று தெரிவித்தார். இந்த ஆண்டில், ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்ற முர்ரேவுக்கு, கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைகொடுக்கவில்லை. 146 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடியுள்ள முர்ரே, தற்போதுதான் நேர் செட்களில் தோல்வி அடைந்துள்ளார். வாவ்ரிங்கா-ஜோகோவிச்: ஆடவர் பிரிவின் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மிகைல் யோஷ்னியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச், அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு 14 முறை தொடர்ந்து முன்னேறியவர் என்ற பெருமையைப் பெற்றார் இவர், தனது அரையிறுதிச் சுற்றில் வாவ்ரிங்காவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். இவர்களிருவரும் இதுவரை 14 முறை மோதியுள்ளனர். அதில், ஜோகோவிச் 12 முறையும், வாவ்ரிங்கா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். ஜோகோவிச்சுடனான ஆட்டம் குறித்து வாவ்ரிங்கா கூறுகையில், "எங்கள் இருவரிடையேயான ஆட்டத்தில் ஜோகோவிச்சே ஆதிக்கம் செலுத்தியுள்ளார். ஆனால், ஹார்ட் கோட் மைதானத்தில் சிறப்பாக விளையாடி வருவதாக நான் உணர்கிறேன்' என்று தெரிவித்தார். சானியா ஜோடி தோல்வி: இப்போட்டியின் மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- சீனாவின் ùஸங் ஜீ ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி-டெல்லச்சுவா ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது. அமெரிக்க ஓபனில் பங்கேற்ற இந்திய வீரர்களில், பயஸ் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரிவில் நடப்புச் சாம்பியனாக இருந்த இத்தாலியின் சாரா எர்ரானி- ராபர்டா வின்சி ஜோடி 3-6, 1-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகளிடம் தோல்வியடைந்தது. ஆடவர் பிரிவில் அமெரிக்காவின் சகோதரர்கள் ஜோடி தோல்வியைத் தழுவினாலும், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் சகோதரிகள் ஜோடி வெற்றி பெற்றுள்ளது, அமெரிக்க ரசிகர்களுக்கு ஆறுதலை அதிர்ச்சி யளித்துள்ளது. ஆடவர் பிரிவு அரையிறுதி போட்டிகள் ரிச்சர்டு கேஸ்கியூ (பிரான்ஸ், 8) - ரஃபேல் நடால் (ஸ்பெயின், 2) நோவக் ஜோகோவிச் (செர்பியா,1) - ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா (ஸ்விட்சர்லாந்து, 9) அடைப்புக் குறிக்குள் (நாடு, போட்டித் தரவரிசை