Tuesday, September 20, 2011

நிர்வாண அழகிகள்







வனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்பிடிப்பாளர் ஒருவர் உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளõர்.

லேனெட் நியூவெல்க் எனும் பெயருடைய இந்த பெண் படப்பிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள சாகசமான புகைப்படங்களில் நிர்வாணக் கோலத்தில் உடல்முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் இந்த மொடல் அழகிகள் வரிக் குதிரைகளாவும் யானைகளாகவும் வாலில்லாக் குரங்குகளாகவும் சிறுத்தைகளாகவும் காட்சியளிக்கின்றனர்.

சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த லென்னெட் கால்நடை வைத்தியராக இருந்து சிகிச்சையளித்த அந்த விலங்குகளில் ஒன்றாக தான் வரவேண்டுமென பிள்ளைப் பராயத்தில் அவாவுற்றிருந்தாராம். அன்ரி ஹியூமன் என அழைக்கப்படும் இப்புகைப்படத் தொகுப்பை அவர் லொஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநகரங்களில் எடுத்திருந்தாராம் வரிக்குதிரையொன்றுக்கு அடுத்தாற்போல் கறுப்பு வெள்ளை வர்ணங்களை தனது மேனியை மறைத்துக் கொண்டிருக்கும் மொடல் அழகி ஜஸ்மினாவின் புகைப்படம் காண்போரைக் கவரும் அவரது புகைப்படங்களில் ஒன்றாகக் காட்சியளிக்கிறது.

இன்னுமொரு படத்தில் மற்றொரு மொடல் அழகியான கேலா நரைவெள்ளை மற்றும் பழுப்பு நிற வர்ணத்தை தனது உடலின் மத்திய பாகத்தில் பூசியநிலையில் பென்னெட்டின் அருகில் சுசி எனப்படும் ஆபிரிக்க யானையின் நகல் வடிவத்தில் தோற்றமளிக்கின்றார். அழகி ஜஸ்மினா பன்னிரெண்டு அடி நீளமான டெய்சி என அழைக்கப்படும் மலைப்பாம்பு தன்னுடலைச்சுற்றிய நிலையில் பாம்புத்தோல் வர்ணத்தில் காணப்படும் படமே இத்தொகுப்பின் இறுதிப்படமாகும். அத்துடன் அவர் கறுப்பு புள்ளிகளுடனான பழுப்பு நிறவர்ணத்தில் தன்னுடலை மறைத்தவாறு ராங்கோ எனப்படும் அழகான சிறுத்தைக்குப் பின்னால் அமர்ந்திருப்பது போன்ற இன்னுமொரு படத்திலும் தோற்றமளிக்கின்றார்.

Sunday, September 18, 2011

டயானாவை மிஞ்சிய கதே

என்ன ஒரு வேறுபாட்டை தலைமுறை ஒன்று செய்து விடுகின்றது. ஆமாம்! கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சாதனை படைக்கத்தக்க வகையில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விஜயம் செய்திருந்த பெரும் எண்ணிக்கையானோரை கேம்பிரிட்ஜ் சீமாட்டியான கேட் மிடில்டனின் திருமண ஆடை கவர்ந்திழுத்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை கால முடிவின்÷ பாது சாரா பேர்ட்டன்/ அலெக்சாண்டர் மக்குயீனின் வடிவமைப்பில் உருவான சீமாட்டி கேட் மிடில்டனின் இந்தத் திருமண ஆடையானது எட்டு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் அரண்மனை புதுப்பித்தல் வேலைகளுக்கும் சீமாட்டி கேட்மிடில்டனின் ஆதரவற்றோருக்கான தரும ஸ்தாபன நிதியத்திற்கும் நிச்சயமாக வழங்கி அள்ளிக் கொடுத்து இருந்திருக்கும்.
இந்த வெற்றிகரமான கதையை காலஞ்சென்ற இளவரசி டயானாவின் திருமண ஆடையுடன் ஒப்பிடுதல் என்பது புரிந்து கொள்ளலாம். ஆமாம்! கடந்த 1981 ஜூலையில் சென். போல் தேவாலயத்தில் நடைபெற்றிருந்த இளவரசர் சாள்ஸ் இளரவசி டயானா திருமணத்தின் போது டேவிட் மற்றும் எலிஸபெத் இம்மானுவல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டிருந்த டயானாவின் மணப் பெண் ஆடையிலேயே அங்கு குழுமியிருந்த மில்லியன் கணக்கானோரின் கண்கள் மொய்த்திருந்தன. அத்தகைய சிறப்பு வாய்ந்த அவரின் திருமண ஆடைக்கு இப்போது நிகழ்ந்துள்ள கதி பற்றி என்னவென்று சொல்வது? முன்னொரு காலத்தில் பளிங்குச் சிலையென அனைவராலும் போற்றப்பட்ட இளவரசி டயானா இளவரசியான நிலையில் அணிந்திருந்த அந்த திருமண ஆடை தற்போது கண்ட கண்ட இடமெல்லாம் உலகம் முழுவதும் பணம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மலினப்படுத்தப்பட்டு மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றதாம். வரலாறு படைத்த டயானாவின் திருமண உடை மலிவான ஒரு பொருளாக கடந்த ஏழு வருடங்களாக உலக வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த வருடத்தில் மட்டும் கன்சாஸ் நகரின் புகையிரத நிலையத்திலும் மிக்சிக்கனின் கிராண்ட் ரபிட்ஸில் உள்ள அரும்பொருட் காட்சியகத்திலும் ஏற்கனவே அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இன்று தொடக்கம் அவரது திருமண ஆடை கெனக்ரிகட்டின் மாஷான்ரக்கெட்டில் உள்ள கசினோ கட்டிடத் தொகுதியில் அவரது வாழ்க்கையுடன் தொடர்புபட்ட 150 அம்சங்களுடன் காட்சிப்படுத்தப்படவுள்ளதாம். இருபத்தைந்து அடி நீளமான செரினி பட்டாலான அந்த மணப் பெண் ஆடை இங்கிலாந்தின் மரியாதைக்குரிய ஒன்றாக ஒரு காலத்தில் மதிக்கப்பட்டிருந்தது. இதனை தற்போது வைத்திருக்கும் டயானாவின் சகோதரர் சாகில்ஸ் ஸ்பென்சர் இதனைப் பற்றி அலட்டிக் கொள்ளாதவர் போல காணப்படுகிறார்.
மெட்ரோநியூஸ்

கல்லூரிகளில் செக்ஸ், காதல் கட்டாயபாடம்


சீனாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் இந்த மாதம் முதல்செக்ஸ் மற்றும் காதல் பாடங்களை உள்ளடக்கிய உளவியல் படிப்பு கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.
சீனாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் இந்த மாதம் முதல் செக்ஸ் மற்றும் காதல் பாடங்களைக் கொண்ட உளவியல் படிப்பு கட்டாயப் பாடமாகிறது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் மனநலம் குறித்த பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே உளவியல் ரீதியான அறிவுரைகளைப் பெறும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் தான் உளவியல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாடத்தில் 7 பிரிவுகள் உள்ளன. மன அழுத்தம், வாழ்கையில் ஏற்படும் விரக்தியை எவ்வாறு எதிர்கொண்டு மீள்வது என்பது பற்றியும், செக்ஸ், காதல் பற்றியும் இந்த பாடத்தில் உள்ளது என்றார்.
இந்த பாடத்தை கட்டாயமாக்கியதற்கு சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உளவியல் பாடம் சுத்த போர் என்று பீகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் வாங் கேபெய் தெரிவித்துள்ளார். ஹீ பாங் என்ற மாணவரும் இதே கருத்தைத் தான் தெரிவித்துள்ளார். கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் அறிவாற்றல் கல்லூரியின் துணை டீன் சாங் பியாஓ கூறுகையில், இந்த உளவியல் பாடம் நடுநிலை மற்றும் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். நடுநிலைப் பள்ளியில் இருந்து செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும். அது தான் செக்ஸ் கல்வி படிக்க உகந்த பருவம் என்றார்.

Wednesday, September 14, 2011

9/11 தாக்குதலின்போதுமக்களைக் காப்பாற்றிய நாய்கள்




2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தகமையம் மற்றும் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மீதான விமானத் தாக்குதலின் போது, சுமார் 3000 பேர் கொல்லப்பட்டிருந்த அ@த வேளையில், அந்த இடிபாடுகளுக்குள் அகப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தோரை மூலை மூடுக்கெல்லாம் தேடிக் கண்டு பிடிப்பதில் சுமார் 100 உயிர் காக்கும் மோப்ப நாய்களும், அவற்றின் உரிமையாளர்களும் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
பத்து வருடங்கள் கழிந்த நிலையில், அவற்றில் பன்னிரண்டு நாய்கள் உயிர்பிழைத்திருப்பதாக அறியப்படுகின்றது. அவற்றின் புகழ்பாடும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டவர்கள் எனும் தலைப்பிலான நூலொன்றில் அவர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர். அந்தக் கொடூர நிகழ்வு வேளையில் அவசர கால சேவையில் ஈடுபட்ட பணியாளர்களுடனும், பொது மக்களுடனும் இணைந்து இந்த மோப்ப நாய்களும் இடிபாடுகளுக்கும் சிக்கித் தவித்தோரை மீட்பதில் அரும்பாடுபட்டனவாம்.
டெக்ஸாஸ் தொடக்கம் @மரிலாந்து வரையிலான ஒன்பது மாநிலங்களில் பிரயாணம் செய்து முப்பத்தி நான்கு வயதான சார்லொட் டுமாஸ் எனும் பெண்மணி எஞ்சியுள்ள இந்த மோப்ப நாய்களைக் கடந்த பத்து வருடங்களாக அவை வசித்து வரும் வீடுகளில் வைத்து கைப்பற்றினாராம்.
விலங்கினங்களை, குறிப்பாக நாய்களை ஓவியங்களாக தீட்டும் வலல்லமை பெற்றுவரென அனைவராலும் அறியப்படும் சார்லெட், செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு மட்டுமின்றி, அனர்த்தத்தின் போது அகப்பட்டோரைக் காப்பாற்றவென அவசர உதவிபுரிந்த அந்த மனிதர்களையும், அவர்களின் நாய்களையும் கௌரவிப்பதற்குமாகவே இந்த நூலை வெளியிட்டதாகக் கூறப்படுகின்றது. பிறர் நிலைக்குள்ளாகும் உணர்வை இந்த நாய்கள் எமக்குள் ஏற்படுத்துவதால் அவை வித்தியாசமான பிராணிகளாக எம்முடன் பேசுவதுடன், முக்கிய நண்பர்களாகவும் விளங்குகின்றன என்று சார்லெட் கூறுகின்றார். அமெரிக்கா மீதான இந்தாக்குதலில் பத்தாவது ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில், நாளை நியூயோர்க் நகரில் ஜூலி சோல் கலரி ஓவியக் கண்காட்சியில் சார்லெட்டின் கைவண்ணங்களும் அலங்கரிக்கவுள்ளன வாம் இந்த ஓவியங்கள் காலம் எப்படி நகர்கின்றது. அனர்த்த வேளைகளில் நாய்கள் எவ்வாறு எமக்கு உதவுகின்றன என்பதைச் சித்தரிப்பதாகக் கூறிய சார்லெட் உயிர் பிழைத்த இறுதி 15 நாய்களில் மூன்று இறந்து விட்டதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.
மெட்ரோநியூஸ்

Tuesday, September 13, 2011

மூன்று அழகிகள் வெளி@யற்றம்


காண்போரைக் கவர்ந்திழுக்கத் தூண்டும் வகையில் புகைப்படங்களுக்குப் "போஸ்" கொடுத்திருந்த மூன்று இத்தாலிய மொடல் அழகிகள், இந்த வருடத்திற்கான இத்தாலிய அழகுராணிப் போட்டியிலிருநது நீக்கப்பட்டுள்ளனர்.

இளஞ்சிவப்பு நிறத்திலான இரவில் அணியும் ஆடையொன்றுடன் கவர்ந்திழுக்கத் தூண்டும் வகையில் புகைப்படங்களில் தோன்றிய அலிஸ் பெலோட்டோ எனும் 22 வயதான மொடல் அழகியே நடுவர்களால் முதன்முதலில் வெளியேற்றப்பட்டவராவார். இவர் இத்தாலியில் உள்ள வெனெட்டோ பிரதேசப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அடுத்து தலைநகர் ரோமிலிருந்து கலந்துகொள்ள வந்திருந்த 23 வயதான கேவி இத்தாலி அழகுராணியான ரயேல்லா மொடுங்கோ, தோலிலான மெத்தை ஒன்றில் சாய்ந்தபடி குறிப்பை உணர்த்தும் வகையில் பட்டாலான உள்ளாடையுடன் தோன்றும் புகைப்படத்தைச் சல்லடைபோட்டு ஆராய்ந்து நடுவர்களின் கண்களில் பட்டதனால், அவரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.
சிவப்பு அட்டை காட்டப்பட்ட மூன்றாவது மொடல் அழகியாக, ஜெ@னாவைச் ‹ழவுள்ள லிகுரியா அழகுராணியான 26 வயதான ரியானா பியேர்ஜியானியானார். அவர் தனது திறந்த மார்பகங்களுடன் புகைப்படங்களிலும் காணொளிகளிலும் தோன்றியிருந்ததைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் இணையத்தில் கண்டுபிடித்தமையால் அடுத்தவாரம் ரஸ்கனியில் உள்ள மொன்டிகடினி ரேமில் நடைபெறவுள்ள இத்தாலியஅழகுராணிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியின் பேச்சாளரொருவர் இது பற்றி கூறுகையில்,
போட்டியாளரும் ஆபாசமான முறையில் முன்னர் "போஸ்" கொடுத்திருந்தார், அவர் போட்டியிலிருந்து நீக்கப்படவேண்டுமென எட்டாம் இலக்க போட்டி விதி கூறுவதாகத் தெரிவித்தார். இதற்கு முன்னரும் இத்தகையோர் நீக்கப்பட்டிருந்தனர், ஒரே போட்டியில் மூவர் நீக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை என பின் அரங்கு வட்டாரமொன்று கூறியுள்ளது.
நீண்டகாலமாக நடைபெற்றுவரும் போட்டிகளில் ஒன்றெனக் கூறப்படும் இந்த இத்தாலிய அழகுராணிப் போட்டியில் பிரபல இத்தாலிய திரைப்பட நடிகைகளான சோபியா லோறன் மற்றும் கினா லொல்லோபிறிகிடா உள்ளிட்ட பல அழகிகள் கலந்து கொண்டதுடன், இப்போட்டி 1939இல் ஆரம்பமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


மெட்ரோநியூஸ்

MISS UNIVERSE போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற இலங்கை அழகுராணி





வருடத்திற்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வரும் அழகு ராணிப் போட்டியில் அந்தந்த நாட்டு அழகுராணிகள் தங்கள் நாடுகளின் நல்லெண்ண தூதுவர்களாக செயற்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அந்த வரிசையில் எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி பிரேசிலில் நடைபெறவுள்ள உலக அழகுராணிப் போட்டியில் பங்கேற்பதற்கென அழகிகள் படையொன்று பிரேசில் போய்ச் சேர்ந்துள்ளது. எமது நாட்டைப் பிரதிநிதித்துப்படுத்தும் அழகுராணி கடந்த ஜூலை 11ஆம் திகதி தெரிவாகியிருந்தமை தெரிந்ததேஉலக அழகுராணி என்ற கிரீடத்தை அணிந்திட இதுவரை இலங்கை அழகுராணிகள் எவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆயினும் இலங்கையின் முன்னாள் அழகுராணி ஒருவர் உலக அழகுராணிப் போட்டியொன்றில்
மூன்றாமிடத்தைப் பெற்றார்
ஆமாம் அந்த அழகு தேவதை வேறு யாருமல்ல. 1955ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையின் முன்னாள் அழகுராணியான மொரின் நெலியா ஹிங்கேட் தான். 1937 ஜனவரி 9ஆம் திகதி டச்”க்கார தந்தையான லயனல் ஹிங்கேட்டுக்கும் சேனநாயக மாபெல் டீ
ரன்ணுக்கும் மகளாகப் பிறந்த மொரீன் நெலீயா மொடல் அழகியாகவும் நடன மங்கையாகவும் நடிகையாகவும் விளங்கியதுடன் 1954 இல் இலங்கையின்
அழகு ராணியாக முடி சூடப்பட்டு 1955இல்உலக அழகுராணிப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அந்தப் பரபரப்பான போட்டியில் மொரீன் நெலியா ஹிங்கேட் மூன்றாம் இடத்தைப் பெற்றார் அதே வேளை ஹொன்டுராஸ் அழகுராணியான பஸ்டோரா பாகன் வாலன்சுயெலா இரண்டாம் இடத்தைப்
பிடித்தார்.உலக அழகுராணிப் போட்டியில் மொரீன் நெலீயா கலந்து கொண்டு மூன்றாமிடத்தை தனதாக்கிக்கொண்டதை அடுத்து யூனிவேர்ஸில் இன்டர் நாஷனல் ஸ்ரூடியோவில் 20 சென்சூரி பொக்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்கள் அவருடன் நடிப்பு ஒப்பந்தங்கள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்

Monday, September 12, 2011

தற்கொலை விமானத்தைத்தேடிய விமானி


உலக வர்த்தக மையம் ஒரு விமானத்தால் தாக்கப்பட்டதாக ஒரு விமான மோட்டிகள் வாசிங்டனில் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டபோது ஒரு பயிற்சியில்லாத விமான மோட்டியில் செயல் என அவர்கள் நம்பினார்கள். ஆனால் 9/11 தாக்குதலின் உண்மை நிலை தெரியவந்தபோது இனி தாங்கள்தான் நடவடிக்கையில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என உணர்ந்து கொண்டார்கள்.
அதில் ஒருவர் 20 வயது மதிக்கத்தக்க அழகிய தலைமயிரையுடைய பெண். அவரின் தகப்பனாரும் வியற்ணாம் யுத்தத்தில் பெருமை பெற்ற ஒரு விமானமோட்டி.
உலகின் பிரபல்யம் பெற்ற ஒரு விமான நிறுவனம்தான்'' "LOCKHEEDMARTIV" F35 ரக விமான திட்டத்தில் இந் நிறுவனத்தின் பணிப்பாளராக தற்போது தொழில்புரியும் இவர் பககு நேர விமானமோட்டியாகவும் வேலை செய்வதால் தனது விமான மோட்டும் தொழிலை மறக்கவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு விமானத் தாக்குதல் துறையில் பெண்களும் பங்குபற்றலாமென அறிவிக்கப்பட்ட போது யுத்த விமானியாகமுதலாவதாக பதவி செய்யப்பட்டவர் இவர்தான். செப்டம்பர் 11 ஆம்திகதியும் இவரே ஒரு வாசிங்கடனை நோக்கி கடத்தப்பட்ட விமானம் சம்பந்தமாக முதலாவதாக சம்பந்தப்பட்டிருந்தார்.
இவருக்கு வழங்கப்பட்ட கட்டளை: FILIFHT 93 கண்டு பிடித்து எப்படியாவது அவ்விமானத்தை அழிக்கவேண்டுமென்பது தான். அதனால் விமானத்திலோ ஏவுகøணகளில்லை. பயிற்சி பணிகளில் ஈடுபட்ட இவ் விமானத்தில் பயிற்சிக்காக பாவிக்கப்படும் போதியான ஆயுதங்களே காணப்பட்டன. தனது கட்டளையை நிறைவேற்றுவதற்கு ஒரே வழிதான் தென்பட்டது.
அண்மையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ""விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு வழியில்லை. தான் வெடிபொருள் அணிந்த விமான மோட்டியாக மாறி அவ்விமானத்துடன் மோதுவதே ஒரே வழி என்று தெரிவித்திருந்தாராம். இந்த நிலையில் அன்×ஸ் விமான படைத் தளத்தில் குண்டுகளுடனோ ஏவுகணைகளுடனோ F16 விமானமொன்றும் இருக்கவில்லை. ஆயுதமேந்திய விமானத்தை பெறுவதற்கு குறைந்தது 1 மணி நேரமாவது செல்லும். நேரமோ கானாது.

குண்டு வீச்சு விமானங்கள் வாசிங்டனை பாதுகாப்பதற்கு தேவை. உடனடியாக அவை புறப்பட வேண்டும். நீர் என்னுடன் வருகிறீர்கள் என கேர்ணல் மார்ச் சசீவில்லி சத்தமிட்டார்.
அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகனில் தற்போது சசீவில்லி தொழிற்புரிகிறார். அவர் சொல்கிறார். ""பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு நாங்கள் பயிற்சியளிப்பதில்லை. இயந்திரத்தை சிறிது தள்ளிவிட்டால் பின்பு நாங்களாகவே இலக்கை நோக்கி செல்லலாம்.
விமானமோட்டியின் ஆசனம் [COCKPIT) அல்லது விமானத்தின் இறக்கையை நான் எண்ணினேன். பயணிகள் விமானத்தை தகர்ப்பதற்கு முன்னால் நான் குதித்து தப்பலாமென நினைத்து முடிவெடுத்தேன்.
ஆனால் செல்வி மெனி விமானியின் ஆசனத்திலிருந்து தப்பி குதிப்பதன் மூலம் இலக்கை தவற விட நேரிடும் எமது குறிக்கோளும் தோல்வியில் முடியும். தான் உயிர் தப்பினாலும் என்ன பயன் என நினைத்தாராம்.
செல்வி பென தன்னை சாஸ் என கூறிக் கொள்பவராம். தான் விமானிகளின் ஆசனப் பகுதியை எடுப்பதாகவும் பெனி விமானத்தின் வால் பகுதியை எடுக்கவும் யோசித்தனர்.
இருவரும் 400 மைல் வேகத்தில் விமானங்களில் புறப்பட்டு சேதமடைந்த பென்டகனை மேல் தாழ்வாக பறந்து வானத்தை தேடிப் பார்த்தனர். பல மணி நேரத்தின் பின் தான் "UNITED 93" விமானம் பென்சில் வேனியா நகருக்கு வெளியே வீழ்ந்ததாக கேள்விப்பட்டனர். அத்துடன் அவர்களின் பணி முடிந்துவிடவில்லை. அன்று முழுவதும் ஆபத்தில் தனது பொழுதை கழித்த பெனி ஜனாதிபதி தனது விமானமான "AIR FOCEONE" பயணம் செய்தபோது வானத்தை பாதுகாத்து அவனுக்கு பாதுகாப்ப வழங்கினார்.
இந்த நடவடிக்கையின் பின் செல்வி பெனி "MAJOR" தரத்துக்கு பதவி உயர்வு பெற்று இருமுறை ஈராக்கிலும் சேவை புரிந்துள்ளார். 2 பிள்ளைகளின் தாயான இவர் 9/11 தக்குதலுக்கு இறுதியான தியாகத்தை செய்திருக்கவில்லை. துணிச்சல் மிக்க பயணிகளும் குழுவே செயலில் ஈடுபட்டது.
FLIGHT 93 ல் பயணித்த பயணிகளே உண்மையாக தியாகம் செய்வதற்கு தீர்மானித்தவர்களாவர்.சரித்திரத்தை எழுதுவதற்கு தற்செயலாக அகப்பட்ட ஒரு சாட்சிதான் நான் என்ற சொல்கிறார் பெனி.
மெட்ரோநியூஸ்

Wednesday, September 7, 2011

மார்லினாகவிரும்பும் நடிகை



சூசான் பேர்னுடிசின் புதிய புத்தகமான மார்லின்Intimate Exposures எழுதிய முன்னுரையில் 25 வயதுடைய இவர் கவர்ச்சியானவரின் அதிர்ச்சிகளை பற்றி விவாதித்து தான் புகழ் பெற்றவராக வர விருப்ப வில்லையென தெரிவித்தார். அந்த இறுக்கமான றோஸ் நிற சட்டை அணிந்ததின் மூலம் அவர் அழகானவராக காணப்பட்டார் அவரின் கதாபாத்திரம் மிகவும் திறமையாகவும் கட்டுக்கடங்கியதாகவும் காணப்பட்டது. ஒரு பெண்ணுக்குரிய குணதிசயமாகவே அப்போது 12 வயதாக இருந்த எனக்கு விளங்கியது . மார்லின் ஆக வருவதற்கு எடுக்கப்பட்ட பிரமாதாமான மனித முயற்சி இது என ஹொலிவூட் படப்பிடிப்பாளர் பேர்னாட் அறிக்கை விட்டிருந்தõர்.

ஆனால் லோகன் தன்னை மன்றோருவரோடு ஒப்பிட்டு அத்துடன் நிறுத்தவில்லை. பெண்கள் மத்தியில் மத்திம தரத்தை கொண்டுள்ள .இவர் என்னை யார் என்பது பற்றி மக்கள் தமது மனங்களின் தீர்மானித்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

நானும் மாரிலின் மன்றோவும் ஒரு புகழ் பெற்றவர்களாக வர விரும்பவில்லை. ஒருவரின் மனதில் நெடுங் காலமாக நிலைத்து இருக்க வேண்டுமென்பதற்காகவே சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட திரைப்படங்கள் இப்போ இல்லை. மன்றோ அப்படி மற்றவர்களில் ஞாபகத்தில் இருக்க விரும்பினாலும் , நான் அப்படி இருக்க விரும்பவில்லை என லோகன் மேலும் கூறுகிறார்.
எனது திறமைக்காக மற்றவர் தன்னை ஞாபகத்தில் வைத்திருப்தையே நான் விரும்புகிறேன்.எனது சர்ச்சைக்குரிய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ஞாபகத்தை அல்ல என்றும் லின்ட்டுசே லோகன் மேலும் கூறுகிறார்.
தான் ஆரம்ப அறிவை கொண்டிறுக்கவில்லையென மார்லின் கூறினார். ஆனால் தான் அதை நோக்கி செல்வதாக அவர் கூறினார். நானும் அதையே செய்ய விரும்புகிறேன். நான் ஒரு சிறந்த நடிகை எனக்கு என்னிடத்தில் நம்பிக்கையுண்டு .மன்றோவின் நெடுங்காலமாகவே லின்டசே போற்றி வந்துள்ளார். அத்துடன் 2008 ல் மன்றோவின் Âß The Last Sitting திரைப்படம் நியூயார்க் சஞ்சிகையில் சித்தரிக்கப்பட்டது.

போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதின் காரணமாக மன்றோ1962 ம் இறந்து கிடக்க காணப்பட்டார்.
மெட்ரோநியூஸ்

Tuesday, September 6, 2011

புதியகணவருடன் கிம் கப்தாஷியன்


காதல் உணர்வில் கட்டுப்பட்ட நிலையில் அரியதொரு இராபோசன விருந்தின் பின்னர் இருபத்தாறு வயதுடைய தனது புதிய கணவருடன் பிரபல பாடகியான கிம் கர்தாஷியின் உல்லாசமாகப் பொழுதைக் கழித்தார்.

கலிபோர்னியாவில் உள்ள மொன்டிசிடோவில் கடந்த சனியன்று முப்பது வயதான பாடகி கிம் இருபத்தாறு வயதான முன்னாள் நியூ ஜேர்சி கூடைப்பந்தாட்ட வீரரான கிறிஸ் ஹம்பிறீ திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெற்ற பின்னர் தங்கள் தேனிலவை இயற்கை அழகை அள்ளிக் கொட்டும் இத்தாலியில் கழித்தனர்.

அப்போது தனது அன்புக் கணவர் மீது கிடந்தவாறு முத்தமழை பொழிந்திருந்த காட்சிகள் கமராவுக்குள் பதிவாகியிருந்தன. அதன் பின்னர் அமால்பி கோஸ்டில் அமைந்துள்ள அந்த ஆடம்பர சுற்றுலா விடுதியில் தங்களை மறந்த நிலையில் தனிமையில் பொழுது போக்கினராம். அங்கிருந்து அமெரிக்கா திரும்பிய இந்த புதுமணத் தம்பதியினர் நியூயோர்க்கில் நடைபெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டனர். கடந்த ஞாயிறன்று லொஸ் ஏஞ்செல்சில் நடைபெற்ற எம்.ரிவி வீடியோ இசை விருது வழங்கல் நிகழ்வில் விருந்தொன்றையும் பாடகி கிம் பெற்றுக்கொண்டார்.

எதிர்வரும் அக்டோபரில் E நெட்வேர்க் விசேட தொலைக்காட்சியில் ஒளிபரப்பவென அவர்களின் திருமணக் காட்சிகள் கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்டோபர் கெஸ்டஸ் (October Guests) எனும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை லின்ட்சே லோஹான் முன்னாள் குணீடிஞிஞு எடிணூடூண் நடிகை மெல் பி லொவட்டோ மற்றும் கீNஆ பாடகி சியாரா ஆகியோரின் விருப்பங்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. இத்திருமணக்காட்சியை பார்த்து ரசித்த விருந்தினர்களில் ஒருவர் அது பற்றி தெரிவிக்கையில் இதனைப் பார்த்த அனைவரும் தங்களை மெய் மறந்து ரசித்ததாகவும் இத்திருமணக் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கலை நிகழ்ச்சி போன்று இருந்ததாக குறிப்பிட்டார்
மெட்ரோநியூஸ்