Monday, April 25, 2011

வில்லியம் கதே திருமணக் கேக்தயாரிக்க இரண்டு மாதங்கள்



எவருமே சாப்பிட முடியாத அந்தக் கேக்கைத் தயாரிப்பதற்கு இரண்டு மாதங்கள் எடுத்ததாம். அப்படியானால், அந்தக் கேக் எதற்காக? என்று நீங்கள் கேட்கிறீர்களா?
ஆமாம்! இங்கிலாந்தின் மகாராணியின் பேரனும், இளவரசருமான வில்லியம் கதேமில்டனின் திருமணம் எதிர்வரும் 29 ஆம் திகதி கோலாகலமாக வெஸ்ட்மினிஸ்டர் அபே யில் நடைபெறுகிறதல் லவா! அதற்காகத் தான் இந்த கேக் தயாரிப்பாம்.
இந்த அதிசயக் கேக்கை தயாரித்து முடித்துள்ள அரச குடும்பத்து விசிறியான ஷெய்லா கார்ட்டர் நாளாந்தம் மூன்று மணி நேரம் செலவிட்டு, இதனை இரண்டு மாதங்களில் ஒருவாறு தயாரித்து முடித்துள்ளார். இதில் 100, 000 தையல் வேலைப்பாடுகள் பொறிக்கப்பட் டுள்ளடன், கையால் தைக்கப்பட்டுள்ள சுமார் 300 பூ வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளைப் பட்டு வடிவிலமைந்த சர்க்கரைப் பூசல்களும் (ஐசிங்) காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.
மூன்று அடுக்குகள் கொண்ட அந்த அற்புதமான கேக்கின் உச்சிப்பகுதியில் புதுமணத் தம்பதிகளான இளவரசர் வில்லியம் கதே மிடில்டனின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் ஈர்க்க வல்லதாக உள்ளதாம்.
ஓய்வு பெற்றுள்ள பழம் மற்றும் காய்கறி வகைகள் விற்பவரான திருமதி கார்ட்டர் நாளொன்றிற்கு மூன்று மணித்தியாலங்கள் வரை பொறுமை காத்து இந்தப் போலியான இனிப்புப் பண்டத்தைத் தயாரித்து முடித்துள்ளாராம்.
ஹான்ட்ஸில் சவுத்தம்டனைச் சேர்ந்த 74 வயதான அவர் இந்த அதிசயக் கேக் தயாரிப்பு பற்றி கூறுகையில், 400 மணித்தியாலங்கள் எடுத்த இந்த வேலைப்பாடு உண்மையில் அன்பின் மகத்துவம் பற்றியதாக அமைந்துள்ளதுடன் இதனைச் செய்து முடிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், இப்படியே வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் செய்து வந்ததால், சமைத்த உணவெதனையும் தன்னால் சாப்பிட முடியவில்லையென தனது கணவர் புலம்பிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நான் இங்கிலாந்தின் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவதால் குறிப்பாக டயானா உயிரோடு இருந்த கால கட்டத்தில் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியதாகவும், வில்லியமும், கதே மிடில்டன் தம்பதியரும் இனிதே தங்கள் இல்லற வாழ்வில் ஈடுபடுபவரென தாம் நம்புவதாகவும் கூறினார்.
எனது பேத்தி விளையாடுவதற்கென நான் இதற்கு முன்னமும் ஏராளமான இத்தகைய கேக்குகளை செய்துள்ளேன் என்றவர், என்றோ ஒருநாள் திருமணக் கேக் ஒன்றைத் தயாரிக்கும் சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்துக் காத்திருந்தாகவும் ஷெய்லா கூறினார்.
நான் இந்தக் கேக்கைத் தயாரிக்கும் போது, அதன் உச்சிப் பகுதியில் எவருடைய உருவத்தை அமைப்பதென்பதை நினைத்திருக்கவேயில்லை. வில்லியம் கதே திருமண நிச்சயதார்த்தம் நிறைவேறியபோது தான் அவர்களின் திருமண கேக்கைத் தயாரிக்கும் துணிவு தனக்குப் பிறந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி, தான் தனது ஏழு பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதற்கென அவர்களின் பிறந்த தினங்களில் அவ்வப்போது இத்தகைய அபூர்வமான கேக்குகளைத் தயாரித்து வழங்கியிருந்ததாகவும் திருமதி கார்ட்டர் கூறினார்.



மெட்ரோநியூஸ்22/04/11

Sunday, April 24, 2011

அழகிய டயானாவைபின்னுக்குத் தள்ளும் கதே


எதிர்வரும் 29ஆம் திகதி இளவரசர் வில்லியமை திருமணம் செய்யும் கதே
மிடில்டன்,
மூன்றாவது அழகிய இளவரசி என்ற சிறப்பு பெறுவார் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
பியூட்டிபுல் பீபிள்.கொம் என்னும் இணையத்தளம் 1 இலட்சத்து 27 ஆயிரம் பேரிடம் அழகான ராஜபரம்பரையினர் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் கதேக்கு ஆதரவாக 84 சதவீதத்தினரும், டயானாவுக்கு ஆதரவாக 82 சதவீதத்தினரும் வாக்களித்தனர்.
இந்த அழகிய கணக்கெடுப்பில் மொனாகோ இளவரசியும், ஒஸ்கார் விருது பெற்ற நடிகையுமான கிரேஸ் கெல்லி 91 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். 90 சதவீத வாக்குகளுடன் ஜோர்டான் ராணி ராணியா இரண்டாவது இடத்திலும், கதே மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதேபோன்று ராஜ குடும்பத்து ஆண்களில் அழகானவர்கள் பற்றி எடுத்த கணக்கெடுப்பில் இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியம்
4, 5 ஆகிய இடங்களைப் பிடித்தனர்.
அவர்களின் தந்தை இளவரசர் சார்லஸ் 10ஆவது இடத்தில் உள்ளார்.
கதே மற்றும்
வில்லியம் திருமணம் வரும் 29ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடக்கிறது. இவர்கள் திருமணத்தைப் பற்றித் தான் உலகமே பேசிக் கொண்டிருக்கிறது.

மெட்ரோநியூஸ்

கதே பிடிக்கும் கமிலா பிடிக்காது



விரைவில் இளவரசியாகவிருக்கும் கதே பிடிக்கும், ஆனால் இளவரசர் சார்ள்ஸின் இரண்டாவது மனைவி கமிலாவைப் பிடிக்காது என்று இங்கிலாந்து மக்கள் தெரிவித்ததாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
விரைவில் இளவரசர் வில்லிம்யஸை மணக்கவிருக்கும் கதே, மறைந்த இளவரசி டயானாவைப் போலவே இங்கிலாந்து மக்களிடையே பிரபலமாக இருக்கிறார் என்று வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள 2 ஆயிரத்து 500 பேரிடம் ராஜ குடும்பத்தினர் பற்றி கருத்துக் கேட்கப்பட்டது. இதில் டயானாவும் கதேயயும் சமமான வாக்குகளைப் பெற்றனர். இங்கிலாந்து ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் 81 சதவீதத்துடனும், அவரது பாட்டி மகாராணி எலிசபெத் 80 சதவீதத்துடனும் மக்களிடையே அதிக பிரபலமாக உள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற பாதிப்பேருக்கு இளவரசர் சார்ள்ஸ் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. மேலும், அவரது இரண்டாவது மனைவி கமிலாவைப் பிடிக்காது எனத் தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 10இல் 8 பேர் ராஜ திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும், டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை கதேக்கு வில்லியம்ஸ் அணிவித்தது மிகச் சரியே என்றும் தெரிவித்தனர்.திருமணத்திற்கு பிறகு கதே வேலைக்கு போகலாமா என்று கேட்டதற்கு 52 சதவீத இங்கிலாந்து மக்கள் தாரளமாகப் போகலாம் என்றனர். ஆனால், அமெரிக்கர்களோ கதே வேலைக்குப் போகாமல், ராஜ கடமைகளை மட்டும் செய்யட்டும் என்கின்றனர்.

மெட்ரோநியூஸ்

Thursday, April 21, 2011

இளவரசர் வில்லியம் கதே திருமண நினைவு முத்திரைகள்


இளவரசர் வில்லியம் கதே அரச திருமணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் றோயல் மெயில் (Royal Mail) புதிய முத்திரைகளை வெளியிட்டுள்ளது.
அரச தம்பதியினரின் உத்தியோகபூர்வ திருமண நிச்சயதார்த்த வைபவத்தின்போது பிரபல புகைப்படக் கலைஞரான மைரோ டெஸ்டினோ
(Mairo Testino) வினால் எடுக்கப்பட்ட உருவப்படங்களையே இந்த முத்திரைகள் கொண்டு விளங்குகின்றனவாம். அவரின் கைவண்ண தொழில் நுட்பத்தில் உருவான தம்பதிகளின் படமானது முதற் தர 1.10 பவுண் பெறுமதியான முத்திரையாகப் போகிறதாம். இந்த முத்திரைகள் யாவும் இரண்டாம் எலிஸபெத் மகாராணியாரின் பிறந்த தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள.
அரச தம்பதியினரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திருமண ஞாபகார்த்த முத்திரை வெளியீடானது மகாராணியின் பேரப்பிள்ளைகளின் ஒருவரின் திருமணத்தைக் குறித்த முதலாவது நிகழ்வாகும்.றோயல் மெயில் பணிப்பாளர் ஸ்ரீபன் அகார் இது பற்றி விபரிக்கையில்,இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்திரை வெளியீட்டை நடாத்துவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவதுடன் இந்த முத்திரைகள் இங்கிலாந்தில் மட்டுமின்றி உலகம் பூராவும் பிரபல்யம் பெற்று விளங்குமென நம்புகிறோம்'' எனக் கூறியுள்ளார்.அதே சமயம் இளவரசர் வில்லியம்இதற்கு முன்னரும் இரு தடவைகள் கீணிதூச்டூ Mச்டிடூ இன் முத்திரைகளில் தனது முகத்தைக் காட்டியுள்ளார். அதாவது மகாராணியின் தாயாரின் 100 ஆவது பிறந்த தின (ஆகஸ்ட் 4, 2000) முத்திரையிலும் கடந்த 2003 இல் நடந்த தனது 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்திரையிலும் அவர் தோன்றியுள்ளார். இப்புதிய முத்திரைகள் இரண்டு முதல் வகுப்பு முத்திரைகளாகவும் இரண்டு 1.10 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியõன முத்திரைகளாகவும் உள்ளமை கவனிக்கத்தக்கது. நேற்று 21 ஆம் திகதி முதல் இப்புதிய முத்திரைகள் தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளதுடன், இவற்றுக்கான கட்டணங்கள் கடந்த ஏழாம் திகதி முதல் றோயல் மெயிலின் இணையத்தளம் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.அத்துடன் 1981 இல் நடந்த இளவரசர் வில்லியமின் பெற்றோராகிய இளவரசர் சாள்ஸ் இளவரசி டயானா திருமணத்தின் போதும் இத்தகைய திருமண நினைவு முத்திரைகளை றோயல் மெயில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.உலகம் பூராவும் அஞ்சலாக்கப்படும் 20 கிராம் எடை வரையான அனைத்து கடிதங்கள் அட்டைகளுக்கும் இப்புதிய 1.10 பவுண் பெறுமதியான முத்திரைகள் பாவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெட்ரோநியூஸ்22/04/11

இளவரசர் வில்லியம் கதேஉருவங்கள் பொறித்த துவாய்கள் விற்பனை


இம்மாதம் 29 ஆம் திகதியன்று திருமணப் பந்தத்தில் இணையவுள்ள இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம் மற்றும் மணப்பெண்ணான கதே ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய ஞாபகார்த்த தேநீர் துவாலைகளை (துவாய்களை) விற்பனை செய்வது தடை செய்யப்பட வேண்டுமென அரண்மனைப் பொறுப்பதிகாரியான சாம்பெஸை ஏர்ஸ் பீல் கடந்த வருடம் குறிப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
ஆயினும் நேற்று முன்தினம் பல்மோரலில் உள்ள அன்பளிப்புப் பொருள் விற்பனைக் கடை யில் அத்தகைய இரண்டு விற்பனைப் பொருட்களைக் கண்டு அனைவரும் திகைப்படைந்தனராம். அரச உரிமைப் பொருட்களான பருத்தித் துணியிலான 6 ஸ்ரேலிங்பவுண் பெறுமதியான அந்தத் துவாய்கள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட போதிலும் சீனாவில் தயாரிக்கப்பட்டிருந்தன.
அவற்றில் ஒன்று, ஆடம்பரமான முறையில் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கலவையில் இளவரசர் வில்லியமும்கதேயும் புன்னகை பூத்தபடி காணப்படுவதாக அமைந்துள்ளது.
மற்றைய ஒன்றில் மணப் பெண் கதே தொப்பி ஒன்றை அணிந்த வண்ணம் குதிக்கால் உயர்ந்த பாதணிகளுடனும் மற்றும் குட்டைப் பாவாடையுடன் செந்நிற தொலைபேசிக் கூண்டொன்றைப் பின்னணியாகக் கொண்டு காணப்படுகிறாராம்.
இந்த சுவாரஸ்யமான விற்பனையின்போது அரச ஆடைத்தொகுப்பின் ஓர் அங்கமான உத்தியோகபூர்வ தேநீர் துவாயை ஒன்று 7.95 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது. வில்லியம் கதே தோன்றும் அந்த நீல வெள்ளை வர்ணக் கலவையுள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட துணியில் வில்லியம்கதே இருவரினதும் முதலெழுத்துக்களான ஙி மற்றும் இ யுடன் சிறியதொரு கிரீடமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று துவாய்களையும் 'க்டூண்tஞுணூ ஙிஞுச்திஞுணூண்' நிறுவனம் மாட்சிமை தாங்கிய மகாராணியின் அனுமதியுடன் விநியோகித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்21/04/11

செல்வி கதேயின் இரவு


இளவரசர் வில்லியமை மணமுடிக்கவுள்ள கதே மிடில்டன் ஒரு தனிப்பெண்ணாக தனது கடைசி இரவைக் கழிக்கவுள்ள ஹோட்டல் அறை இது தான்.
மத்திய லண்டனில் உள்ள கோரிங் ஹோட்டலில் உள்ள இந்த மிகவும் ஆடம்பரமான அடுக்குஅறையை தனிப்பெண்ணாகத் தனது கடைசி இரவைக் கழிப்பதற்கு மிடில்டன் தெரிவு செய்துள்ளார்.
இதற்கென இந்த ஹோட்டல் 150000 பவுண் செலவில் மெருகூட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் மேல் மாடியில் இந்த அறை அமைந்துள்ளது.
இளவரசர் வில்லியமுடனான திருமண தினத்துக்கு முந்திய இரவு மிடில்டன் இங்கு தங்கியிருப்பார். இந்த ஹோட்டல் அறையானது பாரம்பரியமும் நவீனமும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு அறையாகும்.
இது ஐந்து அறைகளின் விசாலத்தை ஒன்றிணைத்த ஒரு பகுதியாகும். இங்குள்ள மலசல கூட உபகரணங்கள் 19ஆம் நூற்றாண்டு முதல் இந்தத் துறையில் தலைசிறந்த வடிவமைப்பாளர்களாகத் திகழும் தோமஸ் கிரப்பர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அசல் "வெனரபல்' ரக உற்பத்திகளாகும். உலகில் பல அரச குடும்ப மாளிகைகளில் இந்த வகை மலசல கூட உபகரணங்களே பாவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோல், பெறுமதி மிக்க ஓவியங்கள் பலவும் இந்த அறையை அலங்கரிக்கின்றன. விக்டோரியா மகாராணி தனது திருமணத்தின்போது அணிந்திருந்தது போன்ற ஒரு மாதிரி ஆடை இந்த அறையின் ஆடைகள் வைப்பதற்கான அலுமாரியை இன்னமும் அலங்கரிக்கின்றது.
இங்குள்ள குளியல் அறையிலும் நீர்த் தாக்கம் ஏற்படுத்தாத தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. கதே மிடில்டன் தனது தாய், சகோதரி, மற்றும் பிரதான மணப்பெண் தோழி ஆகியோருடன் இங்கு தங்கவுள்ளார்.
ஒரு இரவுக்கான கட்டணம் 5000 பவுண்களாகும். மிடில்டன் குறிப்பிட்ட இந்தத் தினத்தில் தங்குவதற்கு பேர்கிங்ஹோம் அரண்மனைக்கு அருகில் அவருக்கு ஒரு இணைப்பு இல்லம் வழங்கப்பட்டது.
ஆனாலும், அதை ஏற்காமல் திருமணத்துக்கு முன் பொதுவான ஒரு இடத்தில் தங்க வேண்டும் என முடிவு செய்து இந்த ஹோட்டலைத் தெரிவு செய்துள்ளார்.
மெட்ரோநியூஸ்20/04/11

Sunday, April 10, 2011

செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து!

அதிகமாக காபி குடிப்பவர்கள், அடிக்கடி மது அருந்துபவர்கள், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி- உங்களுக்கு மாரடைப்பு வரலாமாம்.


மாரடைப்பு வருவதற்கான காரணிகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கிட்டத்தட்ட38 காரணிகள் குறித்து ஆராய்ந்தனர். இதில் எது, மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைகிறது என்பதே இந்த ஆய்வின் நோக்கம்.

இந்த ஆய்விலிருந்து, காபி, செக்ஸ் மற்றும் மது ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

பிற காரணிகளை விட மது, செக்ஸ்,காபி ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைவதாக வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், காற்று மாசும் மாரடைப்பு ஏற்பட ஒரு முக்கிய காரணமாக உள்ளதாம். புகை பிடித்தல் பழக்கமும் கூட மாரடைப்புக்கு வித்திடுமாம். அதேசமயம், செக்ஸ், காபி மற்றும் மது ஆகியவைதான் மிக முக்கிய காரணிகளாக உள்ளன.

அதிக அளவில் காபி சாப்பிடுவோருக்கும், அடிக்கடி மது அருந்துவோருக்கும், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மாரடைப்பு ஏற்பட பிற காரணிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுபவை, போக்குவரத்து நெரிசல், போதை மருந்துகள் உள்ளிட்டவை. இதில் போதை மருந்துகளை விட காற்று மாசுதான் மிக அபாயகரமானவை என்றும் வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்