Monday, April 25, 2011

வில்லியம் கதே திருமணக் கேக்தயாரிக்க இரண்டு மாதங்கள்எவருமே சாப்பிட முடியாத அந்தக் கேக்கைத் தயாரிப்பதற்கு இரண்டு மாதங்கள் எடுத்ததாம். அப்படியானால், அந்தக் கேக் எதற்காக? என்று நீங்கள் கேட்கிறீர்களா?
ஆமாம்! இங்கிலாந்தின் மகாராணியின் பேரனும், இளவரசருமான வில்லியம் கதேமில்டனின் திருமணம் எதிர்வரும் 29 ஆம் திகதி கோலாகலமாக வெஸ்ட்மினிஸ்டர் அபே யில் நடைபெறுகிறதல் லவா! அதற்காகத் தான் இந்த கேக் தயாரிப்பாம்.
இந்த அதிசயக் கேக்கை தயாரித்து முடித்துள்ள அரச குடும்பத்து விசிறியான ஷெய்லா கார்ட்டர் நாளாந்தம் மூன்று மணி நேரம் செலவிட்டு, இதனை இரண்டு மாதங்களில் ஒருவாறு தயாரித்து முடித்துள்ளார். இதில் 100, 000 தையல் வேலைப்பாடுகள் பொறிக்கப்பட் டுள்ளடன், கையால் தைக்கப்பட்டுள்ள சுமார் 300 பூ வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளைப் பட்டு வடிவிலமைந்த சர்க்கரைப் பூசல்களும் (ஐசிங்) காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.
மூன்று அடுக்குகள் கொண்ட அந்த அற்புதமான கேக்கின் உச்சிப்பகுதியில் புதுமணத் தம்பதிகளான இளவரசர் வில்லியம் கதே மிடில்டனின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் ஈர்க்க வல்லதாக உள்ளதாம்.
ஓய்வு பெற்றுள்ள பழம் மற்றும் காய்கறி வகைகள் விற்பவரான திருமதி கார்ட்டர் நாளொன்றிற்கு மூன்று மணித்தியாலங்கள் வரை பொறுமை காத்து இந்தப் போலியான இனிப்புப் பண்டத்தைத் தயாரித்து முடித்துள்ளாராம்.
ஹான்ட்ஸில் சவுத்தம்டனைச் சேர்ந்த 74 வயதான அவர் இந்த அதிசயக் கேக் தயாரிப்பு பற்றி கூறுகையில், 400 மணித்தியாலங்கள் எடுத்த இந்த வேலைப்பாடு உண்மையில் அன்பின் மகத்துவம் பற்றியதாக அமைந்துள்ளதுடன் இதனைச் செய்து முடிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், இப்படியே வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் செய்து வந்ததால், சமைத்த உணவெதனையும் தன்னால் சாப்பிட முடியவில்லையென தனது கணவர் புலம்பிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நான் இங்கிலாந்தின் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவதால் குறிப்பாக டயானா உயிரோடு இருந்த கால கட்டத்தில் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியதாகவும், வில்லியமும், கதே மிடில்டன் தம்பதியரும் இனிதே தங்கள் இல்லற வாழ்வில் ஈடுபடுபவரென தாம் நம்புவதாகவும் கூறினார்.
எனது பேத்தி விளையாடுவதற்கென நான் இதற்கு முன்னமும் ஏராளமான இத்தகைய கேக்குகளை செய்துள்ளேன் என்றவர், என்றோ ஒருநாள் திருமணக் கேக் ஒன்றைத் தயாரிக்கும் சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்துக் காத்திருந்தாகவும் ஷெய்லா கூறினார்.
நான் இந்தக் கேக்கைத் தயாரிக்கும் போது, அதன் உச்சிப் பகுதியில் எவருடைய உருவத்தை அமைப்பதென்பதை நினைத்திருக்கவேயில்லை. வில்லியம் கதே திருமண நிச்சயதார்த்தம் நிறைவேறியபோது தான் அவர்களின் திருமண கேக்கைத் தயாரிக்கும் துணிவு தனக்குப் பிறந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி, தான் தனது ஏழு பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதற்கென அவர்களின் பிறந்த தினங்களில் அவ்வப்போது இத்தகைய அபூர்வமான கேக்குகளைத் தயாரித்து வழங்கியிருந்ததாகவும் திருமதி கார்ட்டர் கூறினார்.மெட்ரோநியூஸ்22/04/11

No comments: