Thursday, May 7, 2009

ஐ பி எல் கிசுகிசு

கைப்புள்ள கணக்காகக் கதறுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. போட்டிகளில் மற்ற ஏழு அணிகளும் வெளுத்துக் கட்டுவது போதாதென்று, உள்ளுக்குள்ளேயே ஊமைக்குத்து விழுந்தால், பாவம், என்னதான் செய்வார்கள்? முகம் தெரியாத ஒருவரின் கண்ணாமூச்சி கபடிதான் ஷாரூக்கின் அணிக்கு புது இம்சை. போலி ஐ.பி.எல். பிளேயர் என்ற பெயரில் சுய அறிமுகம் இல்லாமல் ஒரு வலைப்பூ அது. (http://fakeiplplayer.blogspot.com)
தான் ஒரு கொல்கத்தா அணி வீரர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த பிளாக் எழுத்தாளர், கொல்கத்தா மற்றும் பிற அணி வீரர்களின் அந்தரங்கத்தைக் கிசுகிசு டைப்பில் எழுதி அம்பலமாக்குகிறார். கோச் ஜான் புக்கனனுக்கு 'பூக்கா நான்', யுவராஜ் சிங்குக்கு 'பிரின்ஸ் சார்லஸ் ஆஃப் பாட்டியாலா' என்று ஒவ்வொருவருக்கும் விதவித பட்டப் பெயர்கள். அவை உண்மையா, பொய்யா என்று தெரியாத நிலையில், இந்திய வீரர்கள் பற்றி அதில் சிதறியிருக்கும் சில கிசுகிசுக்கள்...
பஞ்சாப் வீரர்கள் 'ஓபியம்' என்ற பாரில் பெண்களைக் கிண்டலடிக்க, அவ்வணியின் சிக்ஸர் பேட்ஸ்மேன் வழக்கம் போல ஓர் அழகான பெண்ணை உஷார் பண்ணித் தள்ளிக்கொண்டு சென்றுவிட்டார். முன்னாள் கேப்டனும் இன்னாள் வர்ணனையாளருமானவர் 'ஆன்ட்டி' ஹீரோவாகி, அழகு அம்மணிகளை வர்ணித்து வர்ணித்தே வாரிச் செல்கிறார்.
எங்கள் அணியில் இருக்கும் முடியும் உடலும் வளர்த்தியான இந்திய பவுலர் பார்ப்பதற்கு அம்மாஞ்சியாக இருந்தாலும், தென்ஆப்பிரிக்கா வந்ததில் இருந்து நெட் பிராக்டீஸைவிட செக்ஸ் பிராக்டீஸ்தான் அதிகம் செய்கிறார்!
சாம்பியன் அணியின் ஷாம்பெய்ன் ஸ்பின்னருக்குத் தனது புது ஓனர் கம் நடிகை மீது ஒரு கண். ஐ.பி.எல். சீஸன் 2 ஆரம்பித்ததில் இருந்தே அந்த ஒல்லி நடிகையை வீழ்த்தப் போராடுகிறார். விரைவிலேயே திருமணம் ஆகவிருப்பதால், நடிகையிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ். துக்கத்தை மறைக்க வழக்கம் போல் நாளுக்கு மூன்று பெண்களோடு சல்லாபிக்கிறார் ஸ்பின்னர்!
கவர்ச்சி உடை அணிந்து கிரிக்கெட் விவாதிக்கும் அந்த மந்திர லேடிதான் ஃபாரின் கிளிகள் சிக்காத வீரர்களுக்கு ஆறுதலும்அடைக் கலமும் தருவது. இதனால் அவரது ஒவ்வொரு இரவும் படு பிஸி!
கடந்த வருடம் கட்டிப்பிடி நடிகையும், புரூஸ் லீ வேகத்தில் பந்து வீசும் ஆஸ்திரேலிய பவுலரும் ஏடாகூடமாக இருப்பதைக் காதலர் பார்த்ததுதான் காதல் கசந்ததுக்குக் காரணமாம். இம் முறை, அணியில் விளையாடாவிட்டாலும், நடிகையைப் பார்ப்பதற்காகவே அந்த பவுலர் கிடைத்த கேப்பில் தென்னாப்பிரிக்கா வந்து செல்ல, மொத்தமாகக் கை கழுவிவிட்டார் காதலர்!
இதையெல்லாம் யார் எழுதுவது என்று கண்டுபிடிக்க முடியாமல், வீரர்களுக்கு இன்டர்நெட், லேப்டாப் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. அணியில் இருக்கும் வீரர்களில் ஆர்குட், ஃபேஸ்புக், பிளாக் இவற்றில் தீவிரமாக இருக்கும் ஆகாஷ் சோப்ராவைச் சந்தேகப்பட்டு, அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினார் ஷாரூக். ஆனாலும், பிளாக் அப்டேட்கள் குறைந்தபாடில்லை.
'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கடைசி ஆட்டம் முடிந்ததும், நான் யார் என்று உலகுக்கு அறிவிப்பேன். அதோடு, கிரிக்கெட்டில் இருந்தே விலகிவிடுவேன்' என்று அறிவித்திருக்கிறார் அந்த பிளாக் ஷீப். ஐ.பி.எல். மேட்ச்களைக் காட்டிலும், இந்த பிளாக் தகவல்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்!

Monday, May 4, 2009

பயந்தால்பார்க்காதே.....







கம்பளை ஆதார வைத்தியசாலையில் (23.04.2009) இளைஞர் ஒருவரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியாக வெளியேறிய 4 அடி நீளமுள்ள மரக்கிளையொன்றினை கம்பளை வைத்தியசாலையின் விஷேட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் கணிஸ்ட்ட கமல் வைத்திய குழுவினர் சத்திரகிசிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.
கம்பளை தெல்பிட்டியைச்சேர்ந்த சமிந்த குமாரஎன்ற 25வயது இளைஞர் குறுந்துவத்தை என்ற இடத்தில் பாரிய செம்பக மரம் ஒன்றினை வெட்டிக்கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக மரம் சரியவே ஓடும் பொழுது கால் இடறி வீழ்ந்ததால் இளைஞரின் அருகிலே விழுந்த மரத்தில் இருந்த கிளை ஒன்று இளைஞரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியோக வெளியேறியதையடுத்து 1 1/2 மணித்தியாலய போராட்டத்திற்கு பின் கம்பளை வைத்திய சாலைக்குசெல்லப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் மரக்கிளை அகற்றப்பட்டது