Monday, July 5, 2010

உடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்


மூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஸ்மோபாலிடன் பத்திரிக்கை இதுதொடர்பான கருத்துக் கணிப்பை ஒன்றை நடத்தியது. அதில் 2498 பெண்களிடம் உடல் பருமன் மற்றும் செக்ஸ் குறித்து கருத்துக் கேட்டனர்.
அப்போது மூன்றில் ஒரு பெண், தான் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பதாக கூறினார். அதேசமயம், உடல் பருமனால் பல சிக்கல்களை தான் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 73 சதவீதம் பேருக்கு 'பாடி பாரனோயா' (body paranoia) பிரச்சினை உள்ளது. அதாவது நமது உடல் பருமன் குறித்தும், உடல் அமைப்பு குறித்தும் மற்றவர்கள் கேலி பேசுவார்களோ என்ற பீதிதான் இது.
உடல் பருமனால் இந்தப் பிரச்சினைகளை இவர்கள் சந்தித்தாலும், செக்ஸ் விஷயத்தில் தாங்கள் திருப்தியுடன் இருப்பதாகவே பெரும்பாலானோர் கூறியுள்ளனர். 10 பேரில் 6 பேர் படுக்கை அறையில் தாங்கள் நன்கு செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மூன்றில் ஒரு பங்கு பேர் சிறந்த செக்ஸ் உறவை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். உறவு மேம்பட்டு வருவதாக பாதிப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு சதவீதம் பேர் மட்டுமே முற்றிலும் திருப்தி இல்லாத செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான கருத்து - உடல் பருமன் உடையவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருந்தாலும் கூட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் அதை அவர்கள் அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது