Thursday, April 21, 2011
செல்வி கதேயின் இரவு
இளவரசர் வில்லியமை மணமுடிக்கவுள்ள கதே மிடில்டன் ஒரு தனிப்பெண்ணாக தனது கடைசி இரவைக் கழிக்கவுள்ள ஹோட்டல் அறை இது தான்.
மத்திய லண்டனில் உள்ள கோரிங் ஹோட்டலில் உள்ள இந்த மிகவும் ஆடம்பரமான அடுக்குஅறையை தனிப்பெண்ணாகத் தனது கடைசி இரவைக் கழிப்பதற்கு மிடில்டன் தெரிவு செய்துள்ளார்.
இதற்கென இந்த ஹோட்டல் 150000 பவுண் செலவில் மெருகூட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் மேல் மாடியில் இந்த அறை அமைந்துள்ளது.
இளவரசர் வில்லியமுடனான திருமண தினத்துக்கு முந்திய இரவு மிடில்டன் இங்கு தங்கியிருப்பார். இந்த ஹோட்டல் அறையானது பாரம்பரியமும் நவீனமும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு அறையாகும்.
இது ஐந்து அறைகளின் விசாலத்தை ஒன்றிணைத்த ஒரு பகுதியாகும். இங்குள்ள மலசல கூட உபகரணங்கள் 19ஆம் நூற்றாண்டு முதல் இந்தத் துறையில் தலைசிறந்த வடிவமைப்பாளர்களாகத் திகழும் தோமஸ் கிரப்பர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அசல் "வெனரபல்' ரக உற்பத்திகளாகும். உலகில் பல அரச குடும்ப மாளிகைகளில் இந்த வகை மலசல கூட உபகரணங்களே பாவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோல், பெறுமதி மிக்க ஓவியங்கள் பலவும் இந்த அறையை அலங்கரிக்கின்றன. விக்டோரியா மகாராணி தனது திருமணத்தின்போது அணிந்திருந்தது போன்ற ஒரு மாதிரி ஆடை இந்த அறையின் ஆடைகள் வைப்பதற்கான அலுமாரியை இன்னமும் அலங்கரிக்கின்றது.
இங்குள்ள குளியல் அறையிலும் நீர்த் தாக்கம் ஏற்படுத்தாத தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. கதே மிடில்டன் தனது தாய், சகோதரி, மற்றும் பிரதான மணப்பெண் தோழி ஆகியோருடன் இங்கு தங்கவுள்ளார்.
ஒரு இரவுக்கான கட்டணம் 5000 பவுண்களாகும். மிடில்டன் குறிப்பிட்ட இந்தத் தினத்தில் தங்குவதற்கு பேர்கிங்ஹோம் அரண்மனைக்கு அருகில் அவருக்கு ஒரு இணைப்பு இல்லம் வழங்கப்பட்டது.
ஆனாலும், அதை ஏற்காமல் திருமணத்துக்கு முன் பொதுவான ஒரு இடத்தில் தங்க வேண்டும் என முடிவு செய்து இந்த ஹோட்டலைத் தெரிவு செய்துள்ளார்.
மெட்ரோநியூஸ்20/04/11
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment