Sunday, April 24, 2011

கதே பிடிக்கும் கமிலா பிடிக்காது



விரைவில் இளவரசியாகவிருக்கும் கதே பிடிக்கும், ஆனால் இளவரசர் சார்ள்ஸின் இரண்டாவது மனைவி கமிலாவைப் பிடிக்காது என்று இங்கிலாந்து மக்கள் தெரிவித்ததாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
விரைவில் இளவரசர் வில்லிம்யஸை மணக்கவிருக்கும் கதே, மறைந்த இளவரசி டயானாவைப் போலவே இங்கிலாந்து மக்களிடையே பிரபலமாக இருக்கிறார் என்று வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள 2 ஆயிரத்து 500 பேரிடம் ராஜ குடும்பத்தினர் பற்றி கருத்துக் கேட்கப்பட்டது. இதில் டயானாவும் கதேயயும் சமமான வாக்குகளைப் பெற்றனர். இங்கிலாந்து ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் 81 சதவீதத்துடனும், அவரது பாட்டி மகாராணி எலிசபெத் 80 சதவீதத்துடனும் மக்களிடையே அதிக பிரபலமாக உள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற பாதிப்பேருக்கு இளவரசர் சார்ள்ஸ் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. மேலும், அவரது இரண்டாவது மனைவி கமிலாவைப் பிடிக்காது எனத் தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 10இல் 8 பேர் ராஜ திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும், டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை கதேக்கு வில்லியம்ஸ் அணிவித்தது மிகச் சரியே என்றும் தெரிவித்தனர்.திருமணத்திற்கு பிறகு கதே வேலைக்கு போகலாமா என்று கேட்டதற்கு 52 சதவீத இங்கிலாந்து மக்கள் தாரளமாகப் போகலாம் என்றனர். ஆனால், அமெரிக்கர்களோ கதே வேலைக்குப் போகாமல், ராஜ கடமைகளை மட்டும் செய்யட்டும் என்கின்றனர்.

மெட்ரோநியூஸ்

No comments: