சில மாதங்களுக்கு முன்னர் அவர்களிருவரும் காதலர்களாக பகிரங்கமாக உலா வந்ததிலிருந்து பிரித்தானிய பிரபல நடிகை தனது கிரிக்கெட் காதலனைப் பார்க்கவென இரண்டாவது தடவையாகவும் இந்தியா வந்துள்ளார்.
ஆயினும் கரங்களைக் கோர்த்தப்படி அன்பை வெளிப்படுத்துவதற்கு அப்பால் இருவருக்குமிடையே உண்மையான அன்பு இன்றுவரை மலர்ந்து வருகின்றது.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை ஷேன் வோன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணி தோற்கடித்த பின்னர் இந்த ஜோடிகள் ஒருவருக்கொருவர் முத்தப் பரிமாற்றம் செய்வதை கமராக்கள் பதிவு செய்தனவாம். ஆமாம்! ராஜஸ்தான் ரோயல்ஸின் அபார வெற்றியின் பின்னர் விளையாட்டரங்கில் நடிகை எலிஸபெத் நேரில் சென்று ஷேன் வோனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து முத்தப் பரிமாற்றம் செய்தபோது ஷேன் வோனின் மகளான புரூக் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
ஆமாம்! ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் ஷேன் வோனின் மகள் புரூக் ஆகியோர் முன்னிலையில் தாங்கள் இருவரும் உதடுகளில் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோமே என எவ்வித சலனமும் அடையாமல் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் சந்தோஷம் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
ஜெய்ப்பூரில் நடந்த அந்த அற்புதமான போட்டியைக் கண்டு ரசிக்கவென 45 வயதான எலிஸபெத், 41 வயதான தனது காதலன் ஷேன் வோனின் விளையாட்டை ரசிக்கவென இங்கிலாந்திலிருந்து இரண்டாவது தடவையாகவும் இந்தியா வந்திருந்தார். ஆயினும் தான் முதன் முதலாக வந்திருந்தபோது தனது அணி தோல்வியை தழுவியபோது தான் மிக்க துக்கமடைந்திருந்ததாக டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் எலிஸபெத் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் போட்டி முடிவுற்றதும் பார்வையாளர் பகுதியிலிருந்து குதித்தோடினார்.
வெள்ளை ஜீன்ஸும் நீல நிறத்திலான ராஜஸ்தான் ரோயல் அணியின் டீஷேர்ட்டும் அணிந்திருந்தார்.
அவர் இதற்கு முன்னரும் ஏற்கனவே நடைபெற்றிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியின்போதும் இதே கோலத்தில் காட்சியளித்தமை தெரிந்ததே.
இந்தத் தடவையும் தனது மகன் டேமியனுடன் இந்தியாவுக்கு வருகை தந்த எலிஸபெத் ஈஸ்டர் பெருநாளையும் இந்தியாவிலேயே கொண்டாட வேண்டியதாயிற்றாம்.
ஷேன் வோனுடனான தொடர்பை அடுத்து எலிஸபெத் கிரிக்கெட் ரசிகையாக மாறிவிட்டாராம்.
அவுஸ்திரேலியர்கள் என்றால் தனக்கு ரொம்பப் பிடிக்குமெனக் கூறும் பிரித்தானிய நடிகை எலிஸபெத் ஷேன் வோனை மட்டும் விட்டு வைப்பாரா என்ன?
மெட்ரோநியூஸ்
Wednesday, May 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment