Thursday, August 25, 2011

அரை நிர்வாண ஆர்ப்பாட்டப் பேரணி


பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமைகளை வழங்கக்கோரி மத அனுசரணையமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலிபோர்னியாவின் வெனிஸ் கடற்கரையில் அரை நிர்வாண ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுப்பட்டனர்.

ஏராளமான ஆண்கள் அடங்கலாக நூற்றுக்கணக்கான பெண்கள் கலிபோர்னியாவில் வெனிஸ் கடற்கரையில் திறந்த ""மார்ப்புத் தினமே போய்விடு'', ""Go Topless Days'' எனும் தொனிப் பொருளில் அமைந்த நான்காவது வருடாந்த நிகழ்வில் கலந்து கொள்ளவென திடீரென கூடினர். இன்றும் அனுசரிக்கப்படும் பெண்கள் சமத்துவ தினத்தையொட்டி இந்நிகழ்வு அமெரிக்க நகரங்கள் பலவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அடுத்த வார இறுதியில் கனடாவில் இரண்டு நகரங்களில் நடாத்தப்படவுள்ளதாம். இதில் கலந்து கொண்ட பெண்களில் சிலர் மேலாடைகளின்றி கலந்து கொண்டனர். ஆண்கள் அனைவரும் நீச்சல் உடைகளுடன் மார்புக் கச்சைகளையும் அணிந்து பகிரங்கமான முறையில் திறந்த மார்புகளுடன் திரிய தங்களை அனுமதிக்கும் இந்த கபட நாடகத்திற்கு தமது எதிர்ப்பை காண்பித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முலைக் காம்புகள் இருக்கையில் ஏன் பெண்கள் மட்டும் தங்கள் முலைக்காம்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்? அனைவருக்கும் திறந்த மார்புகளுடன் செல்லும் சம உரிமை வேண்டும். இன்றேல் எவருக்கம் அந்த உரிமை வழங்கக்கூடாது என்ற சுலோகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஏனையோர் விநோத உடைகளை அணிந்திருந்தனர்.

இந்த மத அனுசரணை அமைப்பு மனித இனப் பிரச்சினைகளுக்கு விஞ்ஞானமே மூலக்காரணமென கூறியுள்ளது. அதன் குறிக்கோளின் பிரகாரம் திருமணம் தேவையற்றதொன்றெனவும் அதன் உறுப்பினர்கள்
தங்கள் மேனி அழகை கொண்டாட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினரான லாரா ரேஸ்ட் ஜாக் கடந்த ஞாயிறன்று நடந்த பேரணியில் கலந்து கொண்டதுடன் அரசியலமைப்பில் பெண்கள் சொல்லளவில் ஆண்களுக்கு சமமானவர்களே எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அனைத்து விடயங்களிலும் பெண்களுக்கு சமவுரிமை வழங்காத அரசியலமைப்பால் என்ன நன்மை என கேள்வி எழுப்பினர்.

இது ஒரு அடிப்படை குடியியல் உரிமை. கறுப்பினத்தவரும் வெள்ளையரும் தண்ணீர் ஊற்றை எவ்வாறு சமமாக உபயோகிக்கிறார்களோ அதைப் போன்றதே ஆண் பெண் சமவுரிமையும் என விபரித்தார்.
மெட்ரோநியூஸ்26/08/11

No comments: