Tuesday, September 6, 2011

புதியகணவருடன் கிம் கப்தாஷியன்


காதல் உணர்வில் கட்டுப்பட்ட நிலையில் அரியதொரு இராபோசன விருந்தின் பின்னர் இருபத்தாறு வயதுடைய தனது புதிய கணவருடன் பிரபல பாடகியான கிம் கர்தாஷியின் உல்லாசமாகப் பொழுதைக் கழித்தார்.

கலிபோர்னியாவில் உள்ள மொன்டிசிடோவில் கடந்த சனியன்று முப்பது வயதான பாடகி கிம் இருபத்தாறு வயதான முன்னாள் நியூ ஜேர்சி கூடைப்பந்தாட்ட வீரரான கிறிஸ் ஹம்பிறீ திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெற்ற பின்னர் தங்கள் தேனிலவை இயற்கை அழகை அள்ளிக் கொட்டும் இத்தாலியில் கழித்தனர்.

அப்போது தனது அன்புக் கணவர் மீது கிடந்தவாறு முத்தமழை பொழிந்திருந்த காட்சிகள் கமராவுக்குள் பதிவாகியிருந்தன. அதன் பின்னர் அமால்பி கோஸ்டில் அமைந்துள்ள அந்த ஆடம்பர சுற்றுலா விடுதியில் தங்களை மறந்த நிலையில் தனிமையில் பொழுது போக்கினராம். அங்கிருந்து அமெரிக்கா திரும்பிய இந்த புதுமணத் தம்பதியினர் நியூயோர்க்கில் நடைபெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டனர். கடந்த ஞாயிறன்று லொஸ் ஏஞ்செல்சில் நடைபெற்ற எம்.ரிவி வீடியோ இசை விருது வழங்கல் நிகழ்வில் விருந்தொன்றையும் பாடகி கிம் பெற்றுக்கொண்டார்.

எதிர்வரும் அக்டோபரில் E நெட்வேர்க் விசேட தொலைக்காட்சியில் ஒளிபரப்பவென அவர்களின் திருமணக் காட்சிகள் கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்டோபர் கெஸ்டஸ் (October Guests) எனும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை லின்ட்சே லோஹான் முன்னாள் குணீடிஞிஞு எடிணூடூண் நடிகை மெல் பி லொவட்டோ மற்றும் கீNஆ பாடகி சியாரா ஆகியோரின் விருப்பங்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. இத்திருமணக்காட்சியை பார்த்து ரசித்த விருந்தினர்களில் ஒருவர் அது பற்றி தெரிவிக்கையில் இதனைப் பார்த்த அனைவரும் தங்களை மெய் மறந்து ரசித்ததாகவும் இத்திருமணக் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கலை நிகழ்ச்சி போன்று இருந்ததாக குறிப்பிட்டார்
மெட்ரோநியூஸ்

No comments: