Tuesday, September 13, 2011
MISS UNIVERSE போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற இலங்கை அழகுராணி
வருடத்திற்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வரும் அழகு ராணிப் போட்டியில் அந்தந்த நாட்டு அழகுராணிகள் தங்கள் நாடுகளின் நல்லெண்ண தூதுவர்களாக செயற்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அந்த வரிசையில் எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி பிரேசிலில் நடைபெறவுள்ள உலக அழகுராணிப் போட்டியில் பங்கேற்பதற்கென அழகிகள் படையொன்று பிரேசில் போய்ச் சேர்ந்துள்ளது. எமது நாட்டைப் பிரதிநிதித்துப்படுத்தும் அழகுராணி கடந்த ஜூலை 11ஆம் திகதி தெரிவாகியிருந்தமை தெரிந்ததேஉலக அழகுராணி என்ற கிரீடத்தை அணிந்திட இதுவரை இலங்கை அழகுராணிகள் எவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆயினும் இலங்கையின் முன்னாள் அழகுராணி ஒருவர் உலக அழகுராணிப் போட்டியொன்றில்
மூன்றாமிடத்தைப் பெற்றார்
ஆமாம் அந்த அழகு தேவதை வேறு யாருமல்ல. 1955ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையின் முன்னாள் அழகுராணியான மொரின் நெலியா ஹிங்கேட் தான். 1937 ஜனவரி 9ஆம் திகதி டச்”க்கார தந்தையான லயனல் ஹிங்கேட்டுக்கும் சேனநாயக மாபெல் டீ
ரன்ணுக்கும் மகளாகப் பிறந்த மொரீன் நெலீயா மொடல் அழகியாகவும் நடன மங்கையாகவும் நடிகையாகவும் விளங்கியதுடன் 1954 இல் இலங்கையின்
அழகு ராணியாக முடி சூடப்பட்டு 1955இல்உலக அழகுராணிப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அந்தப் பரபரப்பான போட்டியில் மொரீன் நெலியா ஹிங்கேட் மூன்றாம் இடத்தைப் பெற்றார் அதே வேளை ஹொன்டுராஸ் அழகுராணியான பஸ்டோரா பாகன் வாலன்சுயெலா இரண்டாம் இடத்தைப்
பிடித்தார்.உலக அழகுராணிப் போட்டியில் மொரீன் நெலீயா கலந்து கொண்டு மூன்றாமிடத்தை தனதாக்கிக்கொண்டதை அடுத்து யூனிவேர்ஸில் இன்டர் நாஷனல் ஸ்ரூடியோவில் 20 சென்சூரி பொக்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்கள் அவருடன் நடிப்பு ஒப்பந்தங்கள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment