என்ன ஒரு வேறுபாட்டை தலைமுறை ஒன்று செய்து விடுகின்றது. ஆமாம்! கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சாதனை படைக்கத்தக்க வகையில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விஜயம் செய்திருந்த பெரும் எண்ணிக்கையானோரை கேம்பிரிட்ஜ் சீமாட்டியான கேட் மிடில்டனின் திருமண ஆடை கவர்ந்திழுத்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை கால முடிவின்÷ பாது சாரா பேர்ட்டன்/ அலெக்சாண்டர் மக்குயீனின் வடிவமைப்பில் உருவான சீமாட்டி கேட் மிடில்டனின் இந்தத் திருமண ஆடையானது எட்டு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் அரண்மனை புதுப்பித்தல் வேலைகளுக்கும் சீமாட்டி கேட்மிடில்டனின் ஆதரவற்றோருக்கான தரும ஸ்தாபன நிதியத்திற்கும் நிச்சயமாக வழங்கி அள்ளிக் கொடுத்து இருந்திருக்கும்.
இந்த வெற்றிகரமான கதையை காலஞ்சென்ற இளவரசி டயானாவின் திருமண ஆடையுடன் ஒப்பிடுதல் என்பது புரிந்து கொள்ளலாம். ஆமாம்! கடந்த 1981 ஜூலையில் சென். போல் தேவாலயத்தில் நடைபெற்றிருந்த இளவரசர் சாள்ஸ் இளரவசி டயானா திருமணத்தின் போது டேவிட் மற்றும் எலிஸபெத் இம்மானுவல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டிருந்த டயானாவின் மணப் பெண் ஆடையிலேயே அங்கு குழுமியிருந்த மில்லியன் கணக்கானோரின் கண்கள் மொய்த்திருந்தன. அத்தகைய சிறப்பு வாய்ந்த அவரின் திருமண ஆடைக்கு இப்போது நிகழ்ந்துள்ள கதி பற்றி என்னவென்று சொல்வது? முன்னொரு காலத்தில் பளிங்குச் சிலையென அனைவராலும் போற்றப்பட்ட இளவரசி டயானா இளவரசியான நிலையில் அணிந்திருந்த அந்த திருமண ஆடை தற்போது கண்ட கண்ட இடமெல்லாம் உலகம் முழுவதும் பணம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மலினப்படுத்தப்பட்டு மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றதாம். வரலாறு படைத்த டயானாவின் திருமண உடை மலிவான ஒரு பொருளாக கடந்த ஏழு வருடங்களாக உலக வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த வருடத்தில் மட்டும் கன்சாஸ் நகரின் புகையிரத நிலையத்திலும் மிக்சிக்கனின் கிராண்ட் ரபிட்ஸில் உள்ள அரும்பொருட் காட்சியகத்திலும் ஏற்கனவே அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இன்று தொடக்கம் அவரது திருமண ஆடை கெனக்ரிகட்டின் மாஷான்ரக்கெட்டில் உள்ள கசினோ கட்டிடத் தொகுதியில் அவரது வாழ்க்கையுடன் தொடர்புபட்ட 150 அம்சங்களுடன் காட்சிப்படுத்தப்படவுள்ளதாம். இருபத்தைந்து அடி நீளமான செரினி பட்டாலான அந்த மணப் பெண் ஆடை இங்கிலாந்தின் மரியாதைக்குரிய ஒன்றாக ஒரு காலத்தில் மதிக்கப்பட்டிருந்தது. இதனை தற்போது வைத்திருக்கும் டயானாவின் சகோதரர் சாகில்ஸ் ஸ்பென்சர் இதனைப் பற்றி அலட்டிக் கொள்ளாதவர் போல காணப்படுகிறார்.
மெட்ரோநியூஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment