Tuesday, September 13, 2011
மூன்று அழகிகள் வெளி@யற்றம்
காண்போரைக் கவர்ந்திழுக்கத் தூண்டும் வகையில் புகைப்படங்களுக்குப் "போஸ்" கொடுத்திருந்த மூன்று இத்தாலிய மொடல் அழகிகள், இந்த வருடத்திற்கான இத்தாலிய அழகுராணிப் போட்டியிலிருநது நீக்கப்பட்டுள்ளனர்.
இளஞ்சிவப்பு நிறத்திலான இரவில் அணியும் ஆடையொன்றுடன் கவர்ந்திழுக்கத் தூண்டும் வகையில் புகைப்படங்களில் தோன்றிய அலிஸ் பெலோட்டோ எனும் 22 வயதான மொடல் அழகியே நடுவர்களால் முதன்முதலில் வெளியேற்றப்பட்டவராவார். இவர் இத்தாலியில் உள்ள வெனெட்டோ பிரதேசப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அடுத்து தலைநகர் ரோமிலிருந்து கலந்துகொள்ள வந்திருந்த 23 வயதான கேவி இத்தாலி அழகுராணியான ரயேல்லா மொடுங்கோ, தோலிலான மெத்தை ஒன்றில் சாய்ந்தபடி குறிப்பை உணர்த்தும் வகையில் பட்டாலான உள்ளாடையுடன் தோன்றும் புகைப்படத்தைச் சல்லடைபோட்டு ஆராய்ந்து நடுவர்களின் கண்களில் பட்டதனால், அவரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.
சிவப்பு அட்டை காட்டப்பட்ட மூன்றாவது மொடல் அழகியாக, ஜெ@னாவைச் ‹ழவுள்ள லிகுரியா அழகுராணியான 26 வயதான ரியானா பியேர்ஜியானியானார். அவர் தனது திறந்த மார்பகங்களுடன் புகைப்படங்களிலும் காணொளிகளிலும் தோன்றியிருந்ததைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் இணையத்தில் கண்டுபிடித்தமையால் அடுத்தவாரம் ரஸ்கனியில் உள்ள மொன்டிகடினி ரேமில் நடைபெறவுள்ள இத்தாலியஅழகுராணிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியின் பேச்சாளரொருவர் இது பற்றி கூறுகையில்,
போட்டியாளரும் ஆபாசமான முறையில் முன்னர் "போஸ்" கொடுத்திருந்தார், அவர் போட்டியிலிருந்து நீக்கப்படவேண்டுமென எட்டாம் இலக்க போட்டி விதி கூறுவதாகத் தெரிவித்தார். இதற்கு முன்னரும் இத்தகையோர் நீக்கப்பட்டிருந்தனர், ஒரே போட்டியில் மூவர் நீக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை என பின் அரங்கு வட்டாரமொன்று கூறியுள்ளது.
நீண்டகாலமாக நடைபெற்றுவரும் போட்டிகளில் ஒன்றெனக் கூறப்படும் இந்த இத்தாலிய அழகுராணிப் போட்டியில் பிரபல இத்தாலிய திரைப்பட நடிகைகளான சோபியா லோறன் மற்றும் கினா லொல்லோபிறிகிடா உள்ளிட்ட பல அழகிகள் கலந்து கொண்டதுடன், இப்போட்டி 1939இல் ஆரம்பமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment