Monday, September 12, 2011

தற்கொலை விமானத்தைத்தேடிய விமானி


உலக வர்த்தக மையம் ஒரு விமானத்தால் தாக்கப்பட்டதாக ஒரு விமான மோட்டிகள் வாசிங்டனில் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டபோது ஒரு பயிற்சியில்லாத விமான மோட்டியில் செயல் என அவர்கள் நம்பினார்கள். ஆனால் 9/11 தாக்குதலின் உண்மை நிலை தெரியவந்தபோது இனி தாங்கள்தான் நடவடிக்கையில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என உணர்ந்து கொண்டார்கள்.
அதில் ஒருவர் 20 வயது மதிக்கத்தக்க அழகிய தலைமயிரையுடைய பெண். அவரின் தகப்பனாரும் வியற்ணாம் யுத்தத்தில் பெருமை பெற்ற ஒரு விமானமோட்டி.
உலகின் பிரபல்யம் பெற்ற ஒரு விமான நிறுவனம்தான்'' "LOCKHEEDMARTIV" F35 ரக விமான திட்டத்தில் இந் நிறுவனத்தின் பணிப்பாளராக தற்போது தொழில்புரியும் இவர் பககு நேர விமானமோட்டியாகவும் வேலை செய்வதால் தனது விமான மோட்டும் தொழிலை மறக்கவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு விமானத் தாக்குதல் துறையில் பெண்களும் பங்குபற்றலாமென அறிவிக்கப்பட்ட போது யுத்த விமானியாகமுதலாவதாக பதவி செய்யப்பட்டவர் இவர்தான். செப்டம்பர் 11 ஆம்திகதியும் இவரே ஒரு வாசிங்கடனை நோக்கி கடத்தப்பட்ட விமானம் சம்பந்தமாக முதலாவதாக சம்பந்தப்பட்டிருந்தார்.
இவருக்கு வழங்கப்பட்ட கட்டளை: FILIFHT 93 கண்டு பிடித்து எப்படியாவது அவ்விமானத்தை அழிக்கவேண்டுமென்பது தான். அதனால் விமானத்திலோ ஏவுகøணகளில்லை. பயிற்சி பணிகளில் ஈடுபட்ட இவ் விமானத்தில் பயிற்சிக்காக பாவிக்கப்படும் போதியான ஆயுதங்களே காணப்பட்டன. தனது கட்டளையை நிறைவேற்றுவதற்கு ஒரே வழிதான் தென்பட்டது.
அண்மையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ""விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு வழியில்லை. தான் வெடிபொருள் அணிந்த விமான மோட்டியாக மாறி அவ்விமானத்துடன் மோதுவதே ஒரே வழி என்று தெரிவித்திருந்தாராம். இந்த நிலையில் அன்×ஸ் விமான படைத் தளத்தில் குண்டுகளுடனோ ஏவுகணைகளுடனோ F16 விமானமொன்றும் இருக்கவில்லை. ஆயுதமேந்திய விமானத்தை பெறுவதற்கு குறைந்தது 1 மணி நேரமாவது செல்லும். நேரமோ கானாது.

குண்டு வீச்சு விமானங்கள் வாசிங்டனை பாதுகாப்பதற்கு தேவை. உடனடியாக அவை புறப்பட வேண்டும். நீர் என்னுடன் வருகிறீர்கள் என கேர்ணல் மார்ச் சசீவில்லி சத்தமிட்டார்.
அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகனில் தற்போது சசீவில்லி தொழிற்புரிகிறார். அவர் சொல்கிறார். ""பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு நாங்கள் பயிற்சியளிப்பதில்லை. இயந்திரத்தை சிறிது தள்ளிவிட்டால் பின்பு நாங்களாகவே இலக்கை நோக்கி செல்லலாம்.
விமானமோட்டியின் ஆசனம் [COCKPIT) அல்லது விமானத்தின் இறக்கையை நான் எண்ணினேன். பயணிகள் விமானத்தை தகர்ப்பதற்கு முன்னால் நான் குதித்து தப்பலாமென நினைத்து முடிவெடுத்தேன்.
ஆனால் செல்வி மெனி விமானியின் ஆசனத்திலிருந்து தப்பி குதிப்பதன் மூலம் இலக்கை தவற விட நேரிடும் எமது குறிக்கோளும் தோல்வியில் முடியும். தான் உயிர் தப்பினாலும் என்ன பயன் என நினைத்தாராம்.
செல்வி பென தன்னை சாஸ் என கூறிக் கொள்பவராம். தான் விமானிகளின் ஆசனப் பகுதியை எடுப்பதாகவும் பெனி விமானத்தின் வால் பகுதியை எடுக்கவும் யோசித்தனர்.
இருவரும் 400 மைல் வேகத்தில் விமானங்களில் புறப்பட்டு சேதமடைந்த பென்டகனை மேல் தாழ்வாக பறந்து வானத்தை தேடிப் பார்த்தனர். பல மணி நேரத்தின் பின் தான் "UNITED 93" விமானம் பென்சில் வேனியா நகருக்கு வெளியே வீழ்ந்ததாக கேள்விப்பட்டனர். அத்துடன் அவர்களின் பணி முடிந்துவிடவில்லை. அன்று முழுவதும் ஆபத்தில் தனது பொழுதை கழித்த பெனி ஜனாதிபதி தனது விமானமான "AIR FOCEONE" பயணம் செய்தபோது வானத்தை பாதுகாத்து அவனுக்கு பாதுகாப்ப வழங்கினார்.
இந்த நடவடிக்கையின் பின் செல்வி பெனி "MAJOR" தரத்துக்கு பதவி உயர்வு பெற்று இருமுறை ஈராக்கிலும் சேவை புரிந்துள்ளார். 2 பிள்ளைகளின் தாயான இவர் 9/11 தக்குதலுக்கு இறுதியான தியாகத்தை செய்திருக்கவில்லை. துணிச்சல் மிக்க பயணிகளும் குழுவே செயலில் ஈடுபட்டது.
FLIGHT 93 ல் பயணித்த பயணிகளே உண்மையாக தியாகம் செய்வதற்கு தீர்மானித்தவர்களாவர்.சரித்திரத்தை எழுதுவதற்கு தற்செயலாக அகப்பட்ட ஒரு சாட்சிதான் நான் என்ற சொல்கிறார் பெனி.
மெட்ரோநியூஸ்

No comments: