Wednesday, September 14, 2011

9/11 தாக்குதலின்போதுமக்களைக் காப்பாற்றிய நாய்கள்




2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தகமையம் மற்றும் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மீதான விமானத் தாக்குதலின் போது, சுமார் 3000 பேர் கொல்லப்பட்டிருந்த அ@த வேளையில், அந்த இடிபாடுகளுக்குள் அகப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தோரை மூலை மூடுக்கெல்லாம் தேடிக் கண்டு பிடிப்பதில் சுமார் 100 உயிர் காக்கும் மோப்ப நாய்களும், அவற்றின் உரிமையாளர்களும் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
பத்து வருடங்கள் கழிந்த நிலையில், அவற்றில் பன்னிரண்டு நாய்கள் உயிர்பிழைத்திருப்பதாக அறியப்படுகின்றது. அவற்றின் புகழ்பாடும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டவர்கள் எனும் தலைப்பிலான நூலொன்றில் அவர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர். அந்தக் கொடூர நிகழ்வு வேளையில் அவசர கால சேவையில் ஈடுபட்ட பணியாளர்களுடனும், பொது மக்களுடனும் இணைந்து இந்த மோப்ப நாய்களும் இடிபாடுகளுக்கும் சிக்கித் தவித்தோரை மீட்பதில் அரும்பாடுபட்டனவாம்.
டெக்ஸாஸ் தொடக்கம் @மரிலாந்து வரையிலான ஒன்பது மாநிலங்களில் பிரயாணம் செய்து முப்பத்தி நான்கு வயதான சார்லொட் டுமாஸ் எனும் பெண்மணி எஞ்சியுள்ள இந்த மோப்ப நாய்களைக் கடந்த பத்து வருடங்களாக அவை வசித்து வரும் வீடுகளில் வைத்து கைப்பற்றினாராம்.
விலங்கினங்களை, குறிப்பாக நாய்களை ஓவியங்களாக தீட்டும் வலல்லமை பெற்றுவரென அனைவராலும் அறியப்படும் சார்லெட், செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு மட்டுமின்றி, அனர்த்தத்தின் போது அகப்பட்டோரைக் காப்பாற்றவென அவசர உதவிபுரிந்த அந்த மனிதர்களையும், அவர்களின் நாய்களையும் கௌரவிப்பதற்குமாகவே இந்த நூலை வெளியிட்டதாகக் கூறப்படுகின்றது. பிறர் நிலைக்குள்ளாகும் உணர்வை இந்த நாய்கள் எமக்குள் ஏற்படுத்துவதால் அவை வித்தியாசமான பிராணிகளாக எம்முடன் பேசுவதுடன், முக்கிய நண்பர்களாகவும் விளங்குகின்றன என்று சார்லெட் கூறுகின்றார். அமெரிக்கா மீதான இந்தாக்குதலில் பத்தாவது ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில், நாளை நியூயோர்க் நகரில் ஜூலி சோல் கலரி ஓவியக் கண்காட்சியில் சார்லெட்டின் கைவண்ணங்களும் அலங்கரிக்கவுள்ளன வாம் இந்த ஓவியங்கள் காலம் எப்படி நகர்கின்றது. அனர்த்த வேளைகளில் நாய்கள் எவ்வாறு எமக்கு உதவுகின்றன என்பதைச் சித்தரிப்பதாகக் கூறிய சார்லெட் உயிர் பிழைத்த இறுதி 15 நாய்களில் மூன்று இறந்து விட்டதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.
மெட்ரோநியூஸ்

No comments: