Sunday, September 8, 2013

டோக்கியோவில்2020 ஒலிம்பிக்!

2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை ஜப்பானின் டோக்கியோ நகரம் வென்றுள்ளது. நேற்று, ஆர்ஜெண்டீனாவில் உள்ள பியூனொஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இஸ்தான்புல், மெட்ரிட் ஆகிய நகரங்களை தோற்கடித்து ஜப்பான் இவ்வாய்ப்பை வென்றுள்ளது. இறுதியாக 1964ம் ஆண்டு ஜப்பான் இப்போட்டிகளை நடத்தியிருந்தது. அப்போது 93 நாடுகள் போட்டிகளில் பங்கேற்று இருந்தது. அதுவே முதன் முறையாக ஆசிய நாடொன்று போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்ற தருணம் ஆகும். அதன் பின்னர் 42 வருடங்களுக்கு பிறகு ஜப்பான் மீண்டும் 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது. ஜப்பான் தற்போது ஒலிம்பிக் போட்டிகளுக்காக மீண்டும் போட்டியிட்ட போது புகுஷிமா அணு இல்லையா மீண்டும் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அது போன்று எந்தவொரு சம்பவமும் இனி நடைபெறாது. டோக்கியோ அணு உலையிலிருந்து 150 மைல் தொலைவில் உள்ளது. எனவே எந்தப் பாதிப்பும் ஏற்படாது என ஜப்பானிய பிரதமர் உறுதி அளித்தார். 2011 இல் பூகம்பம், சுனாமி ஜப்பான் வட-கிழக்கு பகுதிகளை தாக்கிய போது புகுஷிமா அணு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 2016 ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவிடம் இந்த வாய்ப்பை இழந்த பின்னர் டோக்கியோ இந்த முறை நேரிடையாக இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளை இரண்டாவது தடவையாக நடத்தும் ஒரே நாடு எனும் பெருமையையும் டோக்கியோ வென்றுள்ளது.

No comments: