Saturday, September 21, 2013

சாதிக்குமா சென்னை அணி :சாம்பியன்ஸ் லீக் அதிரடி ஆரம்பம்

உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய அணிகள் மோதும், சாம்பியன்ஸ் லீக் தொடர் அதிரடியாக ஆரம்பமாகிறது. இதில் மும்பை, சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் கோப்பை வெல்ல களத்தில் குதித்துள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20'தொடரை நடத்துகின்றன. இதில் இந்தியாவில் இருந்து பிரிமியர் தொடர் சாம்பியன் மும்பை, இரண்டு மற்றும் 3வது இடம் பெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. தவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ என, 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இரண்டு அணிகள் செப்., 17 முதல் 20 வரை நடந்த தகுதிச்சுற்றின் மூலம் தேர்வு பெற்றன. தோனி நம்பிக்கை: சென்னை அணியை பொறுத்தவரையில், பிரிமியர் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும். ஆனால், சாம்பியன்ஸ் லீக் தொடர் என்றதும், அப்படியே தலை கீழ் நிலை தான். இதுவரை நடந்த நான்கு தொடர்களில் 2010ல் மட்டும் கோப்பை வென்றது. மற்றபடி 2009ல் தகுதி பெறவில்லை. 2011, 2012ல் லீக் சுற்றுடன் திரும்பியது. அடுத்த ஆண்டில் புதிய ஏலம் நடக்கிறது. இதனால், சென்னை அணி வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்த, இது தான் கடைசி வாய்ப்பு. இதற்கேற்ப கேப்டன் தோனி, சொந்தமண்ணில் ஏதாவது மாயம் நிகழ்த்துவார் என்று நம்பப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில், சமீபகாலமாக வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள தோனிக்கு, வழக்கம் போல முரளி விஜய் (14 போட்டி, 414 ரன்),ரெய்னா (14 போட்டி, 384 ரன்) கைகொடுக்க வேண்டும். சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 4, 5வது இடத்திலுள்ள இவர்களுடன் பத்ரிநாத்தும் உதவலாம். தவிர, கடந்த பிரிமியர் தொடரில் பேட்டிங்கில் எழுச்சி பெற்ற மைக்கேல் ஹசி இருப்பது கூடுதல் பலம். பவுலிங்கில் சமீபகாலமாக சர்வதேச அரங்கில் எழுச்சி பெற்றுள்ள ரவிந்திர ஜடேஜா, முக்கிய ஆயுதமாக இருப்பார். ஒருநாள் தரவரிசையில் "நம்பர்-1' பவுலராக உருவெடுத்துள்ள இவருடன், தமிழகத்தின் அஷ்வினும் இணைந்து வெற்றிதேடித் தரவேண்டும். தவிர, டுவைன் பிராவோ, ஆல்பி மார்கல், கிறிஸ் மோரிசும் உள்ளனர். சச்சினுக்கு கடைசி: கடந்த 2011 தொடரில் சாம்பியன்ஸ் கோப்பை வென்றது மும்பை அணி. கடந்த பிரிமியர் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் கோப்பை வென்றது. தற்போது, "சாம்பியன்' அணியாக களமிறங்குகிறது. அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பங்கேற்கும் கடைசி தொடராக இது பார்க்கப்படுகிறது. அவருக்காக எப்படியும் கோப்பை வெல்ல அணி வீரர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு போலார்டு, தினேஷ் கார்த்திக் உதவலாம். பவுலிங்கில் "யார்க்கர்' மலிங்கா இல்லாதது பெரும் பலவீனம் தான். மற்றபடி, மிட்சல் ஜான்சன், அம்பதி ராயுடு, மேக்ஸ்வெல், டுவைன் ஸ்மித், பிரக்யான் ஓஜா, அபு நேச்சிம், முனாப் படேலும் அணியில் உள்ளனர். இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப போராடி வரும் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சோதனையில் டிராவிட்: கடந்த 2008ல் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான் அணி. ஆனால், தொடர் ரத்து செய்யப்பட்டது. இம்முறை டிராவிட் தலைமையில், பிரிமியர் தொடரில் எழுச்சி பெற்றது. இடையில், ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், சித்தார்த் திரிவேதி சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது, அணியின் வெற்றியை பாதித்தது. ஒருவழியாக மூன்றாவது இடம் பெற்று, முதன் முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கிறது. அனுபவ வீரர் வாட்சன், ரகானே, இளம் வீரர் சஞ்சு சாம்சன், அசோக் மனேரியா பேட்டிங்கில் கைகொடுக்கலாம். பவுலிங்கை பொறுத்தவரையில் ஷான் டெய்ட், பால்க்னர், கெவான் கூப்பர் உதவலாம். மிரட்டுமா லயன்ஸ்: இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த உள்ளூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹைவெல்டு லயன்ஸ், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கிறது. கேப்டன் ஆல்விரோ பீட்டர்சன் சர்வதேச அனுபவம் வாய்ந்தவர். தவிர, குயின்டன் டி காக், பங்கிசோ கைகொடுத்தால் மீண்டும் பைனலுக்கு முன்னேறலாம். தென் ஆப்ரிக்காவின் மற்றொரு அணி டைட்டன்ஸ். டிவிலியர்ஸ், பெகர்டியன், கேப்டன் ஜார்ஸ்வெல்டு, அனுபவ ருடால்ப் போன்றவர்கள் பேட்டிங்கில் உதவினால், இங்கு சாதிக்கலாம். பவுலிங்கை பொறுத்தவரையில் வான்டர் மெர்வி, புனே அணியில் இருந்த அல்போன்சா தாமஸ் மற்றும் மார்னே மார்கல் மிரட்ட காத்திருக்கின்றனர். பெர்த்-பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரில் வெற்றி பெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, முதன் முறையாக இத்தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்காக விளையாடிய வாட்சன் (ராஜஸ்தான்), ஸ்டைன், திசாரா பெரேரா (ஐதராபாத்), மிட்சல் ஜான்சன் (மும்பை) போன்ற முன்னணி வீரர்கள், தற்போது பிற அணிகளுக்காக விளையாடுகின்றனர். இதனால், பிரிஸ்பேன் அணி "பல் பிடுங்கப்பட்ட பாம்பாக' உள்ளது. வேறு வழியில்லாததால், "செக்ஸ்' சர்ச்சையில் சிக்கிய பாமர்ஸ்பச், பீட்டர் பாரஸ்ட், கேப்டன் ஜேம்ஸ் ஹோப்சை நம்பி களம் காணுகிறது. இங்கும் இப்படித்தான்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியிலும் இப்படித்தான் சிக்கல் நிலவுகிறது. மைக்கேல் ஹசி, சென்னைக்காக பங்கேற்கிறார். ஷான் மார்ஷ் காயத்தால் விலகிவிட்டார். இருப்பினும், 38 வயது "சீனியர்' சைமன் காடிச், மார்கஸ் நார்த், 42வயதான பிராட் ஹாக் மீது நம்பிக்கை உள்ளது. தவிர, சமீபத்திய ஆஷஸ் தொடரில் அறிமுகம் ஆன இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் ஏகாரும் கைகொடுக்கலாம். டிரினிடாட் வாய்ப்பு: வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ அணிக்கு இம்முறை அதிர்ஷ்டம் தான். கடந்தமுறை தகுதிச்சுற்றில் தோற்று வெளியேறிய இந்த அணி, இத்தொடரில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டது. உள்ளூர் தொடரில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கோப்பை வென்றது டிரினிடாட் அணி. தினேஷ் ராம்தினை கேப்டனாக கொண்ட இந்த அணியில், அட்ரியன் பரத், டேரன் பிராவோ, ரவி ராம்பால் என, "சீனியர்கள்' <உள்ளனர். சுழல் "மாயாவி' சுனில் நரைனுக்கு இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை அத்துப்படி என்பதால், மற்ற அணிகளுக்கு சிக்கல் தான். ஜாம்பவான் பிரையன் லாரா, ஆலோசகராக உள்ளது கூடுதல் பலம். மலிங்கா இல்லை மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. பிரிமியர் (103 விக்.,) மற்றும் சாம்பியன்ஸ் லீக் (24) தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அணியின் வெற்றியில் இவருக்கு பெரும் பங்குண்டு. இவரது மனைவிக்கு பிரசவம் நடக்க இருப்பதால், இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், 6வது பிரிமியர் தொடரில் 20 சதவீத சம்பளத்தை இழக்க நேரிட்டுள்ளது. தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக பணமும் கிடைக்காது. இதுவரை சாம்பியன்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இதுவரை சாம்பியன் கோப்பை வென்ற அணிகளின் விவரம். ஆண்டு சாம்பியன் எதிரணி இடம் 2009 நியூ சவுத் வேல்ஸ் (ஆஸி.,) டிரினிடாட் (வெ.இ.,) ஐதராபாத் 2010 சென்னை (இந்தியா) வாரியர்ஸ் (தெ.ஆ.,) ஜோகனஸ்பர்க் 2011 மும்பை (இந்தியா) பெங்களூரு (இந்தியா) சென்னை 2012 சிட்னி சிக்சர்ஸ் (ஆஸி.,) லயன்ஸ் (தெ.ஆ.,) ஜோகனஸ்பர்க் 2013 ? ? புதுடில்லி பரிசு எவ்வளவு இந்த ஆண்டு சாம்-பி-யன்ஸ் லீக் "டு-வென்-டி--20' தொட-ரில் கோப்பை வெல்-லும் அணிக்கு ரூ. 15.81 கோடி பரி-சாக கிடைக்-கும். இரண்-டா-வது இடம் பெறும் அணி ரூ. 8.2 கோடி வழங்கப்படும். அரை-யி-று-தி-யில் தோல்வியடையும் அணிக-ளுக்கு தலா ரூ. 3.1 கோடி தரப்-ப-டும். லீக் சுற்-றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ. 1.26 கோடி கிடைக்கும். பைனலுக்கு செல்லும் பாதை சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்-கேற்-கும் 10 அணி-கள், இரு பிரி-வுகளாக பிரிக்-கப்-ப-டும். போட்-டி-கள் "ரவுண்டு ராபின்' முறை-யில் நடக்-கும். ஒவ்-வொரு அணி-யும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்-றின் முடி-வில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்-களை பிடிக்கும் அணிகள், வரும் அக்., 4, 5ல் ஜெய்ப்பூர், டில்லியில் நடக்-கும் அரை-யி-றுதிக்கு தகுதி பெறும். இத்தொடரின் பைனல் வரும் அக்., 6ல் டில்லியில் நடக்கிறது. பங்கேற்கும் அணிகள் பிரிவு "ஏ' * மும்பை (இந்தியா) * ராஜஸ்தான் (இந்தியா) * ஹைவெல்டு லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா) * பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா) * தகுதிச் சுற்றில் முதலிடம் பிரிவு "பி' * சென்னை (இந்தியா) * டைட்டன்ஸ் (தென் ஆப்ரிக்கா) * பிரிஸ்பேன் ஹீட் (ஆஸ்திரேலியா) * டிரினிடாட் அண்டு டுபாகோ (வெஸ்ட் இண்டீஸ்) * தகுதிச் சுற்றில் இரண்டாவது இடம் நான்கு சதம் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இதுவரை நான்கு சதம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ல் ஐதராபாத்தில் நடந்த ஒடாகோ (நியூசிலாந்து) அணிக்கு எதிரான போட்டியில் கேப் கோப்ராஸ் (தென் ஆப்ரிக்கா) அணியின் ஆன்ட்ரூ புட்டிக் (104 ரன்) முதல் சதம் அடித்தார். நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா) அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் (135, 123 ரன்கள்) அதிகபட்சமாக இரண்டு சதம் அடித்தார். இந்தியா சார்பில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 94 ரன்கள் (எதிர்-பெங்களூரு, 2010) எடுத்தார். மலிங்கா அதிகம் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் மும்பை அணியின் லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். இவர் 14 போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றினார். அடுத்த நான்கு இடங்களில் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்காக பங்கேற்ற ஹென்ரிக்ஸ் (22 விக்கெட்), சென்னை அணியின் போலிஞ்சர் (22), டுவைன் பிராவோ (21), அஷ்வின் (21) ஆகியோர் உள்ளனர். கோஹ்லி "-டாப்' அ-திக "கேட்ச்' பிடித்த பீல்-டர்-கள் வரி-சை-யில் பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி முன்-னிலை வகிக்-கி-றார். இவர், 15 போட்-டி-யில் 10 "கேட்ச்' பிடித்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் சாமர்-சட் அணி-யின் சுப்-பையா (9 கேட்ச்), சென்னை அணியின் ரெய்னா (9), டிரி-னி-டாட் அணியின் சிம்-மன்ஸ் (9) ஆகியோர் உள்ளனர். * ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் கேப் கோப்ராஸ் வீரர் ஓவைஸ் ஷா (4 கேட்ச், எதிர்- மும்பை, 2011) உள்ளார். 215 அ-தி-க-பட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி-கள் வரி-சை-யில் இந்தியாவின் பெங்-க-ளூரு அணி முதலிடத்தில் உள்ளது. பெங்-க-ளூருவில் 2011ல் நடந்த தெற்கு ஆஸ்-தி-ரே-லி-யா-வுக்கு எதி-ரான போட்டியில், 20 ஓவ-ரில் 8 விக்-கெட்-டுக்கு 215 ரன்-கள் எடுத்தது. இப்போட்டியில் முத-லில் பேட் செய்த தெற்கு ஆஸ்-தி-ரே-லியா அணி 20 ஓவ-ரில் 214 ரன்-கள் எடுத்-து, இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. 70 குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்த அணிகள் வரி-சை-யில் நியூ-சி-லாந்-தின் சென்ட்ரல் டிஸ்டிரிக்ஸ் முன்னிலை வகிக்கிறது. போர்ட்எலிசபெத் நகரில் 2010ல் நடந்த போட்டியில் இலங்கையின் வயம்பா அணிக்கு எதிராக 70 ரன்களுக்கு சுருண்டது. சிக்சர் மன்னன் இத்தொடரில் அ-திக சிக்-சர் விளாசிய வீரர்-கள் -பட்டியலில் மும்பை, டிரினிடாட் அணிகளுக்காக பங்கேற்ற போலார்டு முதலிடத்தில் உள்ளார். இவர், 20 போட்-டிகளில் 38 சிக்-சர் அடித்-துள்ளார். * அடுத்த மூன்று இடங்களில் டில்லி, நியூ சவுத் வேல்ஸ் அணி-யின் டேவிட் வார்-னர் (27 சிக்-சர்), பெங்-க-ளூரு அணியின் கிறிஸ் கெய்ல் (24), சென்னை அணியின் ரெய்னா (17) ஆகியோர் உள்ளனர். தோனி தான் "டாப்' அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் வரிசையில் சென்னை அணி கேப்டன் தோனி முன்னிலை வகிக்கிறார். இவர், 14 போட்டி-யில் 10 "கேட்ச்', 8 "ஸ்டம்பிங்' என மொத்தம் 18 விக்-கெட் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளார். இவரை அடுத்து கோல்கட்டா, சிட்னி சிக்சர்ஸ் அணி-யின் பிராட் ஹாடின் (12 விக்-கெட்) உள்ளார். வார்னர் முன்னிலை சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் முன்னிலை வகிக்கிறார். டில்லி, நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 13 போட்டியில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 556 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து போலார்டு (479 ரன்கள், மும்பை, டிரினிடாட்), விராத் கோஹ்லி (424, பெங்களூரு), முரளி விஜய் (414, சென்னை), சுரேஷ் ரெய்னா (387, சென்னை), காலிஸ் (380, கோல்கட்டா, பெங்களூரு) உள்ளனர். சூப்பர் ஜோடி சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் வாரியர்ஸ் அணியின்(தென் ஆப்ரிக்கா) ஜேக்கப்ஸ், பிரின்ஸ் ஜோடி உள்ளது. 2010ல் போர்ட் எலிசபெத் நகரில் நடந்த சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. 20 அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் போலிஞ்சர் (சென்னை, நியூ சவுத் வேல்ஸ்), டிர்க் நானஸ் (டில்லி, பெங்களூரு, விக்டோரியா), போலார்டு (மும்பை, டிரினிடாட்) உள்ளனர். இவர்கள் மூவரும் தலா 20 போட்டியில் விளையாடி உள்ளனர். இவர்களை அடுத்து ஹென்ரிக்ஸ் (நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ்), ஸ்மித் (நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ்) ஆகியோர் தலா 17 போட்டியில் விளையாடி உள்ளனர். 13 அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்கள் வரிசையில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் உள்ளார். இவர், இதுவரை 13 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

No comments: