
கியூபாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு கனடிய செக்ஸ் பிரியர்களின் செயல்பாடே காரணம் என கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபாவிற்கு சுற்றுலா நிமித்தம் வரும் கனடியர்கள் குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் கியூபா நாட்டின் சிறுவயது குழந்தைகளை தங்களது கம்பெனியாக அனுப்பும்படி நிர்ப்பந்திருக்கின்றார்களாம். பண விஷயத்தில் தாராளம் காட்டுவதால், இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் 4 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை இவர்களுடன் அனுப்பி வைக்கின்றனர்.
சுற்றுலாவில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தங்கும் கனடியர்கள் அந்த சிறுமிகளை பயன்படுத்திவிட்டு, போகுபோது ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்துவிட்டு செல்வதால், கனடியர்கள் சுற்றுலாப்பயணியாக வந்தால் உடனே போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு கம்பெனியனாக செல்ல சிறுமிகள் விருப்பம் தெரிவிப்பதாக கியூபா போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சிறு வயது பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற கவலையில் இருக்கும் கியூபா, இதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றது.
No comments:
Post a Comment