Friday, October 11, 2013

நம்பரில் தெண்டுல்கரின் சாதனை

50,024 ரன்கள்– அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 50 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர். 18426–ஒரு நாள் போட்டியில் எடுத்த ரன்கள். அவருக்கு அடுத்தபடியாக உள்ள வீரர் 14 ஆயிரம் ரன்களை கூட நெருங்கவில்லை. 15837– டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த வீரர். 2–வது இடத்தில் பாண்டிங் (13378 ரன்) உள்ளார். 8705 ரன்–டெஸ்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் எடுத்தவர். 2278 ரன்–உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் 593–டெஸ்டில் அதிக வீரர்களுடன் இணைந்து (சொந்த அணி மற்றும் எதிரணி) விளையாடியவர். 96– ஒரு நாள் போட்டியில் நிறைய மைதானத்தில் விளையாடியவர். 62–ஒரு நாள் போட்டியில் அதிக ஆட்டநாயகன் விருதை பெற்றவர். 51–டெஸ்டில் அதிக சதம் கண்டவர் 49–ஒரு நாள் போட்டியில் சதத்தில் முதலிடத்தில் இருப்பவர் 14–டெஸ்ட் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியர் 6– டெஸ்ட் போட்டியில் சிக்சருடன் சதத்தை எட்டிய எண்ணிக்கையில் சாதனை 6– அதிக முறை உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தானின் ஜாவீத் மியாண்ட்டுடன் சமன் 1–கேப்டன் ஆன அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே சதம் அடித்த (1996–ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக) ஒரே இந்தியர்.

No comments: