Thursday, October 22, 2009

நிர்வாணவாடிக்கையாளர்கள் கடையில் அட்டகாசம்


பிரிட்டனிலுள்ள எரிய்பாருள் விற்பனை நிலையமொன்றுக்குள் முழு நிர்வாணமம்க பொருட்கள் வாங்கச் சென்ற 6 இளைஞர்களை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேற்படி நபர்கள் டொவோன் நகருக்கு அருகிலுள்ள ஹொனிட்டன் எனும் இடத்தில் எரிபொருள் விற்பனை நிலையத்திலுள்ள கடைக்குள் மாலை 6.40 மணியளவில் புகுந்து செக்ஸ் சஞ்சிகைகள் வேண்டுமெனக் கேட்டனராம். அப்போது கடையில் இருந்தவர் 22 வயதான யுவதியொருவர். நிர்வாண வாடிக்கையாளர்களைக் கண்டு அதிர்ந்துபோன அந்த யுவதி அந்நபர்களை அங்கிருந்து துரத்தினார். பின்னர் அந்நபர்கள் தாம் வந்த மினி பஸ்ஸில் ஏறிச் சென்றனர். இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்நபர்களை இனங்காண்பதற்கான முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்னனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெராக்களில் அந்நபர்களின் உருவங்கள் பதிவாகியுள்ளன.
அக்காட்சிகளை வெளி யிட்டுள்ள பிரித்தானிய பொலிஸார், குறித்த நபர்களை அடையாளம் கண்டால் தகவல் தருமாறு கோரியுள்ளனர்.
இக்கடையில் முகாமையாளராக பணியாற்றும் கோபு ராசலிங்கம் என்பவர் இது குறித்து கூறுகையில்,
""நான் அச்சந்தர்ப்பத்தில் கடையில் இருக்கவில்லை. எமது காசாளர் இச்சம்பவத்தினால் மிகவும் அதிர்ந்துபோனார். ஏறத்தாழ அழும் நிலைக்கு வந்துவிட்டார். பின்னர் ஒருவம்று சுதாகரித்துக்கொண்டு ஆடையணிந்துகொண்டு வருமாறு கூறி அவர்களை துரத்தியுள்ளார்.
அப்போது கடையில் வேறு வாடிக்கையாளர்கள் இருக்கவில்லை. பெண்கள், சிறார்கள் யாராவது இருந்திருந்தால் பிரச்சினையாகியிருக்கலாம்'' எனக் கூறியுள்ளார். டொவோன் பிராந்திய பொலிஸ் அதிகாரியொருவர் இது தொடர்பாக கூறுகையில் ""அக்கடைக்குள் நிர்வாணமாகப் புகுந்த சகலரும் ஆணும் 2003 ஆம் ஆண்டின் பாலியல் குற்றவியல் சட்டத்தின்படி குற்றம்புரிந்துள்ளனர்.
அவர்களை முடிந்தவரை விரைவாக இனம்காண்பதற்கு முயற்சிக்கிறோம். அந்நபர்களாகவே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் இவ்விடயம் சற்று மென்மையான முறையில் கையாளப்படும்'' எனக் கூறியுள்ளார்

1 comment:

அகல்விளக்கு said...

என்னப்பா இது....

கண்றாவிப் பயலுங்க...