Sunday, October 11, 2009

வெள்ளை நிற காகம்

புதுச்சேரியில் அரிய வகை வெள்ளை நிற காக்கையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள காக்கைகள் ஒன்றாக கூடி மற்றொரு காக்கையை விரட்டி விரட்டி தாக்கியது. அருகில் சென்று பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். வெள்ளை நிற காக் கை ஒன்றை மற்ற காக்கைகள் துரத்தியது தெரியவந்தது.
உடனடியாக வெள்ளை நிற காக்கையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வெள்ளை காக்கை பிடிப்பட்டதை அறிந்த ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் வனத்துறையில் வைக்கப்பட்டுள்ள காக்கையை அதிசயமாக பார்த்து சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘மனிதர்களில் மரபியல் மாற்றம் காரணமாக ஏற்படும் நிறமாற்றத்தை அல்பினோ மனிதர்கள் என்பார்கள். அதே போலத்தான் காக்கைகளும் நிறக்குறைபாடு காரணமாக சில சமயங்களில் வெள்ளை நிறம் ஏற்படும்

No comments: