Monday, October 12, 2009

இலவசதேன்நிலவு


மலேஷியாவின் மாநில அரசாங்கமொன்று தம்பதியினருக்கு இலவச தேனிவுத் திட்டமொன்றை அறிவித்துள்ளது. விவம்ரத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாம்.

மலேஷியாவின் டெரங்கனு மாநில அரசாங்கமே இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இரண்டாவது தேனிலவுத்திட்டம் என இத்திட்டம் வர்ணிக்கப்படுகிறது.
அம்மாநில அரசாங்க அதிகாரியான அஷாரி இத்ரிஸ் இது தொடர்பாக கூறுகையில் ""பிரச்சினைக்குரிய தம்பதிகள் மாநிலத்தின் அழகிய தீவுகளில் அல்லது கடற்கரைகளிலுள்ள விடுதிகளில் இரு இரவுகள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். மிக விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் முன்னுதாரணமான குடும்பங்களை உருவாக்கமுடியும் என எதிர்பார்க்கிறோம்'' எனக் கூறியுள்ளாம்ர்.
அதேவேளை இத்திட்டத்தை பயன்படுத்துவதற்கு விண்ணப்பிக்கும் தம்பதிகள் உளவியல் ஆலோசனைத் திட்டமொன்றிலும் பங்குபற்ற வேண்டும் எனவும் இத்ரிஸ் கூறியுள்ளார்.

No comments: