Wednesday, October 14, 2009
சல்மான்கானை திருமணம் செய்யத் துடிக்கும் இளைஞன்
பொலிவூட் நடிகர் சல்மான் கானை காதலிப்பதாகவும் அவரை
திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான அஸான் அன்ஸாரி சல்மான் கானின் தீவிர ரசிகர். சாதாரண ரசிகராக அல்லாமல், சல்மானை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறாராம் அஸான். ஆணாக இருந்தால் சல்மானை திருமணம்செய்ய முடியாது என்பதால் தன்னை பெண்போல மாற்றிக்கொள்ள முயற்சிகிறார் அவர். சல்வார் கமிஸ் நகைகளைதான் அணிகிறார். தோடு, மூக்குத்தி, லிப்ஸ்டிக் என்பன மூலம்தன்னை அலங்கரிக்கும் அஸான் கடந்த 12 வருடங்களாக தான் சல்மானின் காதலியாக இருப்பதாக கூறுகிறார்.
சல்மானை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர்தான் எனது உயிர். அவருக்குக்காக மட்டுமே என்னை நான் முற்றாக மாற்றிக்கொண்டேன் என்கிறார் அன்சாரி. இவர் ஏற்öகனவே திருமணமானவர். சல்மானின் காதலியாக வாழ்வதற்காக பெற்றோரையும் மனைவியையும் 8 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து வந்துவிட்டாராம்.
""சல்மானுடனான எனது உறவு என் பெற்றோருக்கும் மனைவிக்கும் பிரச்சினையாக இருந்தது. அவர்களை சமாதானப்படுத்த நான் முயன்றேன். ஆனால் சல்மானை நான் திருமணம் செய்வதற்கு அவர்கள் அனுதிக்கமாட்டார்கள் என உணர்ந்தேன். அதனால் அவர்களைவிட்டுப் பிரிய நேர்ந்தது.
சல்மான் நடித்த "மெய்ன் பியார் கியா' திரைப்படத்தை நான் எனது நண்பர்களுடன் பார்த்தபோதுதான் சல்மானின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் நடித்த மேலும் சில திரைப்படங்களைப் பார்த்தபோது அந்த ஈர்ப்பு மேலும் அதிகரித்தது. இதை எனது நண்பர்களிடம்
சொன்னபோது அவர்கள் கேலி செய்தனர். ஆனால் சல்மான் மீதான எனது ஈர்ப்பு குறையவில்லை. அது காதலாகவும்
மாறிவிட்டது'' என்கிறார்.
அவர் சல்மானுக்கு இதுவரை 1000 இற்கு மேற்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளாராம். சல்மான் ஒரு கடிதத்திற்கு மாத்திரம் பதில் அனுப்பினாராம். அதில் "ஐ லவ் யூ ஜான்' என சல்மான் எழுதியிருந்ததை பார்த்து உருகிப்போய்விட்டாராம் அஸான் அன்சாரி.
அஸான் அன்சாரியின் நடவடிக்கைகள் அவரின் அயலவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. ""அவர் பெண்கோலம் பூண்டிருப்பதைப் பார்த்து ஏதோ வேடிக்கை காட்டுவதற்காக செய்கிறார் என நினைத்தேன். ஆனால் உண்மை தெரிந்தபோது பெரும் வியப்படைந்தேன்'' என்கிறார் அஸானின் அயலவர் ஒருவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment