Thursday, October 15, 2009

படிக்கட்டில் வைத்து நடந்த உறவு


ஜேர்மனியின் புகழ்பெற்ற டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவரான பொரிஸ் பெக்கர், உணவுவிடுதியொன்றின் படிக்கட்டொன்றில் வைத்து பெண்ணொருவருடன் ரகசியமாக உறவுகொண்டதன் மூலம் திருமண உறவுக்கு அப்பால் தனக்கு ஒரு மகள் பிறந்ததம்க கூறியுள்ளார்.
41 வயதான பெக்கர் 1999 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வை அறிவித்தபின் லண்டனில் உணவு விடுதியொன்றில் தன்னுடன் உறவு கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு பெண்குழந்தையொன்று உள்ளதாகவும் மொடல் அழகியான ஏஞ்சலா ஏர்மாகோவா எனும் பெண் சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
உணவு விடுதியொன்றில் கழிவல்றயில் தும்புத்தடி வைக்கப்படும் கபர்ட்டில் வைத்து இவ்விருவரும் உறவுகொண்டதாக அப்பேம்து செய்தி வெளியாகியது. ஆனால் படிக்கட்டில் வைத்தே தாம் உறவுகொண்டதாக அண்மையில் பேட்டியொன்றில் பொரிஸ் பெக்கர் கூறியுள்ளார்.
""கழிவறை அதற்குப் பொருத்தமான இடமாகத் தெரியவில்லை. ஆனால் கழிவறைகளுக்கு இடையிலுள்ள படிக்கட்டொன்றிலேயே அது உண்மை
யில் நடைபெற்றது.
அது எனது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசிநாள். அச்சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் அவமானமாக உணர்ந்தேன். எனது மனை
விக்கு நான் துரோகமிழைத்தை உணர்ந்தேன். அது எனது திருமண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது'' என பெக்கர் அப்பேட்டியில் கூறினார்.
ஏஞ்சலம் தனது வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருக்கவில்லை எனவும் அவருடனான தொடர்பு 5 விநாடிகள் மாத்திரமே நீடித்ததாகவும் முன்னர் பெக்கர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் அம்பலமான பின்னர் பெக்கருக்கும் அவரின் அப்போதைய மனைவி பார்பரா பெல்டஸுக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இருவரும் விவகாரத்துச் செய்தனர்.
எனினும் அவர் மூலம் பிறந்த மகள் அனா மிகவும் அழகானவள் எனவும் அக்குழந்தையை தான் மிகவும் நேசிப்பதாகவும் பெக்கர் கூறியுள்ளார்.பெக்கரின் புதிய மனைவியம்ன ஷேர்லி கேர்சன்பேர்க் விரைவில் ஒரு குழந்தைக்குத் தாயாகவுள்ளார். இது பெக்கரின் நான்காவது குழந்தையாகும்.

2 comments:

maruthamooran said...

இன்று காலையில் நான் படித்த மிகவும் சுவாரஸ்யமான செய்தி இது. (இப்படியான செய்திகளை ஏனோ தெரியவில்லை அனைவரும் அக்கறையுடன் படிக்கின்றனர்: அதற்கு அவர்களின் இயலாமையும் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது)

வானதி said...

வருகைக்கு நன்றி மருதமூரான்
இது இயலாமையல்ல ஆர்வம். இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களும் இப்படியான செய்தியைப்படிக்கிறார்கள்.நான் பதிவிட்ட செரீனாவின் செய்தியை சுமார் 700 பேர் பார்த்தார்கள் யாரும் பதிவிடவில்லை.
நன்றியுடன்
வானதி