Wednesday, October 21, 2009

நிர்வாண உடலில் கலை வண்ணம்


அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் அன்டி கோலுப் என்பவர் நிர்வாண உடலில் ஓவியம் வல்ரவதையே பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டவர். 43 வயதான அன்டி கோலுப், தலைமுதல் கால்விரல் வரை விதவிதமான உருவங்களை வரைகிறார். பலரை ஒன்றிணைத்து அவர்களின் உடலில் ஓவியங்கள் வரைவதிலும் அவர் பெயர் பெற்றவர். அண்மையில் அத்தகைய ஓவியங்களை வைத்து கண்காட்சியொன்றை யும் நடத்தினார்.
ஆனால், தனிப்பட்ட ரீதியில் கட்டணம் பெற்றுக்கொண்டும் ஓவியங்கள் வரைகிறார்.
கடைத்தெருவுக்கு பெயின்ற் பிரஸ் என்பனவற்றுடன் செல்வார். ஓவியம் வரைந்து கொள்ள விரும்பும் நபர்களின் உடல்கள்தான் இவரின் கென்வாஸ்.
""10 வருடங்கள் தொழில்சார் ஓவியராக விளங்குகிறேன். 4 வருடங்களாக மனிதர்களின் உடலில் ஓவியம் வரைகிறேன். சாதாரணமாக ஒருவரின் உடலில் வரைவதற்கு 4 மணித்தியாலங்கள்வரை செல்லும். நான் 30 நிமிடத்தில் வரைந்து விடுவேன். பார்ட்டி நிகழ்வுகளிலோ ஊர்வலங்
களிலோ அதிக எண்ணிக்கையானோர் ஓவியம் வரைந்துகொள்ள விரும்பினால் இன்னும் வேகமாக வரைந்துவிடுவேன்.
பெரும்பாலும் பெண்கள்தான் தமது உடலில் ஓவியம் வரைந்துகொள்ள வருகின்றனர். சிலவேளை ஆண்களும் வருவதுண்டு.
தனது மனைவிக்கு அல்லது காதலிக்கு பிறந்தநாள் பரிசாக ஓவியம் வரைந்துகொள்ள அழைத்து வருபவர்களும் உண்டு'' என்கிறார் கோலுப்.

1 comment:

Jawahar said...

நிர்வாணமே ஒரு ஓவியம்தான். அதை ஓவியம் கொண்டு மறைப்பது அநியாயம்!

http://kgjawarlal.wordpress.com