Monday, August 24, 2009

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ்








மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பஹாமஸ் தீவுகளில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் ஸ்வீடன், மிஸ் கொசாவோ, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்சர்லாந்து, மிஸ் அமெரிக்கா, மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆப்பிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷியா ஆகிய 15 அழகிகள் தகுதி பெற்றனர்.இதில், வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பட்டம் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவைச் சேர்ந்த அழகியே பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெபானியாவுக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசூலாவின் டயானா மென்டெஸ் கிரீடம் சூட்டினார். முதல் ரன்னர் ஆக மிஸ் ஆஸ்திரேலியா ராச்சல் பின்ச், மிஸ் பியூர்டாரிகோ மாய்ரா மாடோஸ் பெரேஸ், 2வது ரன்னர் ஆக மிஸ் கொசாவோ கோனா டிராகுஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அழகிப் பட்டங்களை வெல்வதில் வெனிசூலா புதிய சாதனையும் படைத்துள்ளது. இதுவரை வெனிசூலா ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்றுள்ளது. இதுதவிர ஐந்து மிஸ் வேர்ல்ட், நான்கு மிஸ் இன்டர்நேஷனல் பட்டங்களையும் அது வென்றுள்ளது. வேறு எந்த நாட்டு அழகியும் இவ்வளவு அதிக பட்டங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments: