Sunday, August 9, 2009

சர்வக்ஞமூர்த்தி


உலகில் அறிவியில் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும், முன்னோர்களின் முத்தான கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது இன்று வரை குறையவில்லை. சமூகத்தின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர்கள் ஏராளம். அந்த வரிசையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ¬ஈரடியில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலை, தனது 1,330 குறள் மூலம் வழங்கி, வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
அதே வரிசையில், தெலுங்கு மொழியில், 1352ம் ஆண்டு பிறந்த வேம்மண்ணா, சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக கவிதைகள் வடித்து வழங்கி, 1430ல் மறைந்த இவர், சமூக நீதியை வலியுறுத்தி பல நூறு பாடல்களை வடித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 16ம் நூற்றாண்டில் தோன்றிய சர்வக்ஞமூர்த்தி என்ற தத்துவ கவிஞர் சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை தன்னுடைய கவிதைகள் மூலம் சாடியுள்ளார்.
கேரளாவில் 18ம் நூற்றாண்டில் நாராயணகுரு பிறந்து ஆன்மீகத்தோடு சமூக பற்றையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் நால்வரும் வெவ்வேறு மொழியை சார்ந்திருந்தாலும், இவர்களின் கருத்துக்கள் ஒட்டு மொத்தமாக மனிதர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சர்வக்ஞமூர்த்தி: சர்வக்ஞர் (சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழிகளில் முற்றும் துறந்தவர், அனைத்தும் அறிந்தவர் என்று பொருள்). இவர் மூன்று வரிகளில், வசன வடிவில், ஆன்மீகத்துடன் கலந்த சமூக சிந்தனையுள்ள கவிதைகளை, கன்னட மொழியில் எழுதியுள்ளார்.
கன்னட வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, தார்வார் மாவட்டத்தில் கடந்த 16ம் நூற்றாண்டில், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த விதவை தாய்க்கும், சைவ பிராமண தந்தைக்கும், வனப்பகுதியில் சர்வக்ஞர் பிறந்ததாகவும், இவரது இயர் பெயர் பசுபதி தத்தா என்று தெரிய வருகிறது.
பிறந்த சில ஆண்டுகளில் பெற்றோரை பிரிந்த பசுபதி தத்தா, ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார். இவரது பயணத்தில் மக்களின் துயரங்களை கண்டு கலங்கியபடி, பாடல் புனைந்துள்ளார். அப்பாடல் முடியும்போது சர்வக்ஞ... என்று முடித்துள்ளார். இதன் காரணமாக இவரை சர்வக்ஞ மூர்த்தி என்று அழைக்க தொடங்கினர்.
சர்வக்ஞர் எழுதிய மூன்று வரி கவிதைகள் மொத்தம் 2 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளன

1 comment:

தினேஷ் ராம் said...

"சர்வக்ஞ" என்றால் என்ன அர்த்தம்?