Tuesday, August 4, 2009

சஃபீனா முதலிடம் முன்னணி வீராங்கனைகள் விமர்சனம்


ஒரு கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் கூட வெல்லாது தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வரும் ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா மீது முன்னணி வீராங்கனைஅகளான ஜெலெனா ஜான்கோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் விமர்சனம் வைத்துள்ளனர்.

செரீனா வில்லியம்ஸ், ஒரு முறை, மக்களின் நம்பர் ஒன் நானே என்று கூறி சஃபீனாவை வெறுப்பேற்றினார்.

முன்னாள் நம்பர் 1 வீராங்கனையும் செர்பிய டென்னிஸ் நட்சத்திரமுமான தினாரா ஜெலெனா ஜான்கோவிச் "எனக்கு பிறகு நம்பர் ஒன் இடத்திற்கு ஒருவர் வரவேண்டுஎன்றால் அது செரீனா வில்லியம்ஸ்தான், நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ ஒருவர் முழுத் தொடரையும் வெல்ல வேண்டும், அதே போல் நம்பர் ஒன் என்றால் வில்லியம்ஸ் சகோதரிகளை வீழ்த்த வேண்டும், அந்த வகையில் வில்லியம்ஸ் சகோதரிகள்குக்கு எதிராக நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன்." இவ்வாறு சஃபீனாவை இடித்துரைத்துள்ளார் ஜெலெனா ஜான்கோவிச்.

வில்லியஸ் சகோதரிஅகள் இருவருக்கும் எதிராக சஃபீனா 2- 9 என்று பிந்தங்கியுள்ள நிலையில் ஜான்கோவிச் 8- 8 என்று சம நிலையில் உள்ளார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா:

"தரவரிசைகளை நான் உருவாக்கவில்லை. அவர்களுக்கு கேள்விகள் இருந்தால் அதனை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பிடம் கேட்கட்டும். ஒரு ஆண்டு முழுதும் ஒருவர் எவ்வளவு போட்டிகளை வெல்கிறார் என்பது பொறுத்தே தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. நான் ஆண்டு முழுதும் விளையாடுகிறேன், கிராண்ட் ஸ்லாம் தொடர்களிலும் சிறப்பாகவே விளியாடி வருகிறேன். செரீனாவையும் வீனஸையும் வெற்றி பெற்றால் மட்டுமே நம்பர் ஒன் இடத்திற்கு வந்து விடமுடியாது, ஆண்டு முழுதும் சிறப்பாக விளியாடினால்தான் இந்த இடத்தை பிடிக்க முடியும். ஒருவரது சாதனைகள் அந்த இரண்டு வீராங்கனைகளுக்கு எதிராக எப்படி உள்ளத் என்பதைப் பொறுத்து தரவரிசைகள் நிர்ணயிக்கப்படுவதில்லை." என்று பொரிந்து தள்ளியுள்ளார் தினாரா சஃபீனா.

மேலும் ஜெலெனா ஜான்கோவிச், வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு எதிராக வைத்திருக்கும் சாதனை வெற்றிகள் குறித்து சஃபீனா கூறுகையில் "ஜெலெனா, வில்லியம்ஸ் சகோதரிகளை கிராண்ட் ஸ்லாம் இறுதி போட்டியில் வீழ்த்தியுள்ளாரா? இல்லை. அடுத்த மட்ட டென்னிஸ் தொடர்களில் அவர்களை வீழ்த்துவது போதுமானதல்ல" என்று எதிர் டோஸ் விட்டார்.

No comments: