வேலூரில் மனிதன் என்ற வித்தியாசமான பெயர்கொண்ட சுயேச்சை வேட்பாளர் தேர்தல் களத்தை கலக்கி வருகிறார். ஜனாதிபதி ஆகும் வரை பின்னால்தான் நடப்பேன் என்று சபதம் செய்துள்ள இவர், தற்போது மக்களவை தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்திருக்கிறார்.
வேலூர் கலெக்டர் ஆபீசுக்கு நேற்று மனிதன் வந்தார். தனக்கு சின்னமாக பார்லிமென்ட் கட்டிடம், தாஜ்மகால் அல்லது ஐஸ்வர்யா ராயை ஒதுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டார். ‘அப்படி எல்லாம் ஒதுக்க முடியாது. தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்களில் ஒன்றைத்தான் தர முடியும் என்று கூறி அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.
சுயேச்சைகளுக்கு இந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 59 சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
அலமாரி, பலூன், வாழைப்பழம், கூடை, கிரிக்கெட்மட்டை, மட்டை பந்தடி வீரர், மின்கல விளக்கு, கரும்பலகை, ரொட்டி, கைப்பெட்டி, பிரஷ், கேக், புகைப்பட கருவி, மெழுகுவர்த்திகள், கேரட், கூரை மின்விசிறி, கோட்டு, தேங்காய், சீப்பு, கட்டில், கப் அண்ட் சாஸர், டீசல்பம்ப், சிவிகை, மின்கம்பம், முள்கரண்டி, சிறுமியர் சட்டை, வாணலி, வாயுசிலிண்டர், வாயுஅடுப்பு, கண்ணாடி தம்ளர், ஆர்மோனியம், தொப்பி, ஐஸ்கிரீம், இஸ்திரிபெட்டி, கூஜா, கொதிக்கெண்டி, பட்டம், சீமாட்டி பணப்பை, கடிதப்பெட்டி, மக்காச்சோளம், முரசு, பிரஷர்குக்கர், ரயில்இன்ஜின், மோதிரம், சாலைஉருளை, ரம்பம், கத்தரிக்கோல், தையல் இயந்திரம், இறகுப்பந்து, சிலேட், தேக்கரண்டி, ஸ்டூல், மேஜை, மேஜைவிளக்கு, தொலைக்காட்சிபெட்டி, கூடாரம், வயலின், ஊன்றுகோல், ஊதல்.
இந்த சுயேச்சை சின்னங்களில் ஏதாவது 3 சின்னங்களை குறிப்பிட வேண்டும். அதில் ஒரே சின்னத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
1 comment:
அப்போ நம்ம வீரத்தளபதி ஜேகே ரித்தீஷின் சின்னம் நமீதாவா?
Post a Comment