Monday, November 21, 2011

அபசகுன அரண்மனை?


பிரித்தானிய அரச குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாக விளங்கும் கென்சிங்டன் அரண்மனை பற்றிய பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் தம்பதியர் தங்கள் இல்லற வாழ்க்கையை இந்த அரண்மனையிலேயே தொடங்கவுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னர் அங்கு குடியிருந்த அரச குடும்பங்களுக்கு நேர்ந்த கதி பற்றிய வரலாற்று ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
மரண வேதனையால் துடித்துக் கொண்டிருந்த கரோலின் மகாராணி ஒருசில நாட்களின் பின்னர் இரத்தம் நச்சுத்தன்மை அடைந்த நிலையில் கொடூரமான முறையில் மரணத்தை தழுவிக் கொண்டார். அவர் எட்டாவது தடவையாக கர்ப்பமடைந்ததன் விளைவாக அவர் தொப்பிள்கொடி குடலிறக்க நோயால் அவஸ்தைப்பட்டு வந்தார். அவரைச் சுற்றி மருத்துவர் படையொன்று நின்றிருந்த போதிலும் கூட அரச குடும்ப கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் என்பதனால் அவர்களால் மகாராணியைப் பரிசோதிக்க முடியாமலிருந்தது. இறுதியாக அவர்கள் மகாராணியின் வயிற்றுப் பகுதி ஊடாக குடலின் ஒரு பகுதியை முன்னுக்கு நகர்த்துவதற்கு உறுதிபூண்டனர். ஆயினும், குடற் பகுதியை பின்னுக்குத் தள்ளுவதிலும் பார்க்க அதனைத் துண்டித்து விடுவதென்ற அவரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்மானத்திற்கு வந்தனர். அது நடந்து எட்டு நாட்களின் பின்னர் இரண்டாம் ஜோர்ஜ் மன்னரின் அன்பு மனைவி கரோலின் மகாராணி தனது இறுதி மூச்சை விட்டார். இந்த பயங்கரம் நிறைந்த மரணப்படுக்கை காட்சி கடந்த 1737 ஆம் வருடம் அரங்கேறியது. ஆயினும் முன்பொருகாலத்தில் கென்சிங்டன் அரண்மனையின் அழகுராணியாக விளங்கிய கரோலின் மட்டுமல்ல, அந்த அரண்மனையின் 320 வருடகால வரலாற்றில் அதன் சுவர்கள், முற்றங்கள், அறைகளுக்குச் செல்லும் நடைபாதைகள் ஆகியனவும் இத்தகைய சோகமயத்திற்குள்ளானவையே.
வரலாற்றுப் புகழ்மிக்க அரச குடும்ப அரண்மனைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வை அதிகாரி லூசி வேர்சி இதுபற்றி குறிப்பிடுகையில்,
கென்சிங்டன் மாளிகையில் குடியிருந்துள்ளோரில் ஆகக் குறைந்தது ஏழு இளவரசிகள் சோக வாழ்வு வாழ்ந்ததாகவும் அல்லது வைத்திய நிலைக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பேரழிவுகள் மூலம் இந்த அரண்மனை சபிக்கப்பட்டதொன்றாக விளங்குவதுடன், கெடுதி செய்யும் ஆவி ஒன்று கூட இங்கிருக்கலாமெனவும் அஞ்சப்படுகின்றது.
கடந்த 97 இல் இளவரசி டயானா துர்மரணத்தைத் தழுவிய பின்னர், கென்சிங்டன் அரண்மனையின் வாயிற் கதவுகளுக்கு வெளியே எட்டிப் பார்த்தபடி காட்சியளிக்கும் கடலலை போன்ற பூங்கொத்துக்களை இன்றைய நாட்களில் கண்டுவியப்போர் அதன் கம்பீரமான முகப்புத் தோற்றத்தில் மயங்கி விடுகின்றனர்.
ஆயினும், இத்தகைய சிறப்பு அம்சங்களுக்குப் பின்னால், இளவரசர் வில்லியத்தின் தாயாரான மறைந்த இளவரசி டயானாவுக்கோ திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. அத்துடன் அவரும் சீமாட்டி கத்தரினும் குடியேறவென திருத்தம் செய்யப்பட்டு வரும் 21 அறைகள் கொண்ட அந்த மூன்றடுக்கு மாளிகையில் முன்னர் வசித்திருந்த அவரது பேர்த்தியான இளவரசி மார்க்ரட்டும் அனுகூலங்களும், இடைஞ்சல்களும் நிறைந்த தனது வாழ்க்கைப் பாதையை இங்குதான் கழித்திருந்தார். அறுபதுகளில் கவர்ச்சி மங்கையெனப் புகழப்பட்ட இளவரசி மார்கரெட்டும் புகைப்படக் கலைஞரான அவரது கணவர் ஸ்ணேடன் பிரபுவும் பாலே நடனக் கலைஞர் ருடோல்ப் நுரெயெவ் உள்ளிட்ட தங்கள் நண்பர்களையெல்லாம் அழைத்து விருந்து வைத்து மகிழ்ந்ததும் இந்த அரண்மனையில்தான். அவர்களிருவரினதும் விவாகரத்திற்குப் பின்னர், இளவரசி மார்கட் அதே அறைகளில் பிரபல நடிகர் பீட்டர் செல்லேர்ஸ் மற்றும் அவரின் விளையாட்டுப் பையன் றொடி லெவெனின் ஆகியோருடன் அவர் தனித்திருந்ததாக அவருக்கு அபகீர்த்தி உண்டாக்கும் புரளி கிளப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இத்தகைய அவமானகரமான சம்பவங்கள் குடியிருந்த அரண்மனையாகவும் இது இருந்துள்ளது.
கடந்த 1690 களில் கென்சிங்டன் அரண்மனை ஒரு கிராமிய ஏகாந்த இடமாக அதன் சுத்தமான காற்றோட்ட வசதி காரணமாக அனைவராலும் கருதப்பட்டிருந்தது. 1690 இல் மூன்றாம் வில்லியமும் மகாராணி மேரியும் பாரம்பரியமாக அரச பரம்பரையினர் வசித்து வந்த வெள்ளை மண்டப அரண்மனையை விட்டு தாங்கள் கென்சிங்டனில் வாங்கியிருந்த வீட்டை சென். போல் தேவாலயத்தின் கட்டிடக் கலைஞரான சேர் கிறிஸ்தோபர் ரென்னின் உதவியுடன் மீள் வடிவமைத்து அங்கேயே குடியிருந்தனர். ஒரு வார காலத்திற்குள்ளேயே மகாராணி மேரி தனது 32 ஆவது வயதில் பெரிய அம்மைநோயால் பீடிக்கப்பட்ட நிலையில் இறந்து போனார்.
மூன்றாம் வில்லியமும் அவரது கணவர் ஜின்ஸ் அரண்மனையில் கடந்த 1702 இல் காலமானார். அதனைத் தொடர்ந்து, கென்சிங்டன் அரண்மனையுடன் தொடர்புடைய மறைந்த இளவரசி மார்கிரட்டின் சகோதரியான ஆன் டென்மார்க் இளவரசர் ஜோர்ஜ் உடனான திருமண பந்தத்தின் மூலம் 17 தடவைகள் கர்ப்பம் தரித்து, முடிக்குரிய வாரிசொன்றைப் பெற்றுக் கொடுக்க முனைந்தார். ஆயினும் அவரது பிள்ளைகளில் எவருமே உரிய பராயத்தை அடையவில்லை. அவற்றுள் சில குறைப் பிரசவங்களாகவும், சில இறந்த நிலையில் பிறந்தனவாகவும் ஏனையவை பெரிய அம்மை நோயால் சிறுபராயத்தில் இறந்தும் விட்டிருந்தன.
நீண்டகாலம் வசித்து வரும் இளவரசர் வில்லியமும் தனது 14 ஆவது வயதில் மர்மமான நோயொன்றால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், அவரது தாயாரான இளவரசி டயானாவும் 14 ஆண்டுகள் கழிந்த நிலையில் மணமுடைந்து கணவர் இளவரசர் சாள்ஸைப் பிரிந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியுற்று பிரான்சில் கார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தமையும் கவனிக்கத்தக்கது.

மெட்ரோநியூஸ்

Friday, November 4, 2011

சர்வாதிகாரிகளின் இறுதி நிமிடங்கள்


சதாம் ஹுசைன், டிசம்பர் 30, 2006
தூக்கிலிடுபவரின் சுருக்கி கயிற்றைக் கையாள்வதில் அமெரிக்காவுக்கும் ஈராக்கிற்கும் பொதுவானதொரு ஒற்றுமை காணப்படுகிறது.
ஈராக்கின் சர்வாதிகாரியான சதாம் ஹுசைன் சாமானியமான தூக்கு மேடையில் நின்ற அந்தக் கடைசி சொற்ப நிமிடங்கள் என்றுமே மறக்க முடியாதவை. இவரும் லிபியாபின் கேர்ணல் கடாபியைப் போன்றே அழுக்கு நிறைந்த வடிகான் துளையொன்றில் பயத்தினால் நடு நடுங்கிய நிலையில் கடந்த 2003 டிசம்பரில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர் குறிப்பிட்டதைப் போன்று அவர் ஒரு எலியைப் போன்றே பிடிக்கப்பட்டிருந்தார். நீண்ட தாடியுடன் மிகவும் மெலிந்த நிலையில் அநாதரவான சதாம் 250 நாட்களாக தலைமறைவாகவே அங்குமிங்குமாக அலைந்து தப்பியோடிய வண்ணமிருந்தார். கடந்த 2006 நவம்பர்5ஆம் திகதி ஈராக்கிய விசேட நியாய விசாரணைச் சபை அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பிரகாரம், கடந்த 2006 டிசம்பர் 30 ஆம் திகதி முகமூடி அணிந்திருந்த மனிதர்களால் அவர் கொங்கிறீற்றிலான மண்டபத்திலிருந்த அந்த தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சதாம் ஹுசைன் வெள்ளை நிற சேர்ட்டும் கறுத்த மேலாடையும் அணிந்த நிலையில் தனது தலையையும் கழுத்தையும் மறைக்கும் தொப்பியை அணிய மறுத்ததுடன், ""இறைவனே பெரியவன்'' என சத்தமிட்டார். அங்கு நின்றிருந்த போர் வீரர்களோ அமைதி காக்குமாறு நீதிபதி ஒருவர் கோரும்வரை அவரை இகழ்ந்த வண்ணமே இருந்தனர். சதாம் ஹுசைன் தனது கையில் குர்ஆன் நூலின் பிரதியொன்றை பற்றிப் பிடித்தபடி நின்றபோது அவரது கழுத்தைச் சுற்றியிருந்த சுருக்குக் கயிறு தன் கடமையைச் சரிவரச் செய்தது. ஆமாம் அவரது கழுத்தை அது இறுக்கிக் கொண்டதும் அவரின் தொண்டை முடிச்சு அறுந்தே போனது. அவரது கழுத்து நெரிக்கப்பட்ட அந்தக் கணப் பொழுதில் சத்தமொன்று கேட்டது. ஆமாம்! சதாமின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்தக் கணப் பொழுதில் இதயத் துடிப்பு இருக்கின்றதா என சோதித்துப் பார்த்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக இறுதியில் அறிவித்தார்.

அடொல்ப் ஹிட்லர் ஏப்ரல் 30, 1945
தரையில் விரிக்கப்பட்டிருந்த அந்தக் கம்பளத்தின் மீது இரத்தம் சொட்டச் சொட்டாக வடிந்து கொண்டிருந்ததுடன் சுட்டெரிக்கப்பட்டிருந்த வாதுமைக் கொட்டைகளின் மணம் காற்றில் கலந்த வண்ணமிருந்தது.
ஏனைய உலக நாடுகளையும் தன் காலடிக்கு கொண்டு வர அராஜக ஆட்சி புரிந்த ஜேர்மன் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லரின் அறைக்குள் அந்த ஒற்றைத் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதன் பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த முதலாவது நபர் யாரென்று தெரியுமா? அவர் வேறு யாருமல்ல ஹிட்லருக்கு ஆடை அணிகலன்களை அணிவித்து வந்தவரே தான். ஆமாம் தலைநகர் பேர்லினில் உள்ள பதுங்குக் குழியொன்றில் கடந்த 1945 ஏப்ரல் 30 ஆம் திகதி அவர் ஒளிந்திருந்தார். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதிகளில் ஒருவரான ஃபீல்ட் மார்ஷல் கெய்ட்டல் நகரைப் பாதுகாத்து வரும் தங்கள் போர் வீரர்கள் அன்றிரவு யுத்த தளபாடங்களை போட்டு விட்டு தப்பியோடவுள்ளதாக ஹிட்லரிடம் கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னரேதான் ஈவா பிரவுணை திருமணம் செய்திருந்தார் ஹிட்லர். எதிரிப் படைகளான ரஷ்யப் படைகள் தங்களை நெருங்கும் ஆபத்தை உணர்ந்த அவர்களிருவரும் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதென திட்டமிட்டிருந்தனர். தற்கொலை செய்வதற்கென தம் வசமிருந்த சயனைட் வில்லைகளை நாயொன்றுக்கும் அதன் குட்டிகளுக்கும் உண்ணக் கொடுத்து அந்த வில்லைகள் வேலை செய்கின்றனவா என்று கூட சோதித்துப் பார்த்துள்ளனர். தனது மரணத்தை நிச்சயப்படுத்தியவராக ஹிட்லர் தனது உள்ளக வட்டத்தில் இருந்த அனைவருக்கும் பிரியாவிடை கூறியதன் பின்னர் அன்று பிற்பகல் 3.30 மணியளவில் தன்னைச் சுட்டுக் கொல்ல முயன்றவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்த அந்த சர்வாதிகாரியான ஹிட்லர் தன்னிடமிருந்த அந்த பி.பி.எஸ். கைத்துப்பாக்கியால் தனது தலையில் சுட்டார். மெத்தை ஒன்றில் அமர்ந்து பின்னர் அதில் வீழ்ந்து கிடந்த அவரின் கன்னப் பொறியிலிருந்து இரத்தம் கசிந்தபடியே இருந்தது. வேறு தகவல்களின்படி அவரது தலை மேசை மீது ஒன்றில் பலமாக அடிபட்டு வீழந்ததாகவும் கூறப்பட்டது. அவரது காதல் மனைவி ஈவா பிரவுணும் தன் கணவருடன் உடன் கட்டை ஏறுவதென்று தீர்மானித்தார் போலும். ஆமாம்! வாதுவைக் கொட்டை வாசனை கொண்ட சயனைட் வில்லைகளை உட்கொண்ட அவரின் உயிரற்ற உடல் அதே அறையிலிருந்து மீட்கப்பட்டது.

ஹிட்லரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் அவர்களது சடலங்களை வெளியே எடுத்துச் சென்ற எஸ்.எஸ்.ஓ. அதிகாரிகள் அவற்றின் மீது பெற்றோலை ஊற்றி தீ மூட்டினர். இரண்டு மணி நேரமாக அவர்கள் இருவரினதும் சடலங்கள் தீக்கிரையாகிய வண்ணமிருந்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறியிருந்தார்.
நிக்கொலே சியோசெஸ்கியூ டிசம்பர் 25, 1989
ரூமேனியாவில் இன அழிப்பை மேற்ககொண்டு அடக்கு முறை ஆட்சி நடாத்திய சர்வாதிகாரியான நிக்கொலே சியோசெஸ்கியூ மற்றும் அவனது மனைவி எலீனா ஆகிய இருவரையும் சுட்டுக் கொல்வதற்கு ஏராளமான போர் வீரர்கள் நான் முந்தி நீ முந்தி என போட்டா போட்டியில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆயினும் அந்தக் கைங்கரியத்தை நிறைவேற்றுவதற்கு திருவுளச் சீட்டுக் குலுக்கல் மூலமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. கடந்த 1989 டிசம்பர் 25 ஆம் திகதி தலைநகர் புக்காரெஸ்டில் குறுகிய கால ஒத்திகையின் பின்னர் துணை இராணுவத்தினரின் துப்பாக்கிச் சன்ன ரவைகள் அந்தக் கொடிய சர்வாதிகாரியினதும் அவனது மனைவியினதும் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்தன. அந்தக் கொடூர ஆட்சியை நடாத்திய நிக்கொலேயை சுற்றிவளைத்த தங்களை மேதாவிகளென சுய பிரகடனஞ் செய்து கொண்ட அந்தக் கிளர்ச்சியாளர்கள் அவனைக் கொல்ல முயற்சித்த போது அவனும் மனைவியும் நாட்டை விட்டு தப்பியோட முனைந்தனர். ஆயினும் களர்ச்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்ட அவர்களிருவரும் திறந்த ஓர் அறையில் அடைக்கப்பட்டதுடன் சட்டவிரோத செல்வம் சேர்த்தமை மற்றும் இன அழிப்புக்காக நியாய விசாரணை நடைபெற்று தொண்ணூறு நிமிடங்களுக்குள் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
முதலில் அவர்களிவரும் தனித் தனியே சுட்டுக் கொல்லப்படுவரென அவர்களுக்கு கூறப்பட்டிருந்தது. ஆயினும் தாங்களிருவரும் ஒன்றாகவே சாக விரும்பியதால் இறுதியில் அவர்களின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட்டது. நியாய விசாரணையின் பின்னர் அவர்களிவரும் பின்னால் கயிற்றால் கட்டப்பட்ட போது, எலீனா தனது புஜங்களில் வலி ஏற்பட்டதாக முறையிட்டாராம். ஆயினும் அவர்களிடம் இரக்கம் எதுவும் காட்டாத போர் வீரர்கள் ""இப்போது உங்களுக்கு எவருமே உதவப் போவதில்லை' எனக் கூறியதுடன் அவர்களை வெளியே செல்ல விட்ட பின்னர் ""வெட்கம், வெட்கம்'' என உரத்துக் கத்தினர். அவர்களைச் சுட்டுக் கொல்லக் காத்திருந்த அந்த இராணுவ வீரர்களுக்கு தங்கள் துப்பாக்கிகளை தானாகவே சுடுமளவுக்கு தயாராக்கி வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவர்களின் முதலாவது துப்பாக்கி ரவைகள் சர்வதிகாரி நிக்கொலேயின் முழங்கால்களையும் அதன் பின்னர் அவனது நெஞ்சையும் பதம் பார்த்ததுடன் எலீனாவும் அடுத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இரையானார். இருவரும் தரையில் வீழந்து சடலங்களாகக் கிடந்தனர். எலீனாவின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. என்ன பரிதாபம்!
பெனிட்டோ முசோலினி, ஏப்ரல் 28, 1945
இத்தாலியில் அடக்கு முறை ஆட்சி புரிந்த பெனிட்டோ முசோலினி, தனது மனைவி கிளாரா பெட்ராக்கி மற்றும் 15 பேரடங்கிய தனது பாசிஸவாதிக் கும்பல் ஒன்றுடன் சுவிட்சர்லாந்திற்குத் தப்பியோட முனைந்தான். ஜேர்மனிய இராணவச் சீருடையொன்றில் மாறுவேடம் பூண்டிருந்த அவனை கம்யூனிஸ அதிகாரிகளும் போர் வீரர்களும் சூழ்ந்து தடுத்து நிறுத்தினர். அடுத்த நாள் ஜியூலினோ டிமொஸக்ரா எனும் கிராமத்தில் அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தவர்களுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டான். இறுதிக் கட்டத்திலும் எதற்கும் அடங்காத அந்தக் கொடூர சர்வாதிகாரி, தன்னைச் சுட்டுக் கொல்லவென பணிக்கப்பட்ட அந்தச் சிப்பாயிடம் ""எனது நெஞ்சில் சுடு'' என அலறியவாறு கூறினானாம். அந்தச் சிப்பாயும் நேரத்தை வீணாக்காமல் தனது துப்பாக்கியை இயக்கினான். நிலத்தில் வீழ்ந்து கிடந்த முசோலினியின் உடம்பில் உயிர் இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்ததை அவதானித்த அந்தச் சிப்பாய் தனது கால்களை நீட்டி வைத்து நடந்து சென்று முசோலினியின் நெஞ்சில் மீண்டும் துப்பாக்கியால் சுட்டான்.
அவனது உயிரற்ற உடல் அவனது மனைவி மற்றும் ஏனையோரது உடல்களுடன் மிலான் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்த நடு இராத்திரியில் பெற்றோல் நிரப்பு நிலையமொன்றுக்கு வெளியே இறுதிச் சடங்குகளெதுவுமின்றி அடக்கம் செய்யப்பட்டது. அவனது வெற்றுடல் தரையில் கிடந்தபோது இத்தாலிய மக்கள் தம்மை வாட்டி வதைத்த அந்த சர்வாதிகாரி மீது மணித்தியாலக் கணக்கில் கல்லெறிந்தும் பழி தீர்த்தனராம். ஆமாம் மரணத்தின் பின்னும் அவர்கள் அவனுக்கு மரியாதை காட்டவில்லை'' அவர்கள் தங்கள் கால்களால் முசோலினியின் இறந்த உடல் மீது நடாத்திய தாக்குதலால் அவனது தலைப் பகுதி அடையாளங் காண முடியாதவாறு சிதைவடைந்திருந்தது. அதன் பின்னர் அவர்கள் அனைவரதும் சடலங்களும் இறைச்சி தொங்க விடப் பயன்படும் கொளுக்கிளில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டன. அந்தக் காட்சி கொடூர ஆட்சியிலிருந்து மீளப் பெற்ற இத்தாலி மக்கள் தங்கள் சந்தோஷத்தைக் கொண்டாடும் நிகழ்வாகவே பார்க்கப்பட்டது'' ஆமாம்! ஆடம்பர வாழ்வு வாழ்ந்து, சர்வாதிகார ஆட்சியைத் தமதாக்கிக் கொண்ட அந்தக் கொடிய சர்வதிகாரி முசோலினியும் அவனது பாசிஸ கும்பலும் மண்ணோடு மண்ணாக மாண்டமை குறித்து யார்தான் கவலைப்படப் போகின்றார்கள்?

இயன் அந்தனிஸ் கியூ ஜுன் 1, 1946
சர்வாதிகாரிகள் அடிக்கடி தவறான நம்பிக்கை கொண்டு இலகுவில் ஏமாறுபவர்களாக விளங்கியதாக வரலாறு கூறுகின்றது. இதற்கு ரூமேனியாவை சர்வாதிகார முறையில் கொடிய ஆட்சி நடாத்திய இயன் அந்தனிஸ் கியூ விதிவிலக்கானவன் அல்ல. ஆமாம்! அவனை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய‌ வேளையிலும் கூட அவன் தான் அணிந்திருந்த தொப்பியை மேல்நோக்கி உயரப் பிடித்துக் கொண்டிருந்தானாம்.

ரூமேனியாவின் போர்க் காலத் தலைவனாக விளங்கிய அவனது ஆட்சியின்போது 400,000 மக்களின் மரணங்களுக்குப் பொறுப்பாளியாக இருந்த அவனுக்கெதிராக கடந்த 1946 இல் போர்க் குற்றங்கள் புரிந்தமை சமாதானத்திற்கு எதிராகச் செயற்பட்டமை; மற்றும் சதிப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நீதி விசாரணை நடத்தப்பட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது தான் தாமதம், அவனது கொடூர ஆட்சிக்குத் துணை போயிருந்த மேலும் மூவருடன், அவன் வயலொன்றுக்குள் தூக்கி வீசப்பட்டான். அந்த நால்வருக்கும் எதிரே குறி வைத்த நிலையிலிருந்த துப்பாக்கிதாரர் துப்பாக்கியின் விசையை அழுத்தியதும் ஒரு வினாடிக்குள் ஒருவர் பின் ஒருவராக அவர்கள் மண்ணில் சாய்ந்தனர். அவர்கள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்த அந்தச் சடலங்களின் அருகில் சென்ற அதிகாரி ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் பட படவென்று பல தடவைகள் சடலங்களின் மீது சரமாரியாக சட்டு சன்ன மழை பொழிந்தாராம்.

ரபேல் ட்ருஜில்லோ, மே 30, 1961

சிக்காகோவில் ஆயதமேந்திக் கொடும் தொழில் புரியும் கூட்டத்தினர் பற்றிய திரைப் படத்தில் வரும் ஒரு காட்சியைப் போன்று அந்த இருண்ட வீதியில் தனது காரோட்டியால் செலுத்தப்பட்ட அந்தக் காரில் அமர்ந்திருந்த டொமினிக்கன் குடியரசின் சர்வாதிகாரியான ரபேல் ட்ருஜில்லோ மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. தன் மீதான முதல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகாத அவன் அந்த துப்பாக்கி ஏந்திய ஏழு பேர் மீதும் எதிர்த்து துப்பாக்கியால் சுட்டான். ஆயினும் நாட்டின் கோடீஸ்வரரின் உத்தரவின் பேரில் அவனை காருக்கு வெளியே இழுத்தெடுத்த அவர்கள் விரைவாக அவனைக் கொன்றொழித்தனர்.
தமிழில் ""எஜமானன்'' என்று பொருள்படும் எல் எஜபே' (El Jefe) என அழைக்கப்பட்ட ட்ருஜில்லோ கடந்த 1930 1961 வரையான முப்பதாண்டு கால கொடூர ஆட்சியை டொமினிக்கன் குடியரசில் நடத்தி வந்ததுடன் சித்திரவதைகளும் கொலைகளுமே அவனது அரசியல் ஆயுதங்களாக இருந்தனவாம். கடந்த 1937இல் பல்லாயிரக்கணக்கான ஹெய்ட்டி இன மக்கள் அவனது உத்தரவின் பேரில் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயினும், ""ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்'' என்பது போல, சொல்லொணாத் துன்ப, துயரங்கள் பட்ட மக்களும் என்றோ ஒரு நாள் வெகுண்டெழுந்து இத்தகைய சர்வாதிகாரிகளைச் சங்காரஞ் செய்வது வரலாற்று உண்மையே.

சர்வதிகாரி இந்த வழியால் தான் காரில் பயணிக்கின்றான் என்ற தகவல் கிடைத்ததும் அந்தத் துப்பாக்கி நபர்கள் ஏழு பேரும் அவனை வழிமறித்து, துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். ஆயுதம் தரித்திருந்த அவனது காரோட்டி மீது சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதில் அவன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டான். ஆயினும் காயப்பட்ட ருஜில்லோ அவர்கள் மீது எதிர்த் தாக்குதல் நடாத்தத் தொடங்கியதும், அறுபது துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அந்தக் காருக்கு வெளியே இழுத்தெடுக்கப்பட்ட அந்தச் சர்வதிகாரி வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

ஜோசப் ஸ்டாலின்
கடந்த 1953 மார்ச் 5 ஆம் திகதி தனது 74 ஆவது வயதில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் நான்கு நாட்களாக முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த சர்வதிகாரி ஜோசப் ஸ்டாலின் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
ஆமாம்! ரஷ்யாவில் 20 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை பட்டினி, வாந்தி பேதி போன்றவற்றால் மரணிக்க வைத்த சர்வதிகாரி என மதிப்பிடப்படுகின்ற அதேவேளையில் வரலாற்றாசிரியர்கள் சிலரின் கூற்றுப்படி இவன் 60 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் மரணத்திற்குக் காரண கர்த்தாவாக இருந்துள்ளான் எனவும் அறிய வருகின்றது.
அவர்களில் 14.5 மில்லியன் மக்கள் பட்டினிச் சாவையும் அவனது அரசியலை வெறுத்த 9.5 மல்லியன் மக்கள் தூக்குத் தண்டனையையும் எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஈவிரக்கமற்றவனாக விளங்கிய இந்தச் சர்வாதிகாரி தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் கொன்று குவிப்பதில் இன்பம் அனுபவித்தான். 1930 களில் மக்களின் எதிரிகள்'' என்று முத்திரை குத்தப்பட்டோர் ஆயிரக்கணக்கில் சிரச் சேதம் செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் வாந்தி பேதி நோயால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 1934 இல் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவிழ்த்துவிடப்பட்ட அவனது அடக்கு முறைக்கு இறுதியாக இரையாகியவர் ஸ்டாலினின் பரம வைரியான சேர்ஜி கிரோவ் (Sergey Kirou) ஆவார். வயோதிபத்தின் பிடியில் சிக்கிய சர்வாதிகாரி ஸ்டாலின் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் வீழ்ந்த நிலையில் நான்கு நாட்களாக தன்னால் புரியப்பட்ட மகா பாவங்கள் சூழ்ந்த நிலையில் இறுதியில் மௌனமாக மரணத்தைத் தழுவிக் கொண்டான்.
மெட்ரோநியூஸ் 04/11/11

Thursday, November 3, 2011

700 ஆவது கோடி குழந்தைபிலிப்பைன்ஸில் பிறந்தது

.
உலகின் மொத்த ஜனத் தொகை நேற்றுடன் எழுநூறு கோடியாகியது.நேற்று பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவமனையொன்றில் பிறந்த டானிகா மே காமாச்சோ எனும் பெயருடைய பெண் குழந்தை பிறந்ததன் மூலம் உலகின் ஜனத்தொகை 700 கோடியானது.
தனது தலையின் மூலம் வெப்பம் வெளியேறாவண்ணம் தொப்பியொன்றை அணிந்து காணப்படும் டானிக்காவை அவளது பெருமைக்குரிய பெற்றோர் பார்த்து ஆனந்தப்படுகையில் அவளோ தனது சின்னஞ்சிறு கைகளால் தாயõரின் உடலை அணைத்த படி படுக்கையில் கிடக்கின்றாள்.
தாயாரான காமலேக்கும் தந்தையாரான புளோரன்ரேக்கும் அவளது இந்தப் பிறப்பு முக்கியமானது மட்டுமின்றி உலகில் பிறந்துள்ள எழுநூறாவது கோடியை அடையாளப்படுத்தும் வகையில் பிறந்துள்ள குழந்தைகளில் டானிகாவும் ஒருவராகி உள்ளமை அவர்களைக் குதூகலிக்க வைத்துள்ளது.
இந்த உலகில் அதிகூடிய சனத்தொகை கொண்ட நாடுகளில் பன்னிரண்டாவது நாடாக விளங்கிவரும் பிலிப்பைன்ஸ் உலகின் ஏனைய நாடுகளுடன் இøணந்து கொண்டாடும் முகமாக குறித்த மருத்துவமனையில் எழுநூறாவது கோடியை அடையாளப்டுத்தும் வகையில் பிறந்துள்ள டானிகாவை வரவேற்றிட எளிய முறையில் வைபவமொன்றையே நடாத்தியுள்மை குறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவு தொடங்குவற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் இந்த உலகிற்கு எழுநூறாவது கோடியைக் குறிக்கும் அடையாளச் சின்னமாக புதிய வரவாக வந்துதித்த டானிக்காவுக்கு தலைநகர் மணிலாவில் உள்ள ஜோஸ் பெல்லா ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுஅவளின் பிரசவம் கூட வழமைக்கு மாறான விதத்தில் நிகழ்ந்திருப்பதும் சுவாரஸ்யம்தான். ஆமாம் பிரசவ அறைக்கும் வெகுஜன ஊடகங்களின் கமெராக்களின் ஒளி தெறிக்கும் மின் குமிழ்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும்போதே ஐந்து இறாத்தல் ஐந்து அவுன்ஸ் எடையுள்ளவளாக டானிக்கா பிறந்ததாள். இந்த வரலாற்றுப் பிரசவம் பற்றி அவளது தாயாரான காமிலோ தாலுரா கூறுகையில்,
""அவள் அழகாகக் காணப்படுகின்றாள். இந்த உலகின் எழுநூறாவது கோடி குழந்தையாக அவள் பிறந்துள்ளாள் என்பதனை என்னால் நம்ப முடியாதுள்ளது'' என்றார்.
டானிக்கா புளோறன்ரே காமிலே தம்பதியரின் இரண்டாவது குழந்தையாவார். தொலைக்காட்சி குழுவினர் மற்றும் படப்பிடிப்பிப்பாளர்கள் புடை சூழ அந்தப் பிரசவ அறையின் மூலை ஒன்றில் வெள்ளை நிற மருத்துவமனை ஊழியர்கள் அணியும்மேலங்கியுடன் புளோறன்ரே காணப்பட்டார்.
அத்துடன் பிலிப்பைன்ஸில் கடமையாற்றிவரும் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் இந்த வரலாறு படைத்த அன்புப் பெற்றோருக்கும் குழந்தை டானிக்காவுக்கும்சிறிய கேக்(Cake) ஒன்றை அன்பளிப்புச் செய்தனர். இது மட்டுமா? பிலிப்பைன்ஸில் உள்ள நன்மை பயப்பவர்களால் டானிக்காவின் எதிர்காலக் கல்விக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் அவளது பெற்றோர் பொதுக் களஞ்சியசாலையொன்றை ஆரம்பிக்கவென வாழ்வாதாரப் பணப்பொதி ஒன்று உள்ளிட்ட பல அன்பளிப்புகளும் வழங்கப்பட்டுள்ளனவாம்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் கடந்த 1999 இல் அறுநூறாவது கோடி குழந்தையாகப் பிறந்து தற்போது தனது 12 ஆவது வயதில் ஆறாம் தரக் கல்வி பயின்றுவரும் கொரிசே மீ கியவராவும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இது குறித்து கியூவரா கருத்து வெளியிடுகையில்,""இந்த அழகு குட்டித் தேவதையைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவளும் என்னைப் போலவே வளர்ந்து இந்த உலகில் உள்ள அனைவராலும் அன்பு பாராட்டப்படுவாள் என நம்புகின்றேன்'' என்றார்.
இந்த உலகைச் சுற்றியுள்ள நாடுகளில் எழுநூறாவது கோடியை அடையாளப்படுத்தும் வகையில் பிறந்துள்ள குழந்தைகளில் டானிக்காவும் ஒருவராவார்.
அக்டோபர் 31 ஆகிய நேற்றுடன் உலக சனத்தொகை ஏழு பில்லியனை அடைந்துள்ளமையைக் குறிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 31 ஏழு பில்லியன் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்த்ககது.
பிலிப்பைன்ஸின் சுகாதாரச் செயலாளர் என்ரிகியூ ஓனா இது பற்றி தெரிவிக்கையில்,
டானிக்கா சரியாக நள்ளிரவில் தான் பிறப்பாரென நம்பப்படட போதிலும் அவள் நள்ளிரவுக்கு இரண்டு நிமிடங்கள் முந்தியேபிறந்துவிட்டார். குடிசனத் தொகை விவகாரங்களில் பிலிப்பைன்ஸை மற்றைய நாடுகள் மதிப்பிடும் வகையில் டானிக்கா அரிய சந்தர்ப்பமொன்றை எமக்கு வழங்கியுள்ளõரெனவும் கூறினார்.கடந்த நூற்றாண்டில் உலக சனத் தொகை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
மெட்ரோநியூஸ் 01 /11 /11