Tuesday, August 24, 2010

மிஸ் மெக்சிகோ ஜிமெனாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம்மிஸ் மெக்சிகோ ஜிமெனா நவரட்டுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்துள்ளது. 2வது இடம் ஜமைக்கா அழகிக்கும், 3வது இடம் ஆஸ்திரேலிய அழகிக்கும் கிடைத்தது. இந்தியாவுக்கு ஏமாற்றம் கிடைத்தது.
லாஸ் வேகாஸில் நடந்த இந்த கண்கவர் போட்டியில் 83 அழகிகளின் குவியிலிருந்து மிஸ் மெக்சிகோ அழகியைத் தேடி பட்ட வாய்ப்பு தேடி வந்து தலையில் அமர்ந்து கொண்டது.
22 வயதேயான ஜிமெனா பளிச்சிட்ட புன்னகை, நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற ஸ்டெபானியா பெர்னாண்டஸ் முடி சூட்டினார்.
பட்டம் வென்ற பின்னர் ஜிமெனா செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பெற்றோரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளனர் என்றார் பொங்கி வந்த மகிழ்ச்சியுடன்.
இன்று இன்டர்நெட்டை அனைவரும் கட்டுப்பாடில்லாமல் பார்க்கிறார்கள். இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜிமெனா பதிலளிக்கையில், குழந்தைகள் இன்டர்நெட்டில் என்ன பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர்தான் கண்காணிக்க வேண்டும். அது மிக அவசியம் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இன்டர்நெட் தவிர்க்கப்படக் கூடியது என்று நான் நினைக்கவில்லை. அது அவசியமானது. எனவே தவிர்க்க முடியாது. கட்டுப்பாட்டை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நமது குழந்தைளுக்கு நமது குடும்பம் குறித்தும், குடும்ப மதிப்புகள் குறித்தும் பெரியவர்கள் கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும் என்றார்.
2வது இடத்தைப் பிடித்த மிஸ் ஜமைக்கா அழகியின் பெயர் என்டி பிலிப்ப்ஸ், 3வது இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலிய அழகி ஜெஸ்னிடா கேம்பல்.
தனது 15வது வயதிலிருந்து ஜிமெனா மாடலிங் செய்து வருகிறாராம். மெக்சிகோவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற 2வது அழகி என்ற பெருமையும் ஜிமெனாவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 1991ம் ஆண்டு லூபிடா ஜோன்ஸ் பட்டம் வென்றிருந்தார்

Monday, July 5, 2010

உடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்


மூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஸ்மோபாலிடன் பத்திரிக்கை இதுதொடர்பான கருத்துக் கணிப்பை ஒன்றை நடத்தியது. அதில் 2498 பெண்களிடம் உடல் பருமன் மற்றும் செக்ஸ் குறித்து கருத்துக் கேட்டனர்.
அப்போது மூன்றில் ஒரு பெண், தான் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பதாக கூறினார். அதேசமயம், உடல் பருமனால் பல சிக்கல்களை தான் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 73 சதவீதம் பேருக்கு 'பாடி பாரனோயா' (body paranoia) பிரச்சினை உள்ளது. அதாவது நமது உடல் பருமன் குறித்தும், உடல் அமைப்பு குறித்தும் மற்றவர்கள் கேலி பேசுவார்களோ என்ற பீதிதான் இது.
உடல் பருமனால் இந்தப் பிரச்சினைகளை இவர்கள் சந்தித்தாலும், செக்ஸ் விஷயத்தில் தாங்கள் திருப்தியுடன் இருப்பதாகவே பெரும்பாலானோர் கூறியுள்ளனர். 10 பேரில் 6 பேர் படுக்கை அறையில் தாங்கள் நன்கு செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மூன்றில் ஒரு பங்கு பேர் சிறந்த செக்ஸ் உறவை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். உறவு மேம்பட்டு வருவதாக பாதிப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு சதவீதம் பேர் மட்டுமே முற்றிலும் திருப்தி இல்லாத செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான கருத்து - உடல் பருமன் உடையவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருந்தாலும் கூட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் அதை அவர்கள் அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, June 2, 2010

உதடுகள் இரண்டு....முத்தமோ பல


கேட்டவுடன் ஜில்லென்று உள்ளே பூ பூக்க வைக்கும். இந்த முத்தம் ஒரு மனிதனை அடியோடு மாற்றிப் போடக் கூடிய வல்லமை பெற்றது.
மன அழுத்தத்தைக் குறைக்க, பதட்டத்தைக் குறைக்க, புத்துணர்ச்சி பெற என ஏகப்பட்ட வேலைகளைச் செய்கிறது முத்தம் என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
ஒரு நிமிடம் வரை நீளமான முத்தம் கொடுத்தால், நமது உடலில் 20 கலோரி வரை குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே முத்தம் என்பது அன்புப் பரிமாற்றம் மட்டுமல்லாமல், அட்டகாசமான ஆரோக்கிய டிப்ஸாகவும் உள்ளது.
இப்படிப்பட்ட முத்தத்தை பல வகைகளாக பிரித்து வைத்துள்ளனர் நிபுணர்கள். ஒருவர் முத்தமிடுவதை வைத்து அது எப்படிப்பட்ட முத்தம், எந்த வகை முத்தம் என்பதை கண்டுபிடித்து விட முடியுமாம்.
அதையும்தான் கொஞ்சம் பார்ப்போமே!

கத்துக்குட்டி கிஸ்...
முதல் முறையாக முத்தமிடுவோரிடம் ஒருவிதமான பதட்டம் இருக்கும். அவர்கள் கொடுக்கும் முத்தம் ஆழமாக இருப்பதை விட அவசர கதியில் இருக்கும். ஜஸ்ட் உதடுகளை 'டச்' செய்து விட்டு 'டக்'கென பிரிந்து போய் விடத் துடிப்பார்கள். இதை பிகின்னர் முத்தம் என்கிறார்கள்.
இன்னொரு வகை உண்டு. இது சற்று ரசித்து, ருசித்துத் தரக் கூடியது. இந்த முத்தத்தில் அவசரம் இருக்காது. அதேசமயம், நல்ல ஆழமும் இருக்காது. ஆனாலும், நிதானம் நிறையவே இருக்கும். உதடுகள் உரசிக் கொண்டிருக்கும்போது கைகள் வேறு எங்காவது விளையாடிக் கொண்டிருக்கும். இந்த முத்தம் நமது செக்ஸ் உணர்வுகளைத் தூண்ட உதவுமாம்.

'சிப்' கிஸ்..

இது சற்று விளையாட்டுத்தனமானது. பிடித்த குளிர்பானத்தை குடித்து விட்டு முத்தத்திற்கு வருவார்கள் ஆண்கள். முத்தத்தின் இனிமையுடன், உதடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் குளிர்பானத்தின் இனிமையும் சேர்ந்து டபுள் ஸ்டிராங்காக இருக்குமாம்.

டாக்கிங் கிஸ்...

வழக்கமாக முத்தமிட்டால் சத்தம் வரும். ஆனால் இந்த முத்தத்தின்போது பேச்சு வரும். அதாவது எதையாவது முனுமுனுத்துக் கொண்டே உதடுகளில் விளையாடுவது இந்த முத்தத்தின் வகை. உதடுகள் என்றில்லாமல் காது மடல்கள், கன்னங்கள் என உணர்ச்சிகளை அதிகம் தூண்டக் கூடிய இடங்களாகப் பார்த்து குறி வைத்து கொடுப்பார்களாம் இந்த முத்தத்தை. இது செக்ஸ் மூடைக் கிளப்ப ரொம்ப உபயோகப்படுமாம்.

'டீஸர்' கிஸ்...

காது, முகம், கைகள் என உடலின் முக்கியப் பகுதிகளை உதடுகளால் நெம்புவது போல கொடுக்கப்படும் முத்தம் இது. கடியும், பிடியுமாக இருக்கும் இந்த கலவை முத்தமும், பெண்களின் உணர்வுகளைத் தூண்ட ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றாம். ஆனால் இந்த வகை முத்தத்தை கொடுப்போர், உதடுகளை மட்டும் கண்டுக்கவே மாட்டார்கள். மற்ற இடங்களுக்கு மறக்காம்ல் விசிட் அடித்து விடுவார்கள்.

ஆவேச முத்தம்...

பெயருக்கேற்ப, இது கொஞ்சம் வேகமானது. முகத்தை ஏந்திப் பிடித்தபடி படு ஆழமாக கொடுக்கப்படும் முத்தம் இது. உதடுகளுடன் உதடுகளைப் பொருத்தி அழுத்தத்துடன் கொடுக்கப்படும் இந்த முத்தம், உணர்வுகள் உச்சத்திற்குப் போகும்போது கொடுக்கப்படுமாம்.

இந்த முத்தம் சொல்லும் சேதி என்னவென்றால் - நான் 'ரெடி', நீயும் ரெடியா என்பது.

இது கொஞ்சம்தான், இப்படி நிறைய வெரைட்டிகள் இருக்கிறதாம் முத்தத்தில். நம்ம ஊர் சினிமாக்களில், கொய்யாப் பழத்தை ஹீரோயினும், ஹீரோவும் ஆளுக்குப் பாதி கடித்தபடி கொடுத்துக் கொள்வார்களே, அது எந்த வகை முத்தம் என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லலாமே...!

Tuesday, May 25, 2010

ஆண்மைக் குறைவுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம்


புதிதாக ஒரு இன்ஹேலர் வரப் போகிறது. இதன் வேலை என்ன தெரியுமா? - ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் தருவதுதான்.
இந்த இன்ஹேலரில் அபோமார்பின் என்ற மருந்து பவுடர் வடிவில் இடம் பெற்றுள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், இந்த இன்ஹேலரைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது, ஒரு பஃப் எடுத்துக் கொண்டால் போதும். நமது மூளையின் கெமிக்கல் ரிசெப்டார்களை தூண்டுவித்து செக்ஸ் உறவுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்குமாம்.
உண்மையில் இந்த அபோமார்பின் பர்கின்சன் வியாதிக்காக தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் ஆய்வுகளின்போது இது ஆண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதை ஆய்வாளர்கள் கண்டனர். இதையடுத்து ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக இதை இன்ஹேலர் வடிவில் கொண்டு வருகின்றனர்.
இன்னும் இது விற்பனைக்கு வரவில்லை. பரீட்சார்த்த நிலையில்தான் உள்ளது. ஆஸ்த்மா இன்ஹேலர் போலவே இது பார்ப்பதற்கு இருக்கும். எழுச்சிக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த அபோமார்பின் இன்ஹேலர் பெரும் நிவாரணமாக அமையும், அவர்களும் செக்ஸ் வாழ்க்கையில் இயல்பாக ஈடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.
கடந்த பத்து வருடங்களாக வயாகரா, சியாலிஸ், லெவிட்ரா ஆகியவைதான் செக்ஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கான மருந்தாக உள்ளது. இந்த நிலையில் இதன் அடுத்த கட்டமாக பவுடர், இன்ஹேலர் வடிவில் ஆண்மைக் குறைவுக்கான மருந்து உருவாகியிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள வயாகரா உள்ளிட்ட மருந்துகளால் உடனடி நிவாரணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வயாகரா எடுத்துக்கொண்டால் குறைந்தது 40 நிமிடங்களாகும் - 'மூட்' வருவதற்கு.
அதேபோல, சியாலிஸ், லெவிட்ரா போன்றவையும் கூட உடனடி நிவாரணத்தைத் தராது. மேலும் இந்த மருந்துகளைப் பயன்படுத்திய ஆண்களில் 30 சதவீதம் பேருக்கு இது குறிப்பிட்ட பயனைத் தரவில்லை.
ஆனால் தற்போது வெக்சுரா நிறுவனம் தயாரித்துள்ள இந்த அபோமார்பின் இன்ஹேலரை ஒரு முறை எடுத்துக் கொண்டால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் உறுப்பு எழுச்சி அடைந்து உல்லாசத்திற்கு மனதும், உடலும் தயாராகி விடுகிறதாம்.
இதுதொடர்பாக 600 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில் பெரும்பாலானவர்களுக்கு இது நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக வெக்சுரா நிறுவனம் கூறுகிறது

Sunday, May 16, 2010

சர்கோஸியால் எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார்லா ப்ரூனி புலம்பல


பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை மணந்து கொண்டது முதல் எனது செக்ஸ் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது உடல் தேவையை போக்காமல் தனது பணியிலேயே பிசியாக இருக்கிறார் சர்கோஸி என புலம்பியுள்ளார் கார்லா.
இத்தாலியைச் சேர்ந்த மாடல் தான் கார்லா. பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை தீவிரமாக் காதலித்து கரம் பிடித்தவர். இவர்களது காதல் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இன்றும் கூட இந்த பரபரப்பு சற்றும் குறையாமல் விறுவிறுப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது.
இடையில் புதுக் காதலரை பிடித்து விட்டார் கார்லா என செய்திகள் வெளியாகின. இருப்பினும் இது புஸ்வாணமாகி விட்டது.
சமீபத்தில் வெளியான ஒரு நூலில், கார்லா கூறியதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியிருந்தது.
அமெரிக்காவுக்கு சர்கோஸியுடன், கார்லா விசிட் அடித்தபோது, கார்லாவும், ஒபாமாவின் மனைவி மிஷலும் சந்தித்துப் பேசினர்.
அப்போது மிஷலிடம் கார்லா கூறுகையில், ஒருமுறை காலையில் நானும், சர்கோஸியும் படுக்கையில் பிசியாக இருந்தோம். அப்போது ஒரு வெளிநாட்டு அதிபர் சர்கோஸியைப் பார்க்க வந்திருந்தார்.
இருப்பினும் எங்களால் படுக்கை அறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அந்த அதிபரை காக்க வைக்க நேரிட்டது. உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்துள்ளதா என்று கேட்டு மிஷலை நடுங்க வைத்தார் கார்லா.
கார்லாவின் கேள்வியைக் கேட்டு சற்று ஆடிப் போன மிஷல், பின்னர் சுதாரித்து சிரித்தபடி அப்படியெல்லாம் எனக்கு நேர்ந்ததில்லை என்று கூறி நழுவினார்.
இந் நிலையில் சர்கோஸியை மணந்தது முதல் செக்ஸ் தேவை பூர்த்தியாகாமல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் கார்லா. இதுவும் ஒரு நூலில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 வயதாகும் கார்லா, இதுகுறித்து ஜோனாதன் ஆல்டர் என்பவர் எழுதியுள்ள நூலில் கூறுகையில், எனது கணவர் சர்கோஸி தனது பணியில்தான் தீவிரமாக உள்ளார். இதனால் எனது உடல் தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.
எனக்கு விருப்பமான வரை செக்ஸில் ஈடுபடுவதை அவரது வேலைப்பளு தடுக்கிறது. இதனால் எனது செக்ஸ் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளன என்று கூறியுள்ளார் கார்லா.
கார்லா செக்ஸ் மீது அதிக மோகம் கொண்டவர். ஒரு ஆணுடன் மட்டும் உறவு கொள்வது மிகவும் போரடிக்கும் விஷயம் என்று முன்பு ஒரு முறை கூறியிருந்தார்.
கடந்த காலங்களில் இங்கிலாந்து ராக் நட்சத்திரங்களான மைக் ஜேகர், எரிக் கிளாப்டன், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் லாரன்ட் பேபியஸ் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்தான் கார்லா என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 26, 2010

பிரபலமாகும் கன்னித்தன்மை ஆபரேஷன்!


வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள ஹைமனோ பிளாஸ்டி எனப்படும் கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இந்தியாவிலும் தற்போது பிரபலமாகி வருகிறதாம். இந்தியாவின் பெருநகரங்களில் இந்த வகை ஆபரேஷன் மிகவும் அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கன்னித்தன்மைக்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அதை விட அதிக மரியாதை உண்டு. தான் காதலிக்கும், தான் மணக்க விரும்பும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிற நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம்.
தற்போது இந்த எண்ணம் வெளிநாடுகளிலும் கூட பரவியுள்ளது. அங்குள்ள பெண்கள் கன்னித்தன்மையை மீண்டும் மீட்க அறுவைச் சிகிச்சை முறைகளை நாட ஆரம்பித்துள்ளனர். தற்போது அந்த பேஷன் இந்தியாவுக்கும் தொற்றி விட்டது.
பெரும்பாலும் நடுத்தர வயதுப் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷனை அதிகம் செய்து கொள்கிறார்களாம்.
வயது முதிர்ந்த பெண்கள் என்றில்லாமல் எதிர்பாராதவிதமாக கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் சிக்கியவர்கள், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொண்டவர்கள் என சகல தரப்பினரும் இந்த ஆபரேஷன் மீது ஆர்வம் கொண்டுள்ளனராம்.
இப்படித்தான் கன்னித்தன்மை இழப்பு ஏற்படும் என்று இல்லை. விளையாட்டுத் தறையில் இருப்பவர்களுக்கு கன்னித்தன்மை என்று கூறப்படும் ஹைமன் சவ்வுப் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்டவர்களும் கூட இந்த வகை ஆபரேஷன் மூலம் கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியும்.
ஹைமனோ பிளாஸ்டி எனப்படும் இந்த அறுவைச் சிகிச்ச பிளாஸ்டிக் சிகிச்சை போன்றதுதான். இப்படிப்பட்ட அறுவைச் சிகிச்சை வசதிகள் தற்போது டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பல பிரபல மருத்துவமனைகள் என்றில்லாமல் நடுத்தர ரக மருத்துவமனைகளிலும் கூட இந்த ஆபரேஷன்களை செய்கிறார்கள்.
இதுதொடர்பாக பத்திரிக்கைகள், இன்டர்நெட்டில் விளம்பரங்களும் செய்வது அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் இளம் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷன்களைச் செய்து கொள்ள அதிகம் வருகிறார்களாம். அந்த அளவுக்கு கலாச்சாரம் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இந்த வகை ஆபரேஷன்களுக்கு அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை ஆகுமாம். சாதாரண மருத்துவமனைகளில் அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை செலவாகுமாம்.

Wednesday, April 21, 2010

செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு அவதிப்படும் பெண

செல்போன்களிலிருந்து வரும் வைப்ரேஷன் மூலம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.
செல்போன் என்றில்லாமல் எதில் எல்லாம் வைப்ரேஷன் வருமோ, அதன் மூலமாகவெல்லாம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரது பெயர் அமன்டா பிளவர்ஸ். உடற்பயிற்சி செய்யும் சாதனத்தை பயன்படுத்தும்போது அதிலிருந்து ஏற்படும் வைப்ரேஷன் தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதாக கூறுகிறார் அமன்டா. அதுவும் எப்படி என்றால் ஒரு நாளைக்கு பத்த முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு.
உடற்பயிற்சி சாதனம் என்றில்லாமல், செல்போன்கள் உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வைப்ரேஷன்களும் கூட தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டுவதாக கூறுகிறார் அமன்டா.
அமன்டாவுக்கு இயல்பாகவே செக்ஸ் உணர்வு அதிகமாம். அதற்கு காரணம், அவரது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஒரு கோளாறே காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
24 வயதாகும் அமன்டா இதுகுறித்துக் கூறுகையில், ஏதாவது வைப்ரேஷனை எனது உடல் சந்தித்து விட்டால் உடனே செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு விடுகிறது. உடனடியாக செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அது வேகமாக இருக்கிறது.
செல்போனிலிருந்து வரும் வைப்ரேஷன் கூட என்னை விட்டு வைப்பதில்லை. இதனால் மிகவும் அவதிப்படுகிறேன். இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முயலுகிறேன் என்றார்.
தனது பிரச்சினையை சரி செய்ய தொடர் சிகிச்சைக்கும் உட்பட்டுள்ளாராம் அமன்டா.

Tuesday, April 20, 2010

; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ


திரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் குமரி மாவட்ட இளைஞர்களின் செல்போன்களில் ஒலிக்கும் புதிய ஆடியோ பேச்சால் மாவட்டமே கிறுகிறுத்து கிடக்கிறது.
செல்போனில் செக்ஸ் வீடியோ காட்சிகள் பரவியது போல் இப்போது செக்ஸ் ஆடியோ பேச்சுகளும் பரவி வருகிறது. சமீபத்தில் இங்குள்ள இளைஞர்கள் சிலரது செல்போனில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிய பேச்சு ஒலிபரப்பாகி வருகிறது. இருவருக்கும் இடையேயான சம்பாஷனை அந்த பெண்ணின் முதலிரவு நாட்களில் இருந்து தொடங்குகிறது.
முதலில் அந்த ஆண் நண்பர்தான் பெண்ணை தொடர்பு கொண்டு பேசுகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே பல நாள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதனால் அந்த பெண், ஆண் நண்பருடன் சகஜமாக பேசுகிறார்.
குசலம் விசாரிப்பு முடிந்ததும் அந்த ஆண் நண்பர் மெல்ல அவரது முதலிரவு நிகழ்ச்சியை பற்றி கேட்கிறார். முதலில் செல்ல சிணுங்கலுடன் சொல்ல மறுக்கும் அப்பெண் நண்பரின் வற்புறுத்தலால் பேச ஆரம்பிக்கிறார்.
கணவர் தன்னை எங்கெங்கு தொட்டார் என்ன செய்தார் என்பதை சொல்கிறார். இரவு விளக்கு அணைந்த பின்பு காமிராவிலும் படம் பிடிக்க முடியாத காட்சிகளையும் அந்த பெண் சங்கோஜமின்றி விளக்குகிறார். இடையிடையே ஆண் நண்பரின் சந்தேகங்களுக்கும் கூச்சமின்றி பதில் கூறுகிறார்.
முதலிரவு முடிந்து அடுத்து வந்த நாட்களில் கணவனும் மனைவியும் அந்தரங்கமாக இருந்த நேரங்களையும் அந்த பெண் நண்பரோடு பகிர்ந்து கொள்வது காது கூசும் அளவுக்கு பதிவாகி உள்ளது.
இந்த குரல் பதிவை அந்த பெண்ணிடம் பேசிய ஆண் நண்பர்தான் செய்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு இடையிலான உரையாடலை கேட்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த பெண்ணின் பேச்சு இயல்பாக இருப்பதையும், ஆனால் அவரோடு பேசும் ஆண் உஷாராக இருந்து பெண்ணிடம் விஷயத்தை கறப்பதிலேயே குறியாக இருப்பதும் தெரிகிறது.
சுமார் 25 நிமிடங்கள் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை கேட்கும் மாணவர்கள் நிச்சயமாக செக்ஸ் உணர்வுக்கு ஆட்பட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே இதுபோன்ற உரையாடல்கள் செல்போன்களில் பரவுவதை தடை செய்ய “சைபர் கிரைம்” போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Sunday, February 21, 2010

செக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்


செக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறைந்த அளவிலான செக்ஸ் ஆர்வம் மற்றும் விரக்தியுடன் கூடிய 5098 பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை இக்கழகம் நடத்தியது. அதில், செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியே இல்லாத நிலையும் காணப்பட்டதாம்.
மேலும் தங்களால் செக்ஸ் வாழ்க்கையில் பூரணமாக ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்ததாம்.
இந்தப் பெண்களின் பல்வேறு குணாதிசயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அவர்கள் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், அந்த காலகட்டத்தில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது. செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில், செக்ஸ் வைத்துக் கொள்ளாத சமயங்களில் அல்லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெருமளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.
இயல்பான செக்ஸ் வாழ்க்கை உடையவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது

Tuesday, February 16, 2010

செக்ஸை விரும்பாத பெண்கள்!


35 வயதைத் தாண்டிய பெண்களில் கணிசமானவர்கள் செக்ஸ் உறவை விட்டு விலகிப் போய் விடுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் நான்கில் ஒருவர் செக்ஸ் வாழ்க்கையை விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளனராம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்தியவர்களில் ஒருவரான கொலீன் நோலன் கூறுகையில்,
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 28 சதவீதம் பேர் காதல், காமம் என்பதெல்லாம் பழைய கதை என்று கூறினர்.
35 முதல் 64 வயதுக்குட்பட்ட 745 பெண்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. அதில் குழந்தைப் பேறு இல்லாத பெண்களிடம், குழந்தை பெற்ற பெண்களை விட ஆர்கசம் அதிகம் இருப்பதாக தெரிய வந்தது.
41 சதவீதம் பேர் அடிக்கடி தங்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
ஒரு குழந்தை வைத்துள்ள தாய்மார்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே முழுமையான திருப்தியை செக்ஸ் மூலம் அடைந்ததாக கூறினர்.
2 குழந்தைகளுக்குத் தாயான பெண்களில் 14 சதவீதம் பேர் ஓரளவு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாக தெரிவித்தனர்.
பகுதி நேரமாக வேலை பார்க்கும் பெண்களில் 67 சதவீதம் பேருக்கு அதிக அளவில் ஆர்கசம் வருவதாக தெரிவித்தனர். முழு நேர வேலையில் உள்ள பெண்களில் 57 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம்.
மெனோபாஸ் பயம் பெண்களிடையே அதிக அளவில் உள்ளதாம். 42 சதவீதம் பெண்கள் இதை நினைத்து தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக குறிப்பிட்டனர்.
நடுத்தர வயது முதல் முதிய வயதையொட்டிய பெண்களுக்கு பல்வேறு வகையான உடல் நலக் கோளாறுகள் காணப்படுகின்றன. இருப்பினும் இதை யாரிடமும் போய்ச் சொல்ல அவர்கள் விரும்புவதில்லை.
காரணம், தயக்கம்தான்.
அதேபோல 35 வயதைத் தாண்டி விட்ட பின்னர் செக்ஸ் வாழ்க்கையில் பெண்களுக்கு ஒருவித அலுப்பு வந்து விடுவதும் தெரிய வந்துள்ளது என்றார் நோலன்.

Wednesday, February 10, 2010

அமோகவிற்பனை


காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம்.
காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர்.
ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார்.
காதலர் தினத்தையொட்டி சில சலுகைகளையும் மிக்லானியின் நிறுவனம் அறிவித்துள்ளதாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆணுறைகளை வாங்கினால் இலவசமாம். மேலும் வேல்யூ ஆடட் பேக்கேஜ்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு ஆணுறை வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல.
சுப்லால் என்ற மருந்துக் கடை உரிமையாளர் கூறுகையில், சிலர் கூச்சப்பட்டுக்கொண்டு போன் மூலமாக ஆர்டர் கொடுப்பார்கள். சில இளைஞர்கள் கடைக்கு வந்து தயக்கத்துடன் கேட்பார்கள். எப்படியானாலும் ஆணுறை விற்பனை இந்த சமயத்தில் கூடுதலாகவே இருக்கும் என்றார்.
சமீபத்திய சர்வேக்கள் இந்திய ஆண்களும் பெண்களும் பாதுகாப்பான உடலுறவு விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வு அடைந்துவிட்டதாக கூறுகின்றன.
ஆண்களைப் போலவே பெண்களும் கருத்தடை மாத்திரைகளை கூச்சமின்றி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதோடு, ஆன் லைன் வர்த்தகம் பெருகி விட்ட சூழலில் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் பெறுவது சுலபமானதாகவும், நடைமுறை சிக்கலின்றி இருப்பதாகவும் கருதுகின்றனர்.

Monday, February 8, 2010

சத்தமில்லாதசெக்ஸ்


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விடுதியொன்றில் தங்கியுள்ள மாணவிகளுக்கு விநோதமான பணிப்புரையொன்று விடுக்கப்பட்டுள்ளது. செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது அதிகமாக சத்தமிடாதீர்கள் என்பதுதான் அந்தப்
பணிப்புரை.
இப்பல்கலைக்கழகத்தின் நிவ்ன்ஹாம் பெண்கள் கல்லூரியில் சுமார் 400 மாணவிகள் கல்வி கற்கின்றனர். இளமாணி கற்கைநெறியில் ஈடுபட்டுள்ள இம்மாணவிகள் அனைவருக்கும் அண்மையில் மின்னஞ்சல் மூலம் நிர்வாகத்தினரால் மேற்படி உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
139 வருடகால வரலாற்றைக் கொண்ட இக்கல்லூரியில் மாணவிகளின் அறையில் அவர்களின் காதலர்கள் 2 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பின் அவர்கள் வேறு அறையொன்றைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமாம்.
இத்தகைய நடவடிக்கைகள் தமக்கு இடைஞ்சலாக இருப்பதாக கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 30 மாணவிகள் நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்ததையடுத்தே அனைவருக்கும் பொதுவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மூலமான அறிவுறுத்தலை வாசித்த மாணவிகள் பலர் தம்மை இலக்காகக் கொண்டே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக கருதுவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்கவிடவேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
20 வயதான மாணவியொருவர் இது குறித்து கூறுகையில்,
மற்றவர்கள்
அதையெல்லாம் செவிமடுக்கிறார்கள் என்று அறிவது மிகவும் சங்கடமானது. விடுதி அறையின் சுவர்கள் மெல்லியவை என்பதை மறந்துவிடுகிறோம் எனக் கூறுகின்றனர்

Thursday, February 4, 2010

கற்புவாங்கலையோ கற்பு


நியூசிலாந்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலத்திற்கு விட்டார். அதை ஒருவர் 36,000 டாலருக்கு ஏலம் கேட்டார். அதை இந்தப் பெண் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவர் நார்த்லேன்ட் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி. தன்னை யுனிகேர்ள் என்று பெயரில் அடையாளம் காட்டியுள்ளார். முழு விவரங்களை வெளியிடவில்லை. நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு இணையதளத்தில், தனது படிப்புச் செலவுக்காக, தான் பாதுகாத்து வரும் கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தார்.
இந்த ஏலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். இதுகுறித்து அந்தப் பெண் வெளியிட்டுள்ள செய்தியில், எனது விளம்பரத்தைப் 30,000 பேர் பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. அவர்களில் 1200 பேர் ஏலம் கேட்டிருந்தனர். அவர்களில் 45,000 நியூசிலாந்து டாலருக்கு (அமெரிக்க டாலரில் 36,000) ஏலம் கேட்டவரை நான் தேர்வு செய்துள்ளேன். இது நான் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத தொகையாகும் என்று கூறியுள்ளார் அவர்.
இப்படிப்பட்ட விளம்பரத்தை பிரசுரித்தது குறித்து அந்த இணையதளம் நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அது கூறுகையில், ஒவ்வொருவரும் தங்களது பொருளை ஏலம் விடுவதற்கு உரிமை உண்டு. கன்னித்தன்மையும் கூட ஒருவரின் பொருள் போலத்தான். எனவே இதை ஏற்க முடியாது என்று நாங்கள் மறுக்க முடியாது என்று கூறியுள்ளது அது.
முன்னதாக யுனிகேர்ள் கொடுத்திருந்த விளம்பரத்தில், நான் பார்க்க கவர்ச்சிகரமாக இருப்பேன். ஒருமுறை கூட நான் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதில்லை. இன்னும் கன்னித்தன்மையுடன் இருக்கிறேன். இதை தற்போது நான் ஏலம் விடுகிறேன்.
இது நான் முழு மனதுடன் எடுத்த மிகத் தெளிவான முடிவு. மிகவும் சுகாதாரமாகவும், உடல் ரீதியாக நல்ல நலனுடனும் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உடலில் எந்தவிதமான மருத்து ரீதியான பிரச்சினைகளும் இல்லை. உடலை வனப்புடனும், திடகாத்திரமாகவும் வைத்துள்ளேன் என்று கூறியிருந்தார்.

Monday, February 1, 2010

வயாக்கராவிக்குப்பதிலாக‌

அர்ஜென்டினா அதிபர் மாளிகையில் வர்த்தகர்களின் கூட்டம் நடந்தது. இதில், அந்நாட்டு பெண் அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது செக்ஸ் ஆர்வத்தை தூண்டுவதற்காக வயாகரா மாத்திரை பயன் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பன்றி இறைச்சி அதை விட மிகச்சிறந்தது. இது சாதாரண விஷயமல்ல.

வறுக்கப்பட்ட பன்றிக்கறியில் தான் வயாகராவை விட “செக்ஸ்” உணர்வை தூண்டும் சக்தி உள்ளது. அதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன்.

தென் அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் வார இறுதியில் விருந்து நடைபெறும். இதில் நான் எனது கணவரும், முன்னாள் அதிபருமான நெஸ்டன் கிர்ச்னாவும் கலந்து கொண்டு வறுத்த பன்றி இறைச்சியை ருசித்து மகிழ்வோம்.

இதன் மூலம் வாரம் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும். எனவே இதை பரிசோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

டென்மார்க், ஜப்பான் போன்ற நாடுகளில் பன்றி இறைச்சியை தான் அதிக அளவில் மக்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் அர்ஜென்டினாவில் மாட்டு இறைச்சி தான் அதிக அளவில் விரும்பி சாப்பிடப்படுகிறது.

எனவே அதிபர் கிறிஸ்டினா கூறியது போல, இங்கும் பன்றி இறைச்சியை சாப்பிட்டு மக்கள் இன்புற்று வாழ வேண்டும் எனபன்றி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

Thursday, January 28, 2010

'அது'க்கும் வந்துவிட்டது ரோபோ


மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளால், உலகம் பல்வேறு வசதிகளைப் பெற்றுள்ளது.
விமானம், கப்பல், வாகனங்கள் என துவங்கி, கண்டுபிடிப்புகள் நீண்டுக் கொண்டே
போகின்றன. இந்த வகையில், மனிதனின் அரிய கண்டுபிடிப்பு ரோபோக்கள். மனித
சமுதாயத்திற்கு ரோபோக்கள் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன.
முடியாத முதியவர்களுக்கு உதவுதல், ஆபத்தான இடங்களில் பணியாற்றுதல் என ரோபோக்கள்
அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன. கை, கால் பாதிக்கப்பட்டவர்கள்,
பார்வையை இழந்தவர்களுக்கும் ரோபோக்கள் உதவி வருகின்றன. கடந்த நூற்றாண்டின்
இறுதியில், பெரிய தொழிற்சாலைகள், மருத்துவம், அறுவை சிகிச்சை, விண்வெளி பயணம்
உள்ளிட்டவைகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன.இந்த வரிசையில், செக்ஸ் உணர்வு அதிகம்
கொண்டவர்களை திருப்தி செய்யும் வகையில் ரோபோக்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.

ட்ரூ கம்பானியன்' என்ற நிறுவனம் இந்த செக்ஸ் ரோபோவை தயாரித்துள்ளது.
அழகிய, கவர்ச்சி மிக்க பெண்ணைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோவின்
பெயர் ராக்சி.சிந்தடிக் மென்தசை பொருட்களைக் கொண்டு செயற்கையான தோலால் இந்த ரோபோ
உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கும், தொடுவதற்கும் உண்மையான பெண்ணை போன்று
உணரப்படும் இந்த ரோபோ, செயற்கை அறிவுத்திறனும் கொண்டது.
செக்ஸ் ரோபோவின் உள்ளே ஒரு லேப்-டாப் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. ரோபோவை
தொடும் போதே அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள உணர்வு கருவிகள் செயல்படத் தொடங்கி
விடும். அதற்கேற்ப ரோபோ செயல்படுகிறது. உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர் மூலம்
சத்தம் வெளிப்படுகிறது. ஆனால், ரோபாவால் அதன் இஷ்டப்படி நகரவோ, தலை மற்றும் உதட்டை
அசைக்கவோ முடியாது. அனைத்தையும் கம்ப்யூட்டர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

செக்ஸ் ரோபோவை வடிவமைத்துள்ள டக்ளஸ் இனேஸ் கூறும் போது, ""ஏ.வி.என்., அடல்ட்
என்டர்டெயின்மென்ட் எக்ஸ்போ கண்காட்சியில் முதன் முதலாக செக்ஸ் ரோபோ ராக்சி
காட்சிக்காக வைக்கப்பட்டது. ஆண்களின் விருப்பு, வெறுப்புகளை புரிந்து கொள்ளும்
வகையில் ராக்சி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்த்தல், பேசுதல், கேட்டல், உணர்தல்
ஆகிய நான்கு வித உணர்ச்சிகளையும் இது வெளிப்படுத்தும். வாடிக்கையாளர் கால்பந்து
குறித்து பேசினால், அது குறித்து அதுவும் பேசும். கிரிக்கெட் குறித்து பேசினால்,
அதுவும் திரும்ப பேசும். இப்படி, அனைத்து விஷயங்களிலும் வாடிக்கையாளரை இந்த ரோபோ
திருப்திபடுத்தும்.

தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள செக்ஸ் ரோபோவின் உயரம் 170 செ.மீ., எடை 54 கிலோ.
வாடிக்கையாளர்கள், தங்களின் பழக்க வழக்கங்களையும், விருப்பத்தையும் முன்கூட்டியே
கூறினால், அதற்கேற்ப செக்ஸ் ரோபோ வடிவமைத்து தரப்படும். ரோபோவின் கை, கால்கள்
தானாகவே திரும்ப முடியாது. ரோபோவை திருப்பி வைத்தால் பேச தயாராகி விடும். செக்ஸ்
ரோபோவை பெற, மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாயுடன் மாத சந்தா கட்டணத்தையும் கட்ட
வேண்டும். ஆண் செக்ஸ் ரோபோவும் தயாராகி வருகிறது; அதன் பெயர் ராக்கி ட்ரூ,''
என்றார்.

செக்ஸ் உறவால் எடை கூடுமா?


செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது சுத்தமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
ஒரு பெண் ரெகுலராக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும், இடுப்புகள் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்களிடையே உள்ளது.
ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
அதேசமயம், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.
அதேபோல கல்யாணத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை.
செக்ஸ் காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, கல்யாணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, அதுவரை கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
சிங்கிளாக இருப்பவர்களை விட கல்யாணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது.
கல்யாணத்திற்குப் பிறகும், செக்ஸ் உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாராவது விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Monday, January 11, 2010

முத்தமிடுவது எப்படி


கூகுள் நிறுவனம் ஆண்டின் இறுதியில் அந்த ஆண்டில் அதிகம் எந்தப் பொருளை மக்கள் தேடினார்கள் என்பது குறித்த பட்டியலை வெளியிடும். ஸைட்கைஸ்ட் 2009 என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள்.
அரசியல்வாதிகள், பிரபலங்கள், நிகழ்வுகள், சினிமா என பல தலைப்பில் இந்த தேடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது கூகுள்.
நிகழ்வுகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களாக பட்ஜெட் 2009, லோக்சபா தேர்தல் முடிவுகள், சத்யம், பங்கு விலைகள் ஆகியவை உள்ளன. அரசியல்த் தலைவர்களில் ராகுல் காந்தியை அதிகம் பேர் தேடியுள்ளனர். சினிமாவில் காத்ரீனா கைப் முன்னணியில் இருக்கிறார். உலகின் பிற பகுதிகளைப் போலவே மைக்கேல் ஜாக்சனை இந்தியர்களும் அதிக அளவில் தேடியுள்ளனர்.
உலகின் ஹாட்டஸ்ட் இன்டர்நெட் தளமாக ஜிமெயில் விளங்குகிறது. இந்திய ரயில்வே இணையத் தளத்தையும் நிறையப் பேர் தேடியுள்ளனர்.
எப்படி என்ற தலைப்பில் தேடப்பட்ட பொருட்களில் இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளது எப்படி முத்தமிடுவது என்பது குறித்துத்தானாம்.இதற்கடுத்து எப்படி இணையத் தளங்களை ஹேக் செய்வது, எப்படி தியானம் செய்வது என்பது குறித்தும் நிறையத் தேடியுள்ளனர்.

Saturday, January 2, 2010

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!


தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம்.
செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக.
தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை
செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம்.
ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக் கொள்ளலாமுங்கோ, தப்பே இல்லை!) செக்ஸ் வைத்துக் கொண்டால் உங்களது உடலிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 7.500 கலோரிகள் குறையுமாம். இது 75 மைல் தூரம் ஜாகிங் போவதற்குச் சமமாம்!.அதிக அளவில் மூச்சு இறைப்பது, நமது செல்களில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறதாம். அதேபோல செக்ஸின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மூலம், நமது எலும்புகளும், தசைகளும் வலுவாகிறதாம்.
அதேபோல செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி என்கிறார்கள் டாக்டர்கள். செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், உடலில் என்டோர்பின் எனப்படும் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இது அருமையான வலி நிவாரணியாகும் என்கிறார்கள் டாக்டர்கள்.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆர்கசம் சமயத்தில், பெண்களுக்கு வலி தெரியாமல் இருக்க இந்த என்டோர்பின்தான் உபயோகப்படுகிறதாம். மேலும், இது கர்ப்பப் பை உள்ளிட்டவற்றை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறதாம். அதேபோல, பெண்களிடம் மலட்டுத்தனம் ஏற்படாமல் தடுக்கவும் இது ஓரளவு உதவுகிறதாம். மெனோபாஸ் தள்ளிப் போகவும் கை கொடுக்கிறதாம்.விந்தனுக்கள் உற்பத்தியாகும்போது அதை உரிய முறையில் வெளிப்படுத்துவதே விந்தனுப் பைகளுக்கு நல்லதாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் உள்ளேயே தேங்கி 'பை' வீங்கி விடும் வாய்ப்புள்ளதாம். இதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி ஏற்பட்டு விடுமாம்.
தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் விதைப் பைகள் சீரான நிலையில் இருக்குமாம், விந்தனுக்கள் தேங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் நலன் மேம்படுமாம். தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.
இன்றைய காலகட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிப்பேருக்கும் மேல் சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது ஆணுறுப்பு எழுச்சியின்மை ஏற்படுகிறது.
இதைத் தடுக்க ஒரே வழி தினசரி செக்ஸ்தானாம். தினசரி முறைப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினை வருவது குறைகிறதாம்.
தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஆணுறுப்புக்கு ரத்தம் போவது தடையில்லாமல் தொடர்ந்து நிகழ்கிறதாம்.
எழுச்சி அல்லது எரக்ஷன் என்பதை டாக்டர்கள் ஒரு தடகள விளையாட்டுக்கு சமமாக கூறுகிறார்கள். தடகள வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணம், அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருப்பதே. அதேபோல ஆணுறுப்புக்கு சீரான முறையில் ரத்தம் போய்க் கொண்டிருந்தால், நிச்சயம் ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினையே வராது. அதற்கு உதவுவது தினசரி செக்ஸ் என்கிறார்கள் டாக்டர்கள்.
இதுதவிர தினசரி செக்ஸ் மூலம் மன ரீதியாகவும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பதட்டம் குறையும். செக்ஸின்போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதட்டத்தைக் குறைக்க உதவும் ஹார்மோனாகும். இதற்கு மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதேபோல, ஆக்சிடைசின் என்ற இன்னொரு ஹார்மோனும் சுரக்கிறதாம்.
இப்படி பல்வேறு பலன்கள், லாபங்கள் செக்ஸ் உறவின்போது கிடைப்பதால் தினசரி செக்ஸ், நமது உடலுக்கு மிக மிக நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்