Monday, December 29, 2008

திரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்!


! சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் குழந்தைகளுடன் கேட் வெட்டி, பரிசுகள் கொடுத்து, அபியும் நானும் பார்த்து தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் நடிகை திரிஷா.
நடிகை திரிஷாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர் மன்றமும், திரிஷா பவுண்டேஷனும் இணைந்து அடையாறு கூவம் சாலையில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நடிகை திரிஷா வருகிறார் என்றதும், குழந்தைகள் அவரை ஆர்வத்துடன் வரவேற்கக் காத்திருந்தனர்.
நடிகை திரிஷா வந்தவுடன், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நடிகை திரிஷா பொம்மைகள் வழங்கினார்.
தான் நடித்து வெளிவந்துள்ள அபியும் நானும் படத்தை அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து பார்த்தார். படம் முடிந்தவுடன் அந்த குழந்தைகளுடன் இரவு உணவும் சாப்பிட்டார்.

திரிஷா தனது பிறந்த நாளை இந்த புற்றுநோய் மருத்துவமனையில் கொண்டாடுவது புதிதல்ல. ஏற்கெனவே தொடர்ந்து இரு ஆண்டுகளாக இங்குதான் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
இந்த இடத்தில் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடுவதில் தனக்கு மிகுந்த நிறைவு ஏற்படுவதாக அவர் கூறினார். v

Tuesday, December 23, 2008

இருதலை ஆமை
அன்குவெய் மாநிலத்தில் Chaohu வில் இரண்டு தலையுள்ள சிறு ஆமை உள்ளூர் மீனவரால் வளர்க்கப்படுகிறது. மிகவும் அரிதான இவ்வகை ஆமை நலமாக காணப்படுகிறது. ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள இந்த இருதலை ஆமையை, பலர் வந்து பார்த்து செல்கின்றனர்.

பெட்டியில் குள்ள மனிதன்


சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றவர்களிடம் திடீரென பாய்ந்தால் அவர்கள் அவசரமாக செயல்படுகின்ற அசைவுகளை படமாக்கி நகைச்சுவையாக பயன்படுத்தி கொள்ள பல அலைவரிசைகள் இன்று காத்திருக்கின்றன. இதற்காக தொழில்முறை கலைஞர்கள் கூட நியமிக்கப்படுவதுண்டு. ஸ்வீடன் Bromma விமான நிலையத்தின் சோதனை அதிகாரி சோதனை செய்ய பெட்டி ஒன்றை திறந்தபோது குள்ளமனிதர் ஒருவர் அதிலிருந்து குதித்து உயிரோடு வெளியேவந்தார். பயந்துபோன சோதனை அதிகாரி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க, காவலர்கள் வந்தபோது தான் அது தனியார் தொலைக்காட்சிக்காக நகைச்சுவைக் காட்சியாக இரகசியமாக ஒளிப்படமாக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. தாங்கள் மிரண்டுபோய், இழிவுபடுத்தப்பட்டதாக விமான ஊழியர்கள் தெரிவிக்க, பொழுதுபோக்கு அம்சமாக நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட இதனை பார்த்து சிரிப்பதற்கு பதிலாக வழக்கு தொடுத்து விட்டனர் என்கிறார் ஸ்வீடன் செய்திநிறுவனத்தின் பேச்சாளர் Dan Panas.

கண் எழுதுகோலாக
எழுத்துக்களை கையால் எழுதுவதை சிறப்பாக கூறமாட்டார்கள். காலால் எழுதினால் அது மிக சிறப்பானது. கண்களால் எழுதினால் என்னவென்று சொல்வது. மத்திய சீனாவின் Henan மாநிலத்தை சேர்ந்த Ru Anting மூக்கால் நீரை உறிஞ்சி கொண்டு கண்களால் பீச்சியடித்து எழுதும் திறமை கொண்டுள்ளார். Foshan என்ற இடத்தில் கண்ணால் நீரை பீச்சியடித்து சீன எழுத்துகளை எழுதி சுற்றுலாப் பயணிகளின் ஈர்த்துள்ளார். இப்போது 56 வயதான இவர், தான் இந்த சிறப்புத்திறன் பெற்றிருப்பதை எதிர்பாராதவிதமாக சிறுவயதில் கண்டறிந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இக்கலையை அவர் வளர்த்துள்ளார். கண்ணிலிருந்து மூன்று மீட்டர் தெலைவுக்கு அவரால் நீரை பீச்சியடிக்க முடிகிறது. இவருடைய இந்த அரிதான திறமையால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சீன ஷாங்காய் உலக புகழ்பெற்ற DSJJNS பதிவேட்டில் இவர் இடம்பெற்றுள்ளார்.

Saturday, December 13, 2008

உலக அழகி 2008

தென் ஆபிரிக்காவின் ஜோகன்ர்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டியில் ரஸ்ய அழகி கெஸ்னியா சுக்கினோவா( Kseniya Sukhinova ) தெரிவு செய்யப்பட்டார். சுக்கினோவாவின் சில அசத்தல் படங்கள்.Saturday, November 22, 2008

வணக்கம்

வணக்கம் வாசகர்களே இந்த வலையில் கிடைத்தற்கரிதான புகைப்படங்களும், ஏனைய புகைப்படங்களும் வலையேற்ற இருக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்திருக்கின்றேன். நன்றி வானதி