Wednesday, February 25, 2009

கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் சிவராத்திரி அன்று முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் அப்பம் சுடும் திருவிழா நடைபெறும். கொதிக்கும் நெய்யில் கையை விட்டு மூதாட்டி ஒருவர் அப்பம் சுடுவது வழக்கம். இதைக் காண சிவகாசி, விருதுநகர், நெல்லை, மதுரை, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஏராளமான பெண்கள் குலவையிட அதே பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 75 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட தொடங்கினார். தொடர்ந்து 4 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து 20 கூடைகள் நிறைய அப்பம் சுட்டார்.
இது குறித்து முத்தம்மாள் கூறுகையில், 41வது ஆண்டாக இது போல் அப்பம் சுடுகிறேன். இதற்காக கடந்த 10 நாட்களாக கடும் விரதம் இருந்தேன் என்றார்.
மூதாட்டி சுட்ட அப்பம் அதிகாலை நடந்த பூஜையில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இது குறித்து பெண் பக்தர் ஒருவர் கூறுகையில், சமையல் செய்யும்போது எண்ணெய் தெறித்தாலே உடம்பு புண்ணாகிவிடும். ஆனால், மூதாட்டி நெய்க்குள் கையைவிட்டு அப்பம் சுடுவது ஆச்சர்யமாக உள்ளது. அப்பம் சுடுவது மட்டுமில்லாமல் கொதிக்கும் நெய்யை விபூதியைப் பூசுவதுபோல நெற்றியிலும், தனது இரு கைகளிலும் பூசுவது மெய்சிலிர்க்க வைக்கிறது’ என்றார்.

Wednesday, February 18, 2009

காதலில் விழ மாத்திரை


ராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம்.
கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம்.
இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் தயாராகி விடும்.
காதல் என்பது இனிமேல் பஸ் பயணம் மாதிரிதான் இருக்கும். ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வது போன்ற நிலை வந்து விடும். அதற்கு இந்த மாத்திரை கை கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.
காதல் என்பது மனித மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான். இந்த மாற்றத்தைத் தூண்டுவிக்கும் வகையில் மாத்திரைகளை பயன்படுத்தினால் கண்டிப்பாக காதல் உணர்வு தோன்றும். அதேபோல அந்த உணர்வை மரத்துப் போக வைக்க இன்னொரு மாத்திரையும் சாத்தியம்தான் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.
அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில், சரியான கலவையில் உருவாக்கப்படும் இந்த வேதியியல் மாத்திரைகள் நிச்சயம் காதலில் விழவும், காதலிலிருந்து மீளவும் உதவும் என்கிறார்கள்.
அட்லாண்டாவில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி யங் கூறுகையில், மனித மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால்தான் காதல் உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை நேரடியாக டிவி மூலம் விளக்கும் காலம் வந்து விட்டது.
இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் எலியைப் போன்ற தோற்றமுடைய பிரெய்ரி வோல்ஸ் விலங்குகளிடம் நாங்கள் சோதனை மேற்கொண்டுள்ளோம். அதில் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றமே காதல் உணர்வுகளுக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.
அந்த உணர்வுகளின் பின்னணி குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
ஒரு பெண் பிரெய்ரி வோல் மீது ஹார்மோனை செலுத்தியபோது அது இன்னொரு ஆண் விலங்கின் துணையை நாடியதை நாங்கள் கண்டோம்.
பின்னர் அந்த ஹார்மோன் மூளைக்குப் போவதை தடுத்தபோது, ஆண் துணையின் உதவியை அது நாடவில்லை. மாறாக அது இருக்கும் பக்கம் கூட அது போகவில்லை.
மனித மூளையும் இதேபோலத்தான் செயல்படுகிறது. மூளையை தூண்டுவிக்கும் இந்த வகை ஹார்மோன்கள் உண்மையின் மனிதன் பழக்க வழக்கங்களையும் கூட கட்டுப்படுத்துகிறது, மாற்றுகிறது.
இந்த ஹார்மோன் அதீதமாக செயல்பட்டால் கண்ணோடு கண் பார்த்து அணுகும் தைரியம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். காதலில் இது முக்கியமாச்சே.. இதுதான் காதல் உணர்வாக நமக்கு தெரிகிறது என்கிறார் அவர்.
இப்படி மூளையை தூண்ட உதவும் இரு வகையான ரசாயன ஹார்மோன்களை (ஆக்சிடாக்சின் மற்றும் டோபமைன்) தற்போது மாத்திரை வடிவில் மாற்றி புழக்கத்தில் விட்டால், காதல் பழக்கத்திற்கு இது உதவக் கூடிய தோழனாக இருக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.
இனிமேல் பழக வேண்டும் என யாராவது ஆசைப்பட்டால் கையில் பேப்பரும், பேனாவுமாக உட்கார்ந்து, கடலையும், வானத்தையும் பார்த்து கவிதை பாட வேண்டாம்.
பையில் ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டால் போதும். எந்தப் பெண்ணைப் பிடிக்கிறதோ, டக்கென்று ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டால் போதும்....

Tuesday, February 17, 2009

ஜாண்ஆனாலும் குதிரை

உலகின் மிகச்சிறிய குதிரை தம்பெலினா. உயரம் வெறும் 17 செ.மீ. மட்டும்தான். எடை 112.5 கிலோ. இப்போது இந்த பெண் குதிரைக்கு 8 வயதாகிறது. சாதாரண குதிரைகள் 35 வயது வரை உயிர் வாழுமாம். ஆனால், குட்டை இனத்தை சேர்ந்த இந்த குதிரை 17 வயது வரையில்தான் உயிர் வாழுமாம். அமெரிக்காவில் குழந்தைகள் தொடர்பான கண்காட்சி நடக்கும் இடங்களில் இந்த குதிரையை அதன் உரிமையாளர் அழைத்து வருகிறார். நியூயார்க்கில் இப்போது தொடங்கி உள்ள விளையாட்டு பொருட்கள் கண்காட்சியில் உரிமையாளருடன் தம்பெலினா.

Sunday, February 15, 2009

காதலர் தினத்தில் நாய்களுக்கு திருமணம்


ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி உலக காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் காதலர் தினத்துக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இதனால் இந்த ஆண்டு காதலர் தினம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் காதல் தினத்தை காதலர்கள் கொண்டாடினார்கள். காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்தும், விதவிதமான நகைகள் மற்றும் ஆடைகளை கொடுத்தும் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குமரி மாவட்ட இந்து மகாசபாவினர் நாகர்கோவிலில் 2 நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு இந்து மகாசபா மாவட்ட தலைவர் நீலகண்டபிள்ளை தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்காக தெருவில் சுற்றித்திரிந்த ஒரு ஆண் நாயையும், ஒரு பெண் நாயையும் இந்து மகாசபா பொறுப்பாளர்கள், நாய் பிடிப்பவர்கள் மூலம் பிடித்து பீச்ரோடு சந்திப்புக்கு நேற்று காலை கொண்டு வந்தனர். அப்போது திடீரென ஆண் நாய் அங்கிருந்து ஓடிவிட்டது. உடனே அந்த நாயை விரட்டிப்பிடித்து மீண்டும் கொண்டு வந்தனர்.புரோகிதர் மந்திரம் ஓத நாய்களுக்கு மாலை மாற்றப்பட்டது. பின்னர் ஆண் நாய், பெண் நாய்க்கு குங்குமம் இட்டு, மஞ்சள் தாலி அணிவித்து திருமணம் செய்வது போன்ற நிகழ்ச்சி நடந்தது.
திருமணம் செய்து கொண்ட 2 நாய்களையும், மணமக்களை வாழ்த்துவதுபோல அங்கு கூடியிருந்த பொதுமக்களும், இந்து மகாசாபா நிர்வாகிகளும் வாழ்த்தினார்கள்.காதலர் திருமணத்தையொட்டி நாய்களுக்கு நடத்தி வைக்கப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Friday, February 13, 2009

இலங்கையருக்கும் பெருமை சேர்க்கும் மாயாஒஸ்கார் விருது வழங்கும்விழா இந்தியருக்கு மாத்திரமல்ல இலங்கையருக்கும்முக்கியமானதாக உள்ளது.ஹொலிவூட்டில்உயரிய விருதாக கருதப்படும்ஒஸ்கார் விருதுக்கு இம்முறை மும்பை சேரிவாழ்சிறுவனை மையமாகக்கொண்டுஇயக்கப்பட்ட ஸ்லம்டோக்மில்லியனர்திரைப்படம்10 பிரிவுகளில்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இசைப்புயல்.ஆர்.ரஹ்மானின் பெயரும் ஒஸ்காருக்குபரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் இந்தியர்கள்ஆனந்த வெள்ளத்தில்மூழ்கியுள்ள அதேவேளைஇலங்கையரானநாமும் ஒஸ்கார் விருது குறித்துமகிழ்ச்சியடைய வேண்டும்ஏனெனில் இத்திரைப்படத்தில்வரும் ஒ சயா பாடலை
எழுதி பாடிய மாயாஅருள்பிரகாசம்இலங்கையில் பிறந்தவராவார்.இவர் தற்போது இலண்டனில்வாழ்ந்து வருகின்றார்.ஏ.ஆர்.ரஹ்மானைஅறிந்தளவுக்கு மாயாவைஎம்மவர்கள் அறிந்திருக்கவாய்ப்பில்லையென்றாலும்அவரைப் பற்றியும் அவர்சாதித்தவையைப் பற்றியும்நாம் கதைக்காமலிருக்கமுடியாது.
கடந்த ஜனவரி மாதம்வாஷிங்டனில் இடம்பெற்றஇசைநிகழ்ச்சியொன்றில்மேலைத்தேய பாணியில்பல பாடல்களை பாடியமாயா இறுதியில் ஈழத்தமிழ்மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதையும் அவர்கள் எதிர்கொள்ளும் அவலம் குறித்துவெளிப்படுத்தும் விதமாகஅழுதவாறு ஒரு பாடலைபாடினார். அவரது இந்தபாடல் உலகத்தையே கலங்கச்செய்தது. இதற்கமைய அவர்பாடலை பாடி முடிக்க இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் போரை நிறுத்துமக்களைக் கொல்லாதேஎன கோஷம் எழுப்பியுள்ளனர்.
இனிய குரல் வளத்தைகொண்டுள்ள மாதங்கியின்பாடல்களின் பெரும்பாலானவைஇலங்கையின் விடுதலைப் போராட்டத்தை பற்றியவையாகவே உள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.இவருடைய தந்தையானஅருள்பிரகாசம்ஆரம்பகாலங்களில்விடுதலைப் போராட்டத்தில்தீவிரமாக ஈடுபட்டவர் எனதெரிவிக்கப்படுகின்றது..எம்.ஐ.ஏ. என அழைக்கப்படும் மாயாவின் இயற் பெயர்மாதங்கி அருள் பிரகாசம். இவர்1977ஆம்ஆண்டு ஜூலைமாதம் 17ஆம்
திகதி ஈழத்தில் பிறந்தவர்தனது 11 ஆவது வயதில்லண்டனுக்கு அகதியாகசென்றார். அங்குள்ள மார்ஷல் ஆட்ஸ் அகடமியில்தனது கலை பட்டப்படிப்பைமுடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப் பாடல்களை இயற்றுவதிலும் அல்பங்களை உருவாக்குவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் ரப் இசை பாடகியாவார். இவருடைய பாடல்கள்இங்கிலாந்தில் மாத்திரமல்லஅமெரிக்க நாடுகளிலும்பிரபல்யம் ஆகியது.2005 ஆம் ஆண்டு அல்பம்
ஒப் த இயர் விருதை பெற்றார்.கடந்த வாரம் இடம்பெற்றகிரம்மி விருதுக்கும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும்விருது கிடைக்கவில்லைஎனினும் தனது முதல்குழந்தையை வயிற்றில்சுமந்துகொண்டு கிரம்மிவிருதுவழங்கும் விழாவில்பாடல் பாடிஅசத்தியுள்ளார் மாயா.
நிரஞ்சனி
மெட்ரோநியூஸ்
13 02 2009

Wednesday, February 11, 2009

கூகுல் கண்டுபிடித்த காதல் தீவு

கூகுல் எர்த் சாப்ட்வேர் மூலம் தெரிய வந்துள்ள காதல் தீவு ஒன்று இன்டெர்நெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.செயற்கைக்கோள் படமாக உலகின் பரப்பை அங்குலம் அங்குலமாக இன்டெர்நெட் மூலம் அலசி பார்க்க வழிசெய்யும் கூகுல் எர்த் சாப்ட்வேர் சேவை எத்தனையோ விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தீவிரவாதிகள் தங்கள் சதிதிட்டத்திற்காக இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்வதாகவும் புகார் உண்டு.இந்நிலையில், இந்த சாப்ட்வேரின் உதவியோடு ஏட்ரியாட்டிக் கடல் பகுதியில் காதல் தீவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குரோஷியா நாட்டின் கடற்கரை அருகே உள்ள தீவு தனியார் ஒருவருக்கு சொந்தமானது.இந்த தீவு காதல் சின்னமான இதயத்தை போலவே அமைந்திருக்கிறது. இந்த விஷயம் அதன் உரிமையாளருக்கே இத்தனை காலமாக தெரியாதாம்.கூகுல் எர்த் மூலம் இந்த காதல் தீவை பார்த்து வியந்தவர்கள் அங்கு தங்க அனுமதி கேட்டு அவரை தொடர்பு கொண்டு வருகின்றனராம்.இதன் மூலமே அவருக்கு தனது தீவு காதல் தீவாக காட்சி தருகிற விஷயம் தெரிய வந்திருக்கிறதாம்.அந்த தீவு ஆளில்லாத தீவாக இருப்பதால் காதலர்கள் வந்து தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.எது எப்படியோ இன்டெர்நெட் உலகில் இந்த காதல் தீவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tuesday, February 10, 2009

'லேடீஸ் ஒன்லி'


மும்பையை தொடர்ந்து, பெங்களூரு நகரிலும், "லேடீஸ்
ஒன்லி' டாக்சிகள் இயங்கப் போகின்றன. இதற்கான திட்டத்தை மத்திய
பெண்கள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி அமல்படுத்த உள்ளார்.
பெங்களூரு நகரில் 2005ல், கால் சென்டர் பெண் ஊழியர் ஒருவர், பணி
முடிந்து, வாடகைக்காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது
கொல்லப்பட்டார். இதனால், பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்
குறியாக இருந்தது.

அதன் பின், பெங்களூரு நகரில், பெண்களுக்கு பயணம் செய்யும்
வாகனங்களில் பெண் டிரைவர்களை அமர்த்த முயற்சி மேற்கொள்ளப்
பட்டது. ஆனால், அதற்கு எந்த வித வரவேற்பும் இல்லை. இப்போது இந்த
விஷயத்தில் அமைச்சர் ரேணுகா சவுத்ரி அதிக ஆர்வம் காட்டி
வருகிறார். அரசு சார்பில் நடத்தப்படும் ஓட்டல்கள், விருந்தினர்
மாளிகைகளில் பயன்படுத்தப்படும் சுற்றுலா வாகனங்களில், "லேடீஸ்
ஒன்லி' வாகனங்களாக சிலவற்றை மாற்றி, அவற்றை இயக்க பெண்
டிரைவர்களை அமர்த்த முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, தனியார் ஓட்டல்களிலும், "லேடீஸ் ஒன்லி'
டாக்சிகளுக்கு மவுசு ஏற்பட்டால், தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பயன்படும் வகையில்,
"லேடீஸ் ஒன்லி' டாக்சிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, அமைச்சகம் மூலம், பெண்களுக்கு, வாகனம் ஓட்டும்
பயிற்சியும், அதை வாங்கி டாக்சியாக ஓட்ட வங்கிக்கடனும் அளிக்க
ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு நகரை தொடர்ந்து டில்லி, ஐதராபாத் நகரங்களிலும்,
"லேடீஸ் ஒன்லி' டாக்சிகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்
ரேணுகா.
இதுபற்றி அவர் கூறுகையில், "மங்களூரு சம்பவத்தை கண்டுகொள்ளாதது
மூலம், பெண்களுக்கு எதிரான அரசாக கர்நாடகாவில் உள்ள பா.ஜ., அரசு
காட்டிக்கொண்டு விட்டது. "பப்' சென்ற அப்பாவி பெண்களை தாக்கியது
கண்டிக்கத் தக்கது. அதனால், பெண்களை பல துறைகளிலும்
முன்னேற்றுவது போல, பெண்கள் பாதுகாப்புக்காக, "லேடீஸ் ஒன்லி'
டாக்சிகளை எல்லா முக்கிய நகரங்களிலும் அறிமுகம் செய்ய முடிவு
செய்துள்ளோம். இதற்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பும்
பெறப்படும்' என்று தெரிவித்தார்.

Monday, February 9, 2009

சிவாஜி வீட்டுத் திருமணம்

பிரபுவின்மகளின் திருமண காட்சிகள்
பாஃப்டாவையும் வென்றார் இசைப்புயல் ரஹ்மான்

பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா (BAFTA) விருதையும் வென்றார் தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான். விருது மேல் விருது குவித்துவரும் டேனி பாய்லின் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறந்த இசைக்காக இந்த விருது ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. 9 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஸ்லம்டாக்...' இந்தியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படம் என்பதால் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 11 பிரிவுகளில் இந்தப் படத்தை பரிந்துரைத்திருந்தார்கள். அவற்றில் சிறந்த இசை உள்பட 7 பிரிவுகளில் பாஃப்டா விருது கிடைத்துள்ளது. அவற்றில் சிறந்த இயக்குநர் (டேனி பாய்லே), சிறந்த இசை (ஏஆர் ரஹ்மான்), சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்), சிறந்த ஒளிப்பதிவு (ஆண்டனி டாட் மாண்டில்), சிறந்த சவுண்ட் எடிட்டிங் (ரசூல் பூக்குட்டி, க்ளென் ப்ரீமாண்டில், ரிச்சர்டு ப்ரைக், டாம் சாயர்ஸ் மற்றும் இயான் டாப்) ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்தது. இவர்களில் ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் மட்டுமே இந்தியர்கள். நேற்று லண்டனில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.பாஃப்டா விருதை வெல்லும் முதல் இந்தியர் ஏஆர் ரஹ்மான்தான். ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்கர் விருது பெறும் முதல் தமிழர் எனும் பெருமையையும் பெறப்போகிறார்

Sunday, February 8, 2009

என் தங்கை கல்யாணம்

அஜிதின் தங்கையின் திருமணம் சிறப்பாக நடை பெற்றது
Wednesday, February 4, 2009

நயன்தாராதமிழில் நடிக்க தடை


நடிகை நயன்தாராவை இனி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என தயாரிப்பா ளர் சங்கமும் நடிகர் சங்கமும் கூட்டாக அறிவித்துள் ளனலிங்குசாமி இயக்கும் புதிய படம் "பையா'. இதை அவ ருடைய சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ், திருப்பதி பிர தர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாராவை கதா நாயகியாக ஒப்பந்தம் செய்து அதற்கு ரூ.15 லட்சம் அட் வான்ஸ் தொகையும் அளிக்கப்பட்டதுஇந்நிலையில் தான் கொடுத்த கால்ஷீட் தேதிகளின் படி படப்பிடிப்பைத் தொடங்கவில்லை; அதனால் "பையா' படத்திலிருந்து விலகுகிறேன் என நயன்தாரா தெரிவித்தார். படத்தில் நடிக்காததால் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டது தயாரிப்பு தரப்பு. ஆனால் அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்றார் நயன்தாராஇதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங் கத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் இரு தரப்பி னரும் புகார் அளித்தனர். அதன்படி இரண்டு சங்கங்க ளின் கூட்டமைப்பும் ஆலோசனை நடத்தியதுஒரு படத்துக்காக தயாரிப்பாளரிடமிருந்து நடிகர்-நடி கையர் முன் பணம் வாங்கியிருந்து, அதில் ஒரு நாளா வது நடித்திருந்தால் அந்த முன் பணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை என இரு சங்கங்களும் ஏற்கெ னவே ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால் நயன் தாரா இந்தப் படத்தில் ஒரு நாள் கூட நடிக்க வில்லைஇதை மேற்கோள்காட்டி, தான் வாங்கிய முன் பணத்தை குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் திருப்பித் தர வேண்டும் என இரு சங்கங்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே நயன்தாராவி டம் தெரிவித்தன. ஆனால் காலக்கெடு நெருங்கி யும் அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர மாட் டேன் என நயன்தாரா தகவல் அனுப்பியுள்ளார்இதையடுத்து நயன்தாராவை இனி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது; மேலும் மற்ற மொழிப் படங்களிலும் அவரை நடிக்க வைக்கக் கூடாது என அந்தந்த தயாரிப்பாளர் சங்கங்களில் பேசுவது என முடிவு செய் யப்பட்டுள்ளதுதயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்க மும் இணைந்து புதன்கிழமை நடத் திய கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை அனைத்துத் தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நயன்தாரா விளக்கம்
இந்தப் பிரச்னை குறித்து கேட்ட போது.. ""படத்துக்காக அட்வான்ஸ் தொகையை வாங்கியது உண்மை. அட் வான்ஸ் தொகையைத் திருப்பித் தர மாட்டேன் என்று கூறியதும் உண்மைஇந்தப் படத்துக்காக நான் கொடுத்த கால்ஷீட் தேதிகளைத் தயாரிப்பாளர் பயன்படுத்தவில்லைஎனக்கு வந்த மற்ற பட வாய்ப்புகளை யும் மறுத்துவிட்டு இந்தப் படத்துக்கா கக் காத்திருந்தேன்ஆனால் படப்பிடிப்பையே தொடங் கவில்லை. அதனால் எனக்குத்தான் இழப்பு. இதுகுறித்து பல பத்திரிகைக ளில் செய்திகளும் வெளியாகியுள் ளனமேலும் இந்தப் பிரச்னையில் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இது வரை என்னை நேரடியாக அழைத்து விசாரிக்கவில்லைஎன் தரப்பு நியாயத்தை முறைப்படி தெரிவிப்பேன்' என நயன்தாரா தெரி வித்துள்ளார்.

Monday, February 2, 2009

நடிகை சங்கீதா கிரிஷ் திருமணம்-
நடிகை சங்கீதாவுக்கும் இளம் பாடகர் கிரிஷுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருமணம் நடந்தது. திரையுலகினர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பிதாமகன் உயிர்தனம் உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் சங்கீதா. இவரும் பிரபல பின்னணி பாடகர் கிரிஷும் பல மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. சரியாக காலை 8.35 மணிக்கு சங்கீதாவுக்கு தாலி கட்டினார் கிரிஷ். பின்னர் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் மணமக்கள் கோயில் அலுவலகத்துக்கு சென்று திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
நடிகைகள் ஸ்ரீப்ரியா, ரீமாசென், ரகசியா, ஐஸ்வர்யா, பிரீத்தி, மும்தாஜ், ஸ்ரீதேவி, மகேஸ்வரி, கிரிஷின் அக்கா கல்பனா, அவரது கணவர் சிமோர், நடிகர்கள் பாண்டியராஜன், ஜீவா, சின்னிஜெயந்த், டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி, சிரிப்பு நடிகர் பாஸ்கி, இயக்குனர்கள் பாலா, தரணி, தயாரிப்பாளர் வேணு உள்பட திரையுலகினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை சங்கீதா திருமணம் நடப்பதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

Sunday, February 1, 2009

நாகேஷுக்கு அஞ்சலி

கவலையில் உள்ளமனிதர்களை சிரிக்கவைத்த மனிதன் அழவைத்துவிட்டு சென்று விட்டான்