Monday, August 24, 2009

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ்
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பஹாமஸ் தீவுகளில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் ஸ்வீடன், மிஸ் கொசாவோ, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்சர்லாந்து, மிஸ் அமெரிக்கா, மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆப்பிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷியா ஆகிய 15 அழகிகள் தகுதி பெற்றனர்.இதில், வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பட்டம் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவைச் சேர்ந்த அழகியே பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெபானியாவுக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசூலாவின் டயானா மென்டெஸ் கிரீடம் சூட்டினார். முதல் ரன்னர் ஆக மிஸ் ஆஸ்திரேலியா ராச்சல் பின்ச், மிஸ் பியூர்டாரிகோ மாய்ரா மாடோஸ் பெரேஸ், 2வது ரன்னர் ஆக மிஸ் கொசாவோ கோனா டிராகுஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அழகிப் பட்டங்களை வெல்வதில் வெனிசூலா புதிய சாதனையும் படைத்துள்ளது. இதுவரை வெனிசூலா ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்றுள்ளது. இதுதவிர ஐந்து மிஸ் வேர்ல்ட், நான்கு மிஸ் இன்டர்நேஷனல் பட்டங்களையும் அது வென்றுள்ளது. வேறு எந்த நாட்டு அழகியும் இவ்வளவு அதிக பட்டங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Sunday, August 9, 2009

சர்வக்ஞமூர்த்தி


உலகில் அறிவியில் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும், முன்னோர்களின் முத்தான கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது இன்று வரை குறையவில்லை. சமூகத்தின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர்கள் ஏராளம். அந்த வரிசையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ¬ஈரடியில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலை, தனது 1,330 குறள் மூலம் வழங்கி, வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
அதே வரிசையில், தெலுங்கு மொழியில், 1352ம் ஆண்டு பிறந்த வேம்மண்ணா, சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக கவிதைகள் வடித்து வழங்கி, 1430ல் மறைந்த இவர், சமூக நீதியை வலியுறுத்தி பல நூறு பாடல்களை வடித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 16ம் நூற்றாண்டில் தோன்றிய சர்வக்ஞமூர்த்தி என்ற தத்துவ கவிஞர் சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை தன்னுடைய கவிதைகள் மூலம் சாடியுள்ளார்.
கேரளாவில் 18ம் நூற்றாண்டில் நாராயணகுரு பிறந்து ஆன்மீகத்தோடு சமூக பற்றையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் நால்வரும் வெவ்வேறு மொழியை சார்ந்திருந்தாலும், இவர்களின் கருத்துக்கள் ஒட்டு மொத்தமாக மனிதர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சர்வக்ஞமூர்த்தி: சர்வக்ஞர் (சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழிகளில் முற்றும் துறந்தவர், அனைத்தும் அறிந்தவர் என்று பொருள்). இவர் மூன்று வரிகளில், வசன வடிவில், ஆன்மீகத்துடன் கலந்த சமூக சிந்தனையுள்ள கவிதைகளை, கன்னட மொழியில் எழுதியுள்ளார்.
கன்னட வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, தார்வார் மாவட்டத்தில் கடந்த 16ம் நூற்றாண்டில், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த விதவை தாய்க்கும், சைவ பிராமண தந்தைக்கும், வனப்பகுதியில் சர்வக்ஞர் பிறந்ததாகவும், இவரது இயர் பெயர் பசுபதி தத்தா என்று தெரிய வருகிறது.
பிறந்த சில ஆண்டுகளில் பெற்றோரை பிரிந்த பசுபதி தத்தா, ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார். இவரது பயணத்தில் மக்களின் துயரங்களை கண்டு கலங்கியபடி, பாடல் புனைந்துள்ளார். அப்பாடல் முடியும்போது சர்வக்ஞ... என்று முடித்துள்ளார். இதன் காரணமாக இவரை சர்வக்ஞ மூர்த்தி என்று அழைக்க தொடங்கினர்.
சர்வக்ஞர் எழுதிய மூன்று வரி கவிதைகள் மொத்தம் 2 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளன

Thursday, August 6, 2009

சுவாமி மீது சூரிய ஒளி


ராமநத்தம் அருகே சுப்ரமணியர் சுவாமி மீது சூரிய ஒளி நேரடியாக விழுந்த காட்சியை, பக்தர்கள் பார்த்து வணங்கினர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையந்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கி.பி., 1017ம் ஆண்டு மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டில் இக்கோவில் பெயரை, "பிரமீசுவரமுடைய நாயனார்' கோவில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள சுப்ரமணியர் சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்கிற்கு ஒரு வாரத்திற்கு முன்பும், ஆடிப்பெருக்கு முடிந்த ஒரு வாரத்திற்குதினமும் காலை 8 மணி முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுவது ஐதீகம் என கிராம மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு கோவிலில் மட்டுமே இது போன்று அருள்பாலிப்பு தருவதாகவும், அதன் பின்னர் கடலூர் மாவட்டம் பனையந்தூர் சிவன் கோவில், "சுப்ரமணியர் சுவாமி' மீது மட்டுமேசூரிய ஒளி விழுவதாகவும் கூறுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி விழும் காட்சியைக் காண நேற்று காலை 7 மணி முதலே ஏராளமான பக்தர்கள் பனையந்தூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் கூடியிருந்தனர். காலை 8 மணி முதல் 8.05 வரை சுப்ரமணியர்சுவாமி மீது நேரடியாக விழுந்த சூரிய ஒளியை, பக்தர்கள் பரவசத்துடன் கண்டு வணங்கினர்.

நிர்வாண சிலை


உதட்டழகி ஏஞ்செலீனா ஜூலிக்கு நிர்வாண சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஆளுயர சிலையான இது ஓக்லகாமா நகரில் நிறுவப்பட்டுள்ளது. விரைவில் சிலை திறக்கப்படவுள்ளது.
ஜூலி, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது போல இந்த சிலையை வடித்துள்ளார் நியூயார்க்கைச் சேர்ந்த சிற்பி டேணியல் எட்வர்ட்ஸ்.
செப்டம்பர் மாதம் இந்த சிலை திறக்கப்படவுள்ளதாம். லேன்ட்மார்க் ஃபார் பிரஸ்ட்பீடிங் என்று இந்த சிலைக்கு பெயர் வைத்துள்ளனர்.
தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ஜூலி பால் கொடுப்பது போன்ற புகைப்படம் கடந்த ஆண்டு வெளியான டபிள்யூ என்ற இதழில் அட்டைப்படமாக வெளியானது.
இதைப் பார்த்துதான் ஜூலிக்கு அதே போஸில் சிலை வடிக்க முடிவு செய்தாராம் எட்வர்ட்ஸ்.
இந்த சிலையை வடிக்கும் வேலையை பேன்டம்-பினான்சியல் என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சேன்டி வில்சன் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் இன்று தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.
தாய்மார்கள், இந்த சிலையைப் பார்த்தாவது தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வருவார்கள் என நம்புகிறோம். அந்த உயரிய நோக்கத்திற்காகவே இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்

Tuesday, August 4, 2009

சஃபீனா முதலிடம் முன்னணி வீராங்கனைகள் விமர்சனம்


ஒரு கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் கூட வெல்லாது தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வரும் ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா மீது முன்னணி வீராங்கனைஅகளான ஜெலெனா ஜான்கோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் விமர்சனம் வைத்துள்ளனர்.

செரீனா வில்லியம்ஸ், ஒரு முறை, மக்களின் நம்பர் ஒன் நானே என்று கூறி சஃபீனாவை வெறுப்பேற்றினார்.

முன்னாள் நம்பர் 1 வீராங்கனையும் செர்பிய டென்னிஸ் நட்சத்திரமுமான தினாரா ஜெலெனா ஜான்கோவிச் "எனக்கு பிறகு நம்பர் ஒன் இடத்திற்கு ஒருவர் வரவேண்டுஎன்றால் அது செரீனா வில்லியம்ஸ்தான், நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ ஒருவர் முழுத் தொடரையும் வெல்ல வேண்டும், அதே போல் நம்பர் ஒன் என்றால் வில்லியம்ஸ் சகோதரிகளை வீழ்த்த வேண்டும், அந்த வகையில் வில்லியம்ஸ் சகோதரிகள்குக்கு எதிராக நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன்." இவ்வாறு சஃபீனாவை இடித்துரைத்துள்ளார் ஜெலெனா ஜான்கோவிச்.

வில்லியஸ் சகோதரிஅகள் இருவருக்கும் எதிராக சஃபீனா 2- 9 என்று பிந்தங்கியுள்ள நிலையில் ஜான்கோவிச் 8- 8 என்று சம நிலையில் உள்ளார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா:

"தரவரிசைகளை நான் உருவாக்கவில்லை. அவர்களுக்கு கேள்விகள் இருந்தால் அதனை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பிடம் கேட்கட்டும். ஒரு ஆண்டு முழுதும் ஒருவர் எவ்வளவு போட்டிகளை வெல்கிறார் என்பது பொறுத்தே தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. நான் ஆண்டு முழுதும் விளையாடுகிறேன், கிராண்ட் ஸ்லாம் தொடர்களிலும் சிறப்பாகவே விளியாடி வருகிறேன். செரீனாவையும் வீனஸையும் வெற்றி பெற்றால் மட்டுமே நம்பர் ஒன் இடத்திற்கு வந்து விடமுடியாது, ஆண்டு முழுதும் சிறப்பாக விளியாடினால்தான் இந்த இடத்தை பிடிக்க முடியும். ஒருவரது சாதனைகள் அந்த இரண்டு வீராங்கனைகளுக்கு எதிராக எப்படி உள்ளத் என்பதைப் பொறுத்து தரவரிசைகள் நிர்ணயிக்கப்படுவதில்லை." என்று பொரிந்து தள்ளியுள்ளார் தினாரா சஃபீனா.

மேலும் ஜெலெனா ஜான்கோவிச், வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு எதிராக வைத்திருக்கும் சாதனை வெற்றிகள் குறித்து சஃபீனா கூறுகையில் "ஜெலெனா, வில்லியம்ஸ் சகோதரிகளை கிராண்ட் ஸ்லாம் இறுதி போட்டியில் வீழ்த்தியுள்ளாரா? இல்லை. அடுத்த மட்ட டென்னிஸ் தொடர்களில் அவர்களை வீழ்த்துவது போதுமானதல்ல" என்று எதிர் டோஸ் விட்டார்.

கிறிஸ்டியானோ ரொலான்ல்டோ கால்கள் 90மில். பவுண்டுகளுக்கு காப்பீடு


போர்ச்சுகல் அணி வீரரும், தற்போது ரியால் மேட்ரிட் அணிக்கு மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யபட்டவருமான கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்களை ரியால் மேட்ரிட் கிளப் 90 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு காப்பீடு செய்துள்ளது.

80 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியிடமிருந்து ரொனால்டோவை விலைக்கு வாங்கிய ரியால் மேட்ரிட், அவரது கால்களுக்கு ஏற்படும் காயங்களை உத்தேசித்து இந்த காப்பீட்டை செய்துள்ளதாக பிரிட்டன் ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் முழங்காலில் ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டதால் பதறிய ரியால் மேட்ரிட் கிளப் நிர்வாகம் உடனடியாக அவரது கால்களை காப்பீடு செய்துள்ளது.

இவரை வைத்து சாம்பியன்ஸ் லீக் பாட்டம் வெல்ல ரியால் மேட்ரிட் திட்டம் வகுத்துள்ளது.

எந்திரனுக்குப் பிறகு அரசியல்


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ரஜியினின் ஒவ்வொரு படம் ரிலீசுக்கு முன்பும், தேர்தலுக்குத் தேர்தலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்திகள் வருவது வழக்கம்.
அந்த வகையில் இப்போது எந்திரன் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டுள்ள நிலையில், ரஜினியின் அண்ணன் இதைத் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்த அவர் அளித்த கூறுகையில்,
எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் தம்பி ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். அவருக்கு நல்லது செய்ய மட்டும்தான் தெரியும். எப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இதயம் ரஜினிக்கு.
மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
அவரே இதுபற்றி தெளிவாகக் கூறிவிட்டதால் (!), ரசிகர்களாகிய நீங்கள் எந்த குழப்பத்துக்கும் (!!) ஆளாகத் தேவையில்லை. நிச்சயம் உங்களுக்கு நல்லது எதுவோ அதைத்தான் தம்பி செய்வார்.
தம்பி வந்தால், நிச்சயம் இன்றைக்கு உள்ள பண அரசியலுக்கு முடிவு கட்டுவார். அவருக்கு இதுபோன்ற சூழலே பிடிக்காது. பார்ப்போம்… ஆண்டவன் என்ன கட்டளை இடப் போகிறாரோ…
தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம், மக்களுக்கு முழுமையாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம். எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்றார் சத்யநாராயணா.
வேலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ரசிகர் மன்றங்களின் வேண்டுகோளுக்கிணங்க சத்யநாராயணா ராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது