Thursday, August 6, 2009

சுவாமி மீது சூரிய ஒளி


ராமநத்தம் அருகே சுப்ரமணியர் சுவாமி மீது சூரிய ஒளி நேரடியாக விழுந்த காட்சியை, பக்தர்கள் பார்த்து வணங்கினர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையந்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கி.பி., 1017ம் ஆண்டு மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டில் இக்கோவில் பெயரை, "பிரமீசுவரமுடைய நாயனார்' கோவில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள சுப்ரமணியர் சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்கிற்கு ஒரு வாரத்திற்கு முன்பும், ஆடிப்பெருக்கு முடிந்த ஒரு வாரத்திற்குதினமும் காலை 8 மணி முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுவது ஐதீகம் என கிராம மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு கோவிலில் மட்டுமே இது போன்று அருள்பாலிப்பு தருவதாகவும், அதன் பின்னர் கடலூர் மாவட்டம் பனையந்தூர் சிவன் கோவில், "சுப்ரமணியர் சுவாமி' மீது மட்டுமேசூரிய ஒளி விழுவதாகவும் கூறுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி விழும் காட்சியைக் காண நேற்று காலை 7 மணி முதலே ஏராளமான பக்தர்கள் பனையந்தூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் கூடியிருந்தனர். காலை 8 மணி முதல் 8.05 வரை சுப்ரமணியர்சுவாமி மீது நேரடியாக விழுந்த சூரிய ஒளியை, பக்தர்கள் பரவசத்துடன் கண்டு வணங்கினர்.

2 comments:

S.Muruganandam said...

அற்புத தரிசனம், சூரியன் தன் கிரணங்களினால் அழகன் முருகன் முகத்தை பிரகாசிக்கச் எய்யும் அற்புதக் காட்சி. நன்றி

கோவி.கண்ணன் said...

சாமி மீது சூரிய ஒளி மட்டுமா படுது திருடர்களின் கையும் அங்கே படுகிறது.

நான் திருடர்கள் என்று குறிப்பிடுவது சிலைத் திருடர்களைத் தான்.