Thursday, January 28, 2010

செக்ஸ் உறவால் எடை கூடுமா?


செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது சுத்தமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
ஒரு பெண் ரெகுலராக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும், இடுப்புகள் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்களிடையே உள்ளது.
ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
அதேசமயம், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.
அதேபோல கல்யாணத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை.
செக்ஸ் காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, கல்யாணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, அதுவரை கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
சிங்கிளாக இருப்பவர்களை விட கல்யாணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது.
கல்யாணத்திற்குப் பிறகும், செக்ஸ் உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாராவது விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

9 comments:

இராஜ ப்ரியன் said...

(//அதேசமயம், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.//)

என்னங்கையா இது எனக்கு ஒன்றுமே புரியவில்லை ........ பதிவு முழுவதுமில்லை (அந்த அடிப்புகுறிக்குள் இருக்கிறதே) இது மட்டும்தான். எனக்கு உடல்வாகு பெருத்தோ(குண்டோ)மெலிதாகவோ(சப்பையா) என்பதெல்லாம் பிரச்சனையில்லை.வத்தலோ, தொத்தலோ என்னையும் ஒருத்தவ நம்பி வந்துட்டபிறகு, அவதான் எனக்கு எல்லாமே, உலகத்தின் மொத்த "அழகு"ம் அவள்தான் ....

அடிக்கடி பதிவு போடுங்கள் தினமும் ஏமாற்றம்தான் மிச்சம், உங்கள் வலைத்தளத்திற்கு வந்து வந்து போகின்றேன். முடிந்தவரை உங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு பதியமுடிந்தால் அடிக்கடி பதிவை போடுங்கள்....

Anonymous said...

எனக்கு தெரிஞ்சு விபச்சாரமே இரண்டு வகையா இருக்கு...

1.தன்னுடைய சூழ்நிலை காரணமா ஈடு படுரது
2. கெட்ட சுகத்துக்காக அலைரது

உங்க தலைப்புல நான் பாத்த வரை
கனவன், மனைவி உறவுனால பென்களும் சரி, ஆன்களும் சரி கல்யாணத்து முன்பு பார்த்ததை விட அழகாதான் இருக்காங்க
(ஒருத்தனுக்கு ஒருத்திகிறதாலயா )

//செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, கல்யாணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, //

இதுதான் உண்மை

மேலே சொன்ன அந்த 2 வது கேசும் பாத்துருக்கேன் (நம்ம ஏரியால உள்ள பிகரு ஆரம்பத்துல பாத்தா சூப்பரா இருக்கும்)

இப்ப கேடுகெட்ட சுகம் ஒன்னுதான் முக்கியம்னு அலஞ்சு திரிஞ்சு ஒல்லியா போயி பாக்கவே அசிங்கமா இருக்கு

கவிதை07 ல தான் டவுட்டு கேக்கனும்

வானதி said...

இராஜ ப்ரியன் said...
(//அதேசமயம், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.//)

வாருங்கள்ரஜப்பிரியரே எதுவும் சுலபமாக விளங்கக்கூடாது. உங்கள் ஆசையை நிறைவேற்றமுயற்சிக்கிறேன்
வானதி

வானதி said...

Anonymous said...
எனக்கு தெரிஞ்சு விபச்சாரமே இரண்டு வகையா இருக்கு...

1.தன்னுடைய சூழ்நிலை காரணமா ஈடு படுரது
2. கெட்ட சுகத்துக்காக அலைரது

தங்கள் வரவுக்கு நன்றி
வானதி

DEVADAS said...

ULLATHIL MANACH SANTHOSAMUM SUGAMUM IRUNTHAL UDAL PARUMAN THANAGAVE VALARUM ITHUTHAN UNMAI.

இராஜ ப்ரியன் said...

//எதுவும் சுலபமா விளங்கக்கூடாத//, நான் காமசாஸ்திரம் படித்து முடித்து ரொம்பநாள் ஆகிறது. அதில் நிறைய விளங்கியது மிச்சத்தை பொறுத்திருந்து புரிந்துகொள்கிறேன்............
நன்றி தங்களின் மறுமொழிக்கு

வானதி said...

DEVADAS said...
ULLATHIL MANACH SANTHOSAMUM SUGAMUM IRUNTHAL UDAL PARUMAN THANAGAVE VALARUM ITHUTHAN UNMAI.
வருகைக்குநன்றி
வானதி

வானதி said...

இராஜ ப்ரியன் said...
//எதுவும் சுலபமா விளங்கக்கூடாத//, நான் காமசாஸ்திரம் படித்து முடித்து ரொம்பநாள் ஆகிறது. அதில் நிறைய விளங்கியது மிச்சத்தை பொறுத்திருந்து புரிந்துகொள்கிறேன்............
நன்றி தங்களின் மறுமொழிக்கு
உங்கள்ளவுக்கு நான் படிக்கவில்லை. ராஜப்பிரியனின் வலிப்பூவை பார்க்கிறேன், விரைவில் பின்னூட்டமிடுகிறேன்.
வானதி

இராஜ ப்ரியன் said...

என்னுடைய வலைப்பூவில் எதுவுமிருக்காது என்னுடைய பெயரைத்தவிர, நீங்கள் ஏன் சிரமப்படப்போகிறீர்கள் அதையெல்லாம் தேடி, நான் ஒரு வலைத்தளத்தில் கிறுக்கிக்கொண்டிருகிறேன் www.ithutamil.com நேரமிருந்தால், நல்ல மனநிலையிலிருந்தால் பாருங்கள் ........ ஆனால் என்னுடைய பதிவுகளை படித்தவுடன் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நான் பொறுப்பில்லை....... ஒரு முக்கியமான விடயம் நான் பள்ளி பாடநூல்களைத்தவிர எதையும் வாசித்தது கிடையாது. நன்றி மீண்டுமொருமுறை பதிலளித்ததற்கு .......