Friday, August 31, 2012

சாதனையாளர்களை மீட்ட வீரர்கள்

இற்றைக்கு 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "நாசா' வின் வரலாற்றில் அரும்பெரும் சாதனையொன்று படைக்கப்பட்டிருந்தமை உலகத்தார் அனைவரும் அறிந்ததே.ஆமாம்! சந்திர மண்டலத்தில் முதன் முதலில் கால் பதித்தவர் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்ட நீல் ஆம்ஸ்ட்ரோங்கும் (Neil Armstrong) அவரது சகாக்களான மைக்கேல் கொலின்ஸ் (Michael Collins) பஸ் அல்ட்ரின் Buzz Addrinஆகியோருடன் இணைந்து அங்கு அமெரிக்காவின் தேசியக் கொடியை பறக்க விட்டிருந்தனர். இத்தகைய அரிய சாதனையை நிகழ்த்திய பின்னர், கடந்த 1969 ஜூலை 24 ஆம் திகதியன்று பூமியை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த இந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பான முறையில் வரவேற்று, வெளியே கொண்டு வந்து சேர்த்த பெருமைக்குரியவர்கள் யாவரென்பது எம்மில் பலருக்குத் தெரியவே தெரியாது. அமெரிக்க கடற்படையின் அனைத்து நுணுக்கங்களையும் அக்கு வேறாக, ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்து அவற்றில் தேர்ச்சி பெற்ற ' 'Seal'' என அழைக்கப்படும் அமெரிக்க கடற்படை வீரர்களான ஜோன் வூல்பிராம் (John Wolfradm) வெஸ் செசர் (Wes Chesser), கார்மிக்கேல் (Carmichael), மைக் மலோரி (Mike Mallory) ஆகிய நால்வருமே அவர்களாவர். மூன்று சரித்திர நாயகர்களையும் சுமந்தபடி பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த அப்பலோ 11 விண்கலம் பசுபிக் சமுத்திரத்தில் ஹவாய் தீவுகளுக்கு சுமார் 1000 மைல்களுக்கு அப்பால் அவர்கள் வந்திறங்கியதுமே கண்மூடித் திறப்பதற்குள் இந்த நான்கு கடற்படை வீரர்களும் ஸ்தலத்திற்கு விரைந்து சென்றனர். முழு உலகுமே பெரும் பரபரப்புடன் இந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கணத்தில் கடற்படை வீரர் ஜோன் வூல்பிராம், மணிக்கு 1000 மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்த விண்கலத்தில் வீரர்கள் அமர்ந்திருந்த மேற்பரப்பில் நீராவியால் உந்தப்பட்ட நிலையில் திடீரெனத் தாவிப் பாய்ந்தார். வூல் பிராம் ஆம்! இராட்சத அலைகளை அடித்தே குமுறிக் கொண்டிருந்த பசுபிக் சமுத்திரத்தை நோக்கி தனது ஒரு காலையும், விண் கலத்தில் ஒரு காலையும் வைத்திருந்தபடியே அவர், அந்த வரலாற்றுச் சாதனையாளர்களை உயிருடன் பாதுகாத்து வெளியே கொண்டு வரும் பொறுப்பு தனது கைகளிலேயே உள்ளதென உணர்ந்தார். இது குறித்து வூல்பிராம் தெரிவிக்கையில், ""விண்வெளி வீரர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்கவென நான் விண்கலக் கதவின் யன்னல் ஊடாக எட்டிப் பார்த்தேன். அவர்களோ என்னைக் கண்டதும் புன்னகை பூத்தபடி, ""அனைத்தும் வெற்றியே'' என்பதை தங்கள் பெருவிரல்களை அசைத்தபடி சைகை காட்டினர். அவர்களின் நலன்கள் பற்றி அறிந்து கொண்டதும் நாம் அவர்களை வெளியே கொண்டு வரத் தயாராகினோம்'' என்றார்.
அமெரிக்க கடற்படையில் விசேட Seal (நீர் நாய்கள்) படைப் பயிற்சியைப் பெற்றிருந்த வூல்பிராமும், அவரது அணியினரும் இதற்கு முன்னரும் "அப்பலோ'வின் சந்திர மண்டல ஆராய்ச்சிப் பணிகளில் பேருதவி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பலோ விண்கலத்தை பாதுகாத்து நிலை நிறுத்துதல், விண்வெளி வீரர்கள் மீதான களங்கத்தைப் போக்குதல், அமெரிக்க ஹோர்நெட் ((Hornett) எனப்படும் விமானந்தாங்கிக் கப்பலுக்குப் பாதுகாப்பளிக்கும் பொருட்டு, நீருக்கும் நிலத்திற்கும் மேலாகப் பறந்தபடி வட்டமிடும் உலங்கு வானூர்தியில் வீரர்களை ஏற்றுதல் போன்ற முக்கிய பணிகள் அவர்கள் முன்னே காத்திருந்தன. அப்பலோ ஐஐ விண்கலத்தினுள் "வூல்பிராம்' ஏறும் முன்னரே அவர் அதனை இறுகப் பற்ற வேண்டியதாயிருந்தது. உலங்கு வானூர்தியில் கீழே தொங்கிய நிலையில், அவர் குளிர்ச்சி தரும் நீரில் தாவிப் பாய்ந்தபடி உயர் தொழில்நுட்பம் வாய்ந்த முனையொன்றில் சுருக்குப் போடப்பட்ட நீளமான அந்த கயிற்றை அடைந்தார். 12,000 இறாத்தல் எடையுள்ளதும் மிதப்பதையும் தொங்குவதையும் தடுத்து நிறுத்துவதற்கெனப் பயன்படுத்தப்பட்டு வரும் கடலின் நங்கூரமென அழைக்கப்படும் கடலுக்கு அடியிலான "பரசூட்' (Parachute) முறைகளில் கைதேர்ந்தவரான அவரது அமானுஷ்ய வீர, தீரச் செயல்களையே அது உணர்த்துவதாக அமைந்தது. ""சந்திர மண்டல மனிதர்களின் மீள் வருகை'' பற்றிய (Moon Men Return) எனும் ஆங்கில நூலின் ஆசிரியரான ஸ்கொட் கார்மிக்கேல் தெரிவித்தார். பசுபிக் ஆழ்கடலில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த வரலாற்றுச் சாதனை புரிந்த விண்வெளிக் கப்பலில் பாய்ந்தேறுவதற்கு வூல்பிராம் ஒருகணம் தனது இலக்கைத் தவற விட்டிருப்பாராயின் அதனைப் பிடிப்பதற்கு அவருக்கு முடியாமற் போயிருந்திருக்கும். விண்வெளி வீரர்களுக்கு ஏமாற்றம் எதனையும் அளிக்காத விதத்திலும் உலகத்தாரை உற்று நோக்கிப் பார்க்க வைத்திடும் வகையிலும் தமது பணியைச் செவ்வனே செய்து முடித்தார். கர்ண கடூரமான பேச்சொலிகளைக் கொண்டிருந்த கடற்படை வீரர்களான வூல்பிராம், அவரது சக வீரர்களான வெஸ் செசர் மைக் மலோரி ஆகிய மூவரும் பன்னிரெண்டு அடி உயரமான ஆர்ப்பரித்துக் குமுறியெழும் சமுத்திர அலைகளுக்கும் மணிக்கு 28 மைல் வேகத்தில் வீசிய புயற் காற்றுக்கும் மத்தியில் அப்பலோ 11 விண்கலத்தைச் சுற்றி நின்ற 200 இறாத்தல் எடை கொண்ட மிதக்கும் கலத்தில் ஏறவெனப் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். தற்போது மிக்சிக்கன் மாநிலத்தில் உள்ள ஹார்ட்லாந்தில் (ஏச்ணூtடூச்ணஞீ) பயன்பாட்டு முறைமைகளில் பணியாற்றி வரும் 66 வயதான மகோரி, ""இந்தச் சாதனையைப் புரிந்த பயில்வான்கள் நாங்களே'' என நகைச்சுவையுடன் கூறினர். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளும், விண்கலத்தை வட்டமிட்ட கலத்தை கடற்படை வீரர்கள் எவ்வளவு விரைவாக சுற்றிக் கட்டுவதைப் பார்த்து வியந்தே போயினர். நானும் வூல்பிராமும் நீச்சலடிப்பதில் வல்லவர்கள் என்பதால் நாமிருவரும் விரைவாக நீந்திச் சென்று அந்தக் கலத்தைச் சுற்றிக் கட்டினோம்'' என்றார். கார்மிக்கேல் இதுபற்றி தெரிவிக்கையில், ""பசுபிக் சமுத்திர இராட்சத அலைகள் எம்மை நோக்கி சீறிப் பாய்ந்து வந்த போது நீச்சல் வீரரõன நண்பர் மலோரி, குதிரை போன்றே அதில் தாவிப் பாய்ந்து செயற்பட்டார்'' என்றார். இன்னுமொரு வீரரான செசர் இது குறித்து கூறுகையில், ""எப்போதுமே சாந்த சொரூபியாக இருக்கும் நண்பர் ""வெஸ்'' எதனை எவ்வாறு செய்ய வேண்டுமோ, அதனை அவ்வாறே கச்சிதமாகச் செய்து முடிப்பதில் வல்லவர்'' என புகழாரம் சூட்டினார்.
அந்த உயிர்காப்புத் தெப்பங்களில் (rafts) சென்றிருந்த இந்தக் கடற்படை வீரர்கள் நால்வரும், அப்பலோ 11 விண்கலத்தில் புகுந்து வீரர்கள் மூவரையும் வெளியே கொண்டு வந்ததுடன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான அணியின் தலைவர் ""கிளன்சி ஹட்டில் பேர்க்கும் (Glancy Hattleberg) விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ரோங், மைக்கேல் கொலின்ஸ், பஸ் அல்ட்ரின் ஆகிய மூவரும் பத்திரமாக வெளியேறி வர பெரிதும் உதவினார். வெளியேறிய விண்வெளி வீரர்களும்Seal கடற்படை வீரர்களும் உயிரியல் ரீதியாக தனியாகப் பிரிக்கப்பட்ட ஆடையணிகள் என அழைக்கப்படும் சந்திரமண்டலத்திலிருந்து அவர்களுக்குத் தெரியாமலேயே வீரர்கள் கொண்டு வந்திருக்கலாமென அஞ்சப்படும் உயிரியல் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் பொருட்டு விசேட அங்கிகளையும் முகமூடிகளையும் அவர்கள் அணிந்திருக்கக் காணப்பட்டனர். "பில்லி பவ்நெட்' என்ற சட்டை போன்ற கடற்படை படகொன்றில் ஏற்றப்பட்ட அப்பலோ 11 வீரர்கள் மூவரும் பின்னர் Hornett எனப்படும் அமெரிக்க விமானத் தாங்கிக் கப்பலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பலோ 11 இன் பின்னர் வூல்பிராமின் வாழ்வு திசை திரும்பியது. @தவாலய திருப்பலியொன்றில் கலந்து கொண்டதன் மூலமே இத்திடீர் திருப்பம் ஏற்பட்டதெனலாம். அந்தக் காலம்தொட்டு அவர் எல்லாம் வல்ல ஆண்டவனின் ஆணைப்படி தென்கிழக்காசியாவில் மதப் போதகராகச் சேவையாற்றி வருகின்றார். தற்போது அப்பலோ ஐஐ விண்கலம் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் அமைந்துள்ள விண்வெளி அருங்காட்சியகத்திற்கு (Space Museum) அவரும் அவரது சகாவான முன்னாள் கடற்படை வீரர் செசரும் Chesser அண்மையில் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மெட்ரோநியூஸ் 03/08/12

Wednesday, August 8, 2012

மனம் கவரும்பொண்ட் படங்கள்

திரைப்பட உலகில் 50 வருட கால வரலாற்றைக் கொண்ட ஜேம்ஸ் பொன்ட் திரைப்படக் காட்சிகளில் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல கவர்ச்சியான ஆடை அலங்காரங்களைக் கொண்ட படக் காட்சியொன்று உள்ள ""பாபிக்கன் நிலையத்தில்'' (Barbican Centre) ) தற்போது நடைபெற்று வருகின்றது. ""ஜேம்ஸ் பொன்ட் (James Bond திரைப்படங்கள் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் முகமாகவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்காட்சிகளில் பிரபல ஹொலிவுட் நடிகையான உர்சுலா அன்ட்ரெஸ் (Ursula Andress நீச்சலுடையில் (Bikini) ) தோன்றும் படங்கள் தொடக்கம் தற்போதைய பொண்ட் நடிகர் டானியல் கிறேய் இறுக்கமான நீல நிற நீச்சலுடையில் தோன்றும் படங்கள் வரையான படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1964 இல் வெளிவந்திருந்த சீன்கொனரி ஜேம்ஸ் பொன்ட் நடித்த அஸ்டன் மார்ட்டின் டி.பி. 5 (Aston Marein ) தொடக்கம் ஈடிஞு அணணிtடஞுணூ ஞீச்தூ திரைப்படத்திலிருந்து இவ் இரண்டு படங்களும் இதில் அடங்குகின்றன.
ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் என்றுமே மறக்க முடியாத மனங்கவர் காட்சிகளாக ஆங்கில சினிமா ரசிகர்களை ஆகர்ஷித்திருந்த காட்சிகள் பலவும் துப்பறியும் நிபுணராக நடித்த ஜேம்ஸ் பொன்டின் 50 வருட கால நினைவைக் கொண்டாடும் கண்காட்சியை மேலும் நிறைத்துள்ளன. திரைப்படத்தில் கடலுக்குள் இருந்தவாறு பிரபல நடிகை உர்சுலா ஆன்டசரெஸ் வெள்ளை நிற நீச்சலுடையில் தோன்றிய படமும் ''Die Another Day' ' திரைப்படத்தில் ஹலே பெரியின் இரண்டு படங்களுக்கருகில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. அத்துடன் Thunde ball திரைப்படத்தில் நடிகர் சீன் கொனரி அணிந்திருந்த காற்சட்டை மீளுருவாக்கம் செய்யப்பட்ட நிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் ''Casino Rogalle' திரைப்படத்தில் தற்போதைய ஜேம்ஸ் பொன்ட்டான டானியல் கிறேக் இறுக்கமான அந்த நீல நிற நீச்சலுடையில் காணப்பட்டபோது பெண் பொன்ட் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருந்ததுடன் அவர் எதிர்வரும் ஓகஸ்டில் வெளிவரவுள்ள திரைப்படத்தில் மீள தோன்றவுள்ளார். எதிர்வரும் செப்டம்பரில் இந்தக் கண்காட்சி முடிவுற்றதும், இந்த காட்சிப்படுத்தப்பப்படலமானது சர்வதேச மட்டத்தில் உலா வரப் போகின்றதாம். ஒஸ்கார் விருது பெற்ற ஆடையலங்கார பெண் வடிவமைப்பாளரான லிண்டி ஹெமிங் இது குறித்து தெரிவிக்கையில், திரைப்படத்தில் வரும் வடிவமைப்புடன் தொடர்பு பட்டதாகவே இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. வருடக் கணக்காக நாம் இத்தகைய ""ஜேம்ஸ் பொன்ட்'' திரைப்பட நடிகர் நடிகையர் பாவித்த ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் கலையம்சம் பொருந்திய ஏனைய படைப்புக்களைத் தாங்கிவரும் படக் காட்சிகளைச் சேகரித்து வந்துள்ளோம்.
ஜேம்ஸ் பொன்ட் திரைப்படமொன்றில் நீங்களும் இணைந்து கொண்டதற்கானதோர் உணர்வை இந்தக் கலையம்சங்கள் உங்களுக்குத் தந்துவிடும் வகையில் உள்ளன என்றே கூற வேண்டும் என்றார். பெரும் எண்ணிக்கையிலான பொன்ட் திரைப்பட வில்லன் மாக் பற்றிய படங்களும் கண்காட்சியை களைகட்ட வைப்பதுடன் நடிகர் ஸ்கராமங்கள் பாவித்திருந்த பொன்னிறத் துப்பாக்கி, தொப்பி ''From Russia with Love' திரைப்படத்தில் நடிகர் ரோசா கிளைப் பாவித்த சுருக்குக் கத்தி கொண்ட சப்பாத்துக்கள் பற்றிய காட்சிப்படங்களும் இவற்றிலடங்குகின்றன. ஆயினும் இந்த அரிய கண்காட்சியானது M 16 துப்பறியும் நிபுணரான ஜேம்ஸ் பொன் திரைப்படக் கலையம்சங்களுக்கு அப்பால் அதன் சிருஷ்டிக் கர்த்தாவான இயன் பிளெமிங் (Ian Fleming) தனது சொந்த அனுபவங்கள் அறிவு மற்றும் நண்பர்களை அடிப்படையாக வைத்து பற்பல கதைகளைத் தழுவி பாத்திரப் படைப்புக்களை உருவாக்கிய விதம் குறித்த விளக்கப் படங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.