Thursday, January 29, 2009

கி.பி. 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு


கடலூர் அருகே கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பேய்க்காநத்தம் பகுதியில் செல்லியம்மன் கோயில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் கோயில் பகுதியில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. அதில் கல்வெட்டு ஒன்று இருந்ததை கவிஞர் தங்க.வெங்கடேசன் என்பவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்று துறைக்கு தெரிவித்தார்.அதன்படி தொல்லியல் ஆய்வாளர்கள் சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன், கண்ணன் ஆகியோர் பேய்காநத்தம் சென்று கல்வெட்டை பார்வையிட்டனர். அதில், பேய்காநத் தத்தை அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்த கூளப்பன் என்பவர் அவ்வூரை தானமாக கோயிலுக்கு கொடுத்துள்ளதாக வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எழுத்தின் வடிவம் கி.பி. 16ம் நூற்றாண்டின் இறுதி காலத்தை சேர்ந்தது, கல்வெட்டில் 2 என்ற வார்த்தை இருந்தால், இதன் துணை கல்வெட்டு அதே பகுதியில் புதையுண்டு இருக்கலாம் என்பதும் ஆய்வில் தெரியவந்தது.இந்த கல்வெட்டு கி.பி. 1854ம் ஆண்டில் செஞ்சி பகுதியின் மன்னனாக இருந்த வைப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதும், அதற்கான அரிய கலை படைப்புகளும் கிடைக்க பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அழகப்பன் கூறுகையில், ‘‘இந்த கல்வெட்டின் மூலம் இப்பகுதியையட்டி வேகாக்கொல்லை, ஆயிப்பேட்டை, சத்திரம், மீனாட்சிப்பேட்டை, பாச்சாரபாளையம், கன்னித்தமிழ்நாடு, வழுதலாம்பட்டு ஊர்களில் கள ஆய்வு மேற்கொண்டு வரலாற்று விவரங்களை சேகரிக்க வாய்ப்பு இருப்பதாக’’ தெரிவித்தார்.

நந்தி, சர்ச் பார்க்கவாய்ப்பு மேட்டூர் நீர்மட்டம் சரிவுமேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவிட்டதால்,
கடந்தமூன்றாண்டு களாகமூழ்கியிருந்தஜலகண் டேஸ்வரர் கோவில் நந்தி, சர்ச் கோபுரம்ஆகியவை வெளியில் தெரிகின்றன.மொத்தம் 151 சதுர கி.மீ., நீர்ப்பரப்பு பகுதியைக் கொண்ட மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்ட
உயரம் 120 அடி. அணையின் நீர்ப்பரப்பு பகுதியில் பல நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட ஜலகண்டேஸ் வரர் கோவிலும், சர்ச் ஒன்றும் உள்ளன.பண்ணவாடி நீர்ப்பரப்பு பகுதியில் உள்ள இந்த வரலாற்று சின்னங்களை பார்க்க மாநிலம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கோடைக் காலத் தில் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும்போது நந்தி சிலையும், நீர் மட்டம் 82 அடியை எட்டும்போது "சர்ச்' கோபுரமும் நீருக்குள் மூழ்கி விடும்.

கடந்த 2005 ஜூலை 19ம் தேதி 69.870 அடியாக உயர்ந்ததால் நந்தி சிலை முழுமையாக நீரில் மூழ்கியது. நீர்மட்டத்தின் ஏற்ற, இறக்கம் காரணமாக அவ்வப்போது சர்ச் கோபுரம் மட்டும் வெளியில் தெரிந்தது. மூன்று ஆண்டுகளில் ஜனவரி முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் நந்தி மற்றும் சர்ச் கோபுரம் இரண்டும் ஒரே நேரத்தில் வெளியில் தெரியவில்லை. சுற்றுலாப் பயணி ள் சர்ச் கோபுரத்தை மட்டுமே பார்வையிட்டு ஏமாற்றத்தோடு திரும்பினர்.நேற்று நீர்மட்டம் 62.33 அடியாக இருந்த நிலையில் மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் நேற்று மாலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 293 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் வறட்சி நீடிப்பதால் அணைக்கு அதிகபட்ச
நீர்வரத்து கிடைக்க காலதாமதம் ஆகும். கடந்த 2005 ஜனவரி இறுதியில் நீருக்கு வெளியே தெரிந்த நந்தி, சர்ச் கோபுரம் ஆகிய இரு வரலாற்று சின்னங்களும் அணை நீர்மட்டம் குறைந்ததால் மூன்றாண்டுக்கு பின் தற்போது ஒன்றாக தெரிவது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்ச், கோபுரம் ஆகியவற்றை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், மூன்றாண்டுக்கு பின், ஜனவரியில் மேட்டூர் அணை நீர்மட்டம் 62 அடியாக சரிந்துள்ளது டெல்டா விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அரிய வகை கோழி மீட்புதூத்துக்குடி அருகே உள்ள மடத்தூரில் ஒர்க்ஷாப் வைத்திருப்பவர் தங்கம். இவரது ஒர்க்ஷாப் முன்பு விநோத பறவை ஒன்று, காலில் அடிபட்டு கிடந்தது.கிராமப்புறங்களில் நாமக்கோழி அல்லது உள்ளான் என்று அழைக்கப்படும் இது புறா போல் தோற்றம் உடையது. இதன் அலகுகள் ஆரஞ்சு நிறத்திலும், நுனி அலகு மஞ்சள் நிறத்திலும் காணப்படும். நீர் நிலைகளில் மட்டுமே வாழும் இது, வேடந்தாங்கல் அல்லது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இருந்து வந்திருக்கலாம். ஆங்கிலத்தில் ‘‘காமன்கூட்” என்றழைக்கப்படும் இந்த பறவைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த தங்கம், பின்னர்தூத்துக்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த பறவையை வல்லநாடு காட்டுப் பகுதியில் கொண்டு போய் விடப் போவதாக தெரிவித்தனர்

சாதனை

சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கைவிரல்களை பின்னால் மடக்கி 12 கிலோ எடையுள்ள கல்லை 2 நிமிடம் 40 வினாடிகளில் தூக்கி, கின்னஸ் சாதனைக்கு முயற்சித்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

Tuesday, January 27, 2009

கவுதம புத்தர் பிறந்த இடம் எது?பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த, "சாந்தினி
சவுக்' படத்துக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தர்
பிறந்த இடம் பற்றி படத்தில் தவறான வசனம் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, இந்தியாவிலும் அதற்கு தடை விதிக்க வேண்டுமென நேபாள அரசு வலியுறுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த, "சாந்தினி சவுக் டூ சீனா'
என்ற படம் சமீபத்தில் வெளியானது. நேபாளத்திலும் சில இடங்களில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தில் கவுதம புத்தர் இந்தியாவில் பிறந்ததாக ஒரு வசனம் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, நேபாளத்தில் போராட்டம் வெடித்தது. அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அந்த படத்தை
நேபாளத்தில் திரையிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவிடமும் நேபாள அரசு சார்பில் அதிருப்தி
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் தகவல் தொடர்பு அமைச்சர் கிருஷ்ண பகதூர் மகரா கூறியதாவது: உண்மையில் கவுத புத்தர், நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். ஆனால், "சாந்தினி சவுக்' படத்தில் அவர் இந்தியாவில் பிறந்ததாக வசனம் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக, அந்த படத்துக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் சார்பில் இந்தியாவிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு மகரா கூறினார்.
நேபாள பத்திரிகையாளர் பிரல்கத் ரிஜால் கூறுகையில், "இந்த
படத்தில் இடம் பெற்றுள்ள வசனம், நேபாள மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. உலகின் மற்ற இடங்களில் இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக, அந்த வசனத்தை நீக்குவதற்கு படத்தின் தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மொபைல்போன் படுத்தும் பாடு :ஆஸ்திரேலியாவில் மொபைல் போன் வைத்திருப்பவர்களில்,
50 சதவீதத்தினர், அதை கழிவறையிலும் பயன்படுத்துவது, ஆய்வில் தெரியவந் துள்ளது. ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தைவான் நாடுகளில், "மைக்ரோ சாப்ட்' நிறுவனம் நடத்திய ஆய்வில்
தெரியவந்துள்ள முடிவுகள் குறித்த விவரங்கள் வருமாறு:
ஆஸ்திரேலியாவில் மொபைல் போன் வைத்திருப்பவர்களில் இருவரில் ஒருவர், அதை கழிவறையில் உட்கார்ந்து கொண்டு பயன் படுத்துகின்றனர். மொபைல் போன் வைத்திருப்பவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர், தங்கள் காதலை அதன் மூலம் தெரிவிக்கின்றனர். சீனாவில்
66 சதவீதம் பேர், கழிவறையில் உட்கார்ந்தபடி மொபைல் போன்களில் பேசுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் பேர், தாங்கள் சாப்பிடும் போதும் கூட மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். 62 சதவீதம் பேர் வாகனம் ஓட்டும் போதும், தூங்கப் போகும் போது கூட 48 சதவீதத்தினரும் மொபைல் போன்களில் பேசுவதாக தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியர்களை
பொறுத்தவரை, அடிக்கடி மொபைல் போன்களை மாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Monday, January 26, 2009

டாக்குமென்டரி படம்ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி அருகேயுள்ள
மிர்சாபூரில் தோழிகளுடன் ஞாயிற்றுக்கிழமை
விளையாடுகிறார், தனது நிஜ வாழ்க்கையை
சித்திரிக்கும் "ஸ்மைல் பிங்கி' ஆவணப் படத்தில்
தோன்றிய பிங்கி (வலது ஓரம்

உத்தரப் பிரேதசத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி பிங்கி குறித்த தயா ரிக்கப்பட்ட "ஸ்மைல் பிங்கி' என்ற டாக்குமென் டரி படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது
உதட்டுப் பிளவுடன் பிறக்கும் சிறுமி, பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதுதான் அப் படத்தின் கரு. மிர்சாபூர் மாவட்டம் ராம்பூர் தகாபா கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்தர் சோங்க ரின் ஆறு வயது மகள் பிங்கி. இவர், பிறப்பி லேயே உதட்டு பிளவுடன் பிறந்ததால் சமூகத்தி லிருந்து ஒரங்கட்டப்படுகிறார்
இதனால் சிறு வயதிலே மனரீதியாக பாதிக்கப் படும் சிறுமி பிங்கியை சமூக ஆர்வலரான பங் கஜ், டாக்டரிடம் காண்பித்து உதட்டுப் பிளவை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்கிறார்
அதன் பிறகு அந்த சிறுமியை சமுதாயம் எப் படி பார்க்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது. 39 நிமிஷம் ஒடும் இப்படத்தை மேகன் மைலன் என்பவர் இயக்கியுள்ளார்
ஏழை விவசாயின் மகள் உதட்டு பிளவு சிகிச் சைக்கு பிறகு சமூகத்தில் மற்ற சிறுமிகளை போல இயல்பு நிலைக்கும் திரும்பும் இந்த படம் திரைப்படத் துறையின் உயரிய விரு தான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது
பிப்ரவரியில் நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்க பிங்கி தனது தந்தையு டன் அமெரிக்கா செல்கிறார்.
).

Friday, January 23, 2009

ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கில படமான ஸ்லம் டாக் மில்லியனர் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை குடிசைப் பகுதியில் வாழும் ஆதரவற்ற இளைஞர் ஒருவர் டி.வி. பரிசுப் போட்டியில் பங்கேற்று பல்வேறு சிக்கல்களை கடந்து கோடீஸ்வரன் ஆவதே இந்த படத்தின் கதை. லண்டனை சேர்ந்த டேனி போய்லே இயக்கிய இந்த படத்தில் நடிகர் அனில் கபூர், தேவ் படேல் உள்ளிட்டோர் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இப்படம் பெருமை மிகு ‘கோல்டன் குளோப்’ விருதுகளை தட்டிச் சென்ற நிலையில், சினிமா உலகின் தலைசிறந்த பரிசாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு ஸ்லம் டாக் மில்லியனர் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2 சிறந்த பாடல்களுக்கும் சிறந்த இசை அமைப்பாளர் விருதுக்கும் ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சைமன்), சிறந்த படத்தொகுப்பு, சவுண்ட் எடிட்டிங் மற்றும் சவுண்ட் மிக்சிங் (ரெசூல் பூக்குட்டி), சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குனர் (டேனி போய்லே) உட்பட மொத்தம் 10 பிரிவுகளில் இந்த படம் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் உள்ள கோடக் தியேட்டரில் நடக்கும் விழாவில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். அப்போதுதான், ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்கு என்னென்ன விருதுகள் கிடைக்கும் என்பது தெரியவரும்.
இது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில்ஆஸ்கர் விருதுக்கு ஸ்லம் டாக் மில்லியனர் படம் பரிந்துரைக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இறைவன் கருணையாலும், மக்களின் பிரார்த்தனையாலும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்லது நடந்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்

Thursday, January 22, 2009

அழகான பொண்னுதான்

அழகான பெண்களைக்கண்டால் இன்னுமொரு முறை பார்க்கத்தூண்டும். உடைகள் பெண்களுக்கு அழகு சேர்க்கின்றன. முகம் ,நெற்றி,கண், இமை,கன்னம்,விழி,மூக்கு,வாய்,உதடு,பல்,நாடி,கை,விரல்கள் என பெண்களை அங்கம் அங்கமாக வர்ணிக்கலாம் ஆனால் முதுகு அழகா என்பதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது . அசத்தல் முதுகை பார்த்து ரசியுங்கள்


Tuesday, January 20, 2009

'விலங்கு நேயம்'ஆறறிவுள்ளவர்கள் என்று சொல்லிக்கொண்டே சகமனிதர்
மீது வெறுப்பை உமிழ்வது "மனிதநேய'த்தின் தற்போதைய
இலக்கணமாகிவிட்டது. ஆனால், பரம எதிரியான பூனைக்குட்டிக்கு பால் கொடுத்து வளர்க்கிறது நாய் ஒன்று. இந்த "விலங்குநேய' காட்சியை திருப்பூரில் காண்பவர்கள் அதிசயிக்கின்றனர். திருப்பூர், வெள்ளியங்காடு, முத்துவிநாயகர் கோவில் வீதியில்
வசிப்பவர் சொக்கப்பன்; இவரது நாய், வீட்டிலுள்ள 22 நாட்களே ஆன பூனைக்குட்டிக்கு பால் கொடுக்கிறது. பூனைக்குட்டி பசிக்காக "மியாவ்' என்று குரல் கொடுக்கும்போதெல்லாம் ஓடிச்சென்று பால் கொடுக்கிறது, நாய்.சொக்கப்பன் பெட்டிக்கடை நடத்துகிறார். இவர் "பப்பி' என்ற இந்த நாயை 13 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். "பப்பி' ஏற்கனவே 22 தடவை குட்டிகளை ஈன்றுள்ளது; ஒரு மாதத்துக்கு முன் இரண்டு குட்டிகளை ஈன்றது.பத்து நாட்களுக்கு முன் சொக்கப்பன் வீட்டில் பூனை ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று சென்றது. அதில் ஒரு
குட்டியை பக்கத்து வீட்டுக்காரர் பராமரித்து வருகிறார்.


சொக்கப்பன், தன் வீட்டில் இருக்கும் பூனைக்குட்டிக்கு பால்
வைத்தபோது, குடிக்கவில்லை. இந்நிலையில், நாய் "பப்பி'யிடம்
பூனைக்குட்டி பால் குடிப்பதை சொக்கப்பன் பார்த்து
ஆச்சரியப்பட்டார். பசியெடுக்கும்போது, பூனைக்குட்டி "மியாவ்'
என்று குரல் கொடுக்கிறது. அதைக் கேட்டதும், "பப்பி'
எங்கிருந்தாலும் ஓடிச் சென்று பூனைக்குட்டிக்கு பால்
கொடுக்கிறது. பூனைக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் தகவல்
பரவியதால், அப்பகுதி மக்கள் சொக்கப்பன் வீட்டுக்குச் சென்று
நாயையும், பூனைக்குட்டியையும் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.

Monday, January 19, 2009

ஒபாமாவை முந்தினார் சத்யம் ராஜு


இந்தியர்கள் கடந்த சில நாட்களில் இன்டர்நெட்டில் அதிகம் தேடிய நபர் யார் தெரியுமா? ரூ.7000 கோடி மோசடி செய்த சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனர் ராமலிங்க ராஜு. இந்த விஷயத்தில் இவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் பராக் ஒபாமை முந்திவிட்டாராம்.கூகுள் இணையதளம் தரும் விவரம் இது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்யம கம்ப்யூட்டர்ஸ் கணக்குவழக்குகளில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்ததை ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.அதில் இருந்தே இன்டர்நெட்டில் அவரை பற்றிய விஷயங்களை தேடி தேடி பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஒபாமாவை வலைவீசி தேடியவர்களும் ராமலிங்க ராஜுவை தேடியவர்களும் ஏறத்தாழ ஒரே எண்ணிக்கையில்தான் இருந்தனர். துல்லியமாக சொன்னால் ஒபாமா கொஞ்சமே கொஞ்சம் முந்தி இருந்தார்.ஆனால் மோசடி செய்தி வெளியான 7ம் தேதியில், ஒபாமா விஷயங்களை தேடியவர்களை விட ராமலிங்க ராஜுவை தேடியவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்தது. அதில் இருந்து ராஜு ராஜ்யம்தான். ஒபாமாவை பின்னுக¢குத் தள்ளி தனது திடீர் பிரபலத்தை நிலைநாட்டி வருகிறார்.மாநில அடிப்படையில் பார்க்கும்போது, ஆந்திராவை சேர்ந்தவர்கள்தான் ராமலிங்க ராஜுவை அதிகம் தேடி உள்ளனர். இரண்டாவது இடத்தில் தமிழகம். கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், டெல்லி ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன. நகரங்களில் ஹைதராபாத், சென்னை, பெங்களூர் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. நாட்டுக்கு வெளியே, எமிரேட்ஸ், சிங்கப்பூர், பின்லாந்து, அமெரிக்கா, போலந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் ராஜு பற்றி கூகுள் இணையதளத்தில் அதிக அளவில் தேடி இருக்கிறார்கள்

Sunday, January 18, 2009

மவுசு குறையாத எம் ஜி ஆர்

எம் ஜி ஆரின் பிறந்த நாள் தமிழகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சகலதலைவர்களும் மலரஞ்சலி செலுத்தினர். எம் ஜி ஆரின் சிலைக்கு எதிரணி மாலை போடக்கூடாது என்பதனால் கரூரில் பூட்டுப் போட்டார்கள்


தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம்


கிராம நன்மைக்காக கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப் புதுப்பட்டு கிராமத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் உள்ளது பள்ளிப்புதுப்பட்டு கிராமம். பழங்காலத்தில் இக்கிராமத்தில் காலரா நோய் பரவியபோது சிவன் தவளை உருவும் அம்மன் சிறுமி உருவெடுத்து அவர்களுக்கு திருமணம் நடத்தினால் காலரா நோய் குணமடையும் என பெரியவர்கள் கூறியதைத் தொடர்ந்து தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்தது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடந்தது. பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும் மாமன் முறை குடும்பத்தினர் மாப் பிள்ளை வீட்டாராகவும் கருதப்பட்டனர். மாப்பிள்ளை (தவளை) வீட்டார் சீர்வரிசையுடன் மாலை 4 மணிக்கு பெண் பார்க்க ஊர்வலமாக சென்று பெண்ணைப் பார்த்தனர். பெண்ணுக்கு நகை சீர்வரிசை வரதட்சணை குறித்து பேசினர். தவளை - சிறுமி திருமணத்திற்கு பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமு மகள் விக்னேஸ்வரி(8) திருமணப் பெண்ணாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டார். பிறகு கோவில் குளத்தில் இருந்து ஒரு தவளை பிடிக்கப்பட்டு அதை மாப்பிள்ளையாகக் கருதி மண மேடையில் அமர வைத்தனர். பெண் வீட்டார்சிறுமியைத் திருமணக் கோலத்தில் அலங்கரித்து வீதியுலா நடத்தி மண மேடைக்கு அழைத்து வந்தனர். பள்ளிப்புதுப்பட்டு கிராம ஆரம்ப பள்ளி அருகில் அமைக்கப்பட்டு இருந்த மணமேடையில் மணமகன் தவளை மணமகள் சிறுமி அமர வைத்தனர். மந்திரங்கள் ஓத பொதுமக்கள் சூழ இரவு 7.30 மணிக்கு தவளை - சிறுமி திருமணம் நடந்தது. தவளை சார்பில் கோவில் பூசாரி சிறுமிக்குத் தாலி கட்டினார். தாலி கட்டிய பிறகு பெண்ணுக்குச் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தவளைக்கும் பெண்ணுக்கும் இருவீட்டார் சார்பில் மொய் பணம் மற்றும் நகைகள் வரிசை வைக்கப்பட்டன. திருமணத்தில் வரிசை வைத்து பலர் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. திருமணம் முடிந்தபின் தவளைக்குப் பூஜை செய்து பிடித்த குளத்தில் விட்டுவிட்டனர்.

Wednesday, January 14, 2009

பொங்கலோ பொங்கல்

பொங்கல் திருநாளில் கிடைத்த சில அசத்தல்படங்கள்


Monday, January 12, 2009

ஏ.ஆர்.ரஹ்மானுக்குதங்க பூமி விருதுஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகப்புகழ் பெற்றதங்க பூமி (கோல்டன் குளோப்) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் சினிமா, டிவி துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஹாலிவுட் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம் சார்பில் 1944-ம் ஆண்டு முதல் கோல்டன் குளோப் (தங்க பூமி) விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் விருதுக்கு இணையாக சிறந்த திரைப்படம், நாடகம், இயக்குனர், நடிகர், நடிகைகள் என பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பெவர்லி ல்ஸ் நகரில் 66-வது ஆண்டு விருது விழா நேற்று நடந்தது. ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.
சிறந்த சினிமா, இயக்கம் ஆகிய பிரிவுகளிலும் இந்த படத்துக்கு தங்க பூமி விருது கிடைத்துள்ளது.