Thursday, January 29, 2009

கி.பி. 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு


கடலூர் அருகே கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பேய்க்காநத்தம் பகுதியில் செல்லியம்மன் கோயில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் கோயில் பகுதியில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. அதில் கல்வெட்டு ஒன்று இருந்ததை கவிஞர் தங்க.வெங்கடேசன் என்பவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்று துறைக்கு தெரிவித்தார்.அதன்படி தொல்லியல் ஆய்வாளர்கள் சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன், கண்ணன் ஆகியோர் பேய்காநத்தம் சென்று கல்வெட்டை பார்வையிட்டனர். அதில், பேய்காநத் தத்தை அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்த கூளப்பன் என்பவர் அவ்வூரை தானமாக கோயிலுக்கு கொடுத்துள்ளதாக வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எழுத்தின் வடிவம் கி.பி. 16ம் நூற்றாண்டின் இறுதி காலத்தை சேர்ந்தது, கல்வெட்டில் 2 என்ற வார்த்தை இருந்தால், இதன் துணை கல்வெட்டு அதே பகுதியில் புதையுண்டு இருக்கலாம் என்பதும் ஆய்வில் தெரியவந்தது.இந்த கல்வெட்டு கி.பி. 1854ம் ஆண்டில் செஞ்சி பகுதியின் மன்னனாக இருந்த வைப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதும், அதற்கான அரிய கலை படைப்புகளும் கிடைக்க பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அழகப்பன் கூறுகையில், ‘‘இந்த கல்வெட்டின் மூலம் இப்பகுதியையட்டி வேகாக்கொல்லை, ஆயிப்பேட்டை, சத்திரம், மீனாட்சிப்பேட்டை, பாச்சாரபாளையம், கன்னித்தமிழ்நாடு, வழுதலாம்பட்டு ஊர்களில் கள ஆய்வு மேற்கொண்டு வரலாற்று விவரங்களை சேகரிக்க வாய்ப்பு இருப்பதாக’’ தெரிவித்தார்.

No comments: