Monday, January 12, 2009

ஏ.ஆர்.ரஹ்மானுக்குதங்க பூமி விருது



ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகப்புகழ் பெற்றதங்க பூமி (கோல்டன் குளோப்) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் சினிமா, டிவி துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஹாலிவுட் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம் சார்பில் 1944-ம் ஆண்டு முதல் கோல்டன் குளோப் (தங்க பூமி) விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் விருதுக்கு இணையாக சிறந்த திரைப்படம், நாடகம், இயக்குனர், நடிகர், நடிகைகள் என பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பெவர்லி ல்ஸ் நகரில் 66-வது ஆண்டு விருது விழா நேற்று நடந்தது. ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.
சிறந்த சினிமா, இயக்கம் ஆகிய பிரிவுகளிலும் இந்த படத்துக்கு தங்க பூமி விருது கிடைத்துள்ளது.

No comments: