Thursday, January 29, 2009

நந்தி, சர்ச் பார்க்கவாய்ப்பு மேட்டூர் நீர்மட்டம் சரிவு



மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவிட்டதால்,
கடந்தமூன்றாண்டு களாகமூழ்கியிருந்தஜலகண் டேஸ்வரர் கோவில் நந்தி, சர்ச் கோபுரம்ஆகியவை வெளியில் தெரிகின்றன.மொத்தம் 151 சதுர கி.மீ., நீர்ப்பரப்பு பகுதியைக் கொண்ட மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்ட
உயரம் 120 அடி. அணையின் நீர்ப்பரப்பு பகுதியில் பல நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட ஜலகண்டேஸ் வரர் கோவிலும், சர்ச் ஒன்றும் உள்ளன.பண்ணவாடி நீர்ப்பரப்பு பகுதியில் உள்ள இந்த வரலாற்று சின்னங்களை பார்க்க மாநிலம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கோடைக் காலத் தில் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும்போது நந்தி சிலையும், நீர் மட்டம் 82 அடியை எட்டும்போது "சர்ச்' கோபுரமும் நீருக்குள் மூழ்கி விடும்.

கடந்த 2005 ஜூலை 19ம் தேதி 69.870 அடியாக உயர்ந்ததால் நந்தி சிலை முழுமையாக நீரில் மூழ்கியது. நீர்மட்டத்தின் ஏற்ற, இறக்கம் காரணமாக அவ்வப்போது சர்ச் கோபுரம் மட்டும் வெளியில் தெரிந்தது. மூன்று ஆண்டுகளில் ஜனவரி முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் நந்தி மற்றும் சர்ச் கோபுரம் இரண்டும் ஒரே நேரத்தில் வெளியில் தெரியவில்லை. சுற்றுலாப் பயணி ள் சர்ச் கோபுரத்தை மட்டுமே பார்வையிட்டு ஏமாற்றத்தோடு திரும்பினர்.நேற்று நீர்மட்டம் 62.33 அடியாக இருந்த நிலையில் மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் நேற்று மாலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 293 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் வறட்சி நீடிப்பதால் அணைக்கு அதிகபட்ச
நீர்வரத்து கிடைக்க காலதாமதம் ஆகும். கடந்த 2005 ஜனவரி இறுதியில் நீருக்கு வெளியே தெரிந்த நந்தி, சர்ச் கோபுரம் ஆகிய இரு வரலாற்று சின்னங்களும் அணை நீர்மட்டம் குறைந்ததால் மூன்றாண்டுக்கு பின் தற்போது ஒன்றாக தெரிவது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்ச், கோபுரம் ஆகியவற்றை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், மூன்றாண்டுக்கு பின், ஜனவரியில் மேட்டூர் அணை நீர்மட்டம் 62 அடியாக சரிந்துள்ளது டெல்டா விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

No comments: