Wednesday, March 25, 2009

கால்விரலில்எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதிய மாணவிகடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பார்வையற்ற மூன்றுமாணவிகள் உட்பட 10 பேர், உதவியாளர் மூலம் எஸ்.எஸ்.எல்.சி.,
தேர்வு எழுதினர். கைகள் இல்லாத மாணவி ஒருவர், தனது கால்விரல்களால் தேர்வு எழுதினார்.தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,
தேர்வு நேற்று துவங்கியது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பார்வையற்ற மூன்று மாணவிகள் உட்பட 10 பேர்,
உதவியாளர் மூலம் நேற்று எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர்.கடலூர் முதுநகர் செயின்ட் டேவிட் மேல்நிலைப்பள்ளியில் நான்கு
மாணவர்கள், சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் இரண்டுமாணவர்கள், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் தலா ஒரு மாணவி, கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவன் உட்பட ஒன்பது பேர் உதவியாளர் மூலம் தேர்வெழுதினர்இதே போல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி புனித மிக்கேல்
மேல்நிலைப்பள்ளி பார்வை யற்ற மாணவி பானுபிரியா, அரசு நியமித்துள்ள உதவியாளர் மூலம் எஸ்.எஸ். எல்.சி., தேர்வெழுதினார்.
இதே பள்ளியில் படிக்கும் ஒட்டம்பட்டைச் சேர்ந்த காது கேளாதமாணவன் முருகன் நேற்று தேர்வெழுதினார்.
: விழுப்புரம் அடுத்த ஆற்காடுகிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகள் வித்யாஸ்ரீ(18). இரு கைகள்
இல்லாத இவர், ஆற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தஎஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், தனது இடது கால் விரல்களைப்
பயன்படுத்தி தேர்வெழுதினார். மற்ற மாணவர்களைப் போலவித்யாஸ்ரீக்கும் தேர்வு எழுதும் நேரம் ஒதுக்கப்பட்டு,குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வெழுதி அசத்தினார்.

Wednesday, March 18, 2009

நான்கு கை, காலுடன் பிறந்த அதிசய குழந்தைதிருவெண்ணெய்நல்லூரில் நான்கு கை, கால்கள்மற்றும் ஒரு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை இறந்தது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த காந்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆராயி(25). இவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. முதலில் பெண் குழந்தை பிறந்து இறந்தது.
இதைத் தொடர்ந்து ஆராயி கருவுற்று இரண்டாவதாக பெண் குழந்தையை பெற்றார். அக்குழந்தைக்கு தற்போது நான்கு வயது ஆகிறது.இந்நிலையில் ஆராயி மீண்டும் கருவுற்று பிரசவத்திற்காகநேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு நான்கு கால், நான்கு கை, ஒரு தலையுடன் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரு மணி நேரத்தில் அக்குழந்தை பரிதாபமாக இறந்தது.

மீனாட்சி அம்மன் கோபுரத்திற்கு தங்கத்தகடுமதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏப்., 8ம் நடக்கிறது. இதை முன்னிட்டு, அம்மன் சன்னிதி தங்கக் கோபுரத்தில் 1,200 சதுர அடிக்கு புதிதாக 33 லட்சம் ரூபாய் செலவில் தங்கத்தகடு
பதிக்க முடிவு செய்யப்பட்டது. இக்கோபுரம் 1559ம் ஆண்டு சிராமலை செவ்வந்திமூர்த்தி செட்டி என்பவரால் கட்டப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் ஸ்தபதி தலைமையிலான குழுவினர் இதற்கான பணியில் மூன்று மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர் கோவிலுக்குக் காணிக்கையாகக் கிடைத்த 30 கிலோ தங்கத்தை உருக்கி பிஸ்கட்டாக மாற்றினர். அதை வெட்டி மெல்லிய தகடாக்கி வேலைப்பாடுள்ள தாமிரத் தகட்டில் பதித்து வருகின்றனர்.நேற்று மதியம் கோபுரத்தில் தங்கத்தகடு பதிக்கும் பணி துவங்கியது. இம்மாத இறுதிக்குள் முழுமையாகப் பதிக்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள தங்கத்தகட்டை புதுப்பிக்கும் பணியும் நடக்க உள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு விருந்து: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8ம் நடக்கிறது. அன்று ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இம்மாதம் 26ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகத்திற் கான பூஜைகள் துவங்குகின்றன. அடுத்த மாதம் 2ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகி றது. அம்மன் மற்றும் சுவாமி சன்னிதி கோபுரத்திற்கென தலா 33 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன.அடுத்த மாதம் 6ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக 40 யாக குண்டங்கள் தயாராகின்றன.

Wednesday, March 11, 2009

லிங்கனின் கைகடிகாரத்தில் ரகசிய செய்திஅமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கனின் தங்க கைகடிகாரத்தில் அமெரிக்க சிவில் போர் குறித்த ரகசிய செய்தி செதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் 16வது அதிபராக ஆப்ரகாம் லிங்கன், கடந்த 1860ம் ஆண்டு பதவி ஏற்றார் 1861ம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடந்தது. அதிருப்தியாளர்கள் கரோலினா மாகாணத்தில் உள்ள சம்ப்டர் கோட்டை மீது தாக்குதல் நடத்தினர். இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில்ஆப்ரகாம் லிங்கனின் தங்க கைகடிகாரத்தை பழுது பார்த்த ஜோனாதன்தில்லான் என்பவர், "சம்ப்டர் கோட்டை போராளிகளால் தாக்கப்பட்டது நன்றி கடவுளே! அரசு எங்களிடம் உள்ளது' என்ற ஆங்கில வாசகத்தைகடிகாரத்தினுள் எழுதியுள்ளார். அவர் குறித்த தேதி ஏப்.,13, 1861 ஆனால், இந்த வாசகம் எழுதப்பட்டது ஆப்ரகாம் லிங்கனுக்கு தெரியாது இந்த வாசகத்தை எழுதியதாக 45 ஆண்டுகள் கழித்து தில்லான்"நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் தெரிவித்திருந்தார்
அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆப்ரகாம் லிங்கனின் கைகடிகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள இந்த வாசகத்தை திறந்து பார்க்க வேண்டும், என தில்லானுடைய எள்ளுபேரன் சமீபத்தில் மியூசியத்தின்அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மியூசியத்தில் உள்ளகடிகாரம் திறந்து பார்க்கப்பட்டது. அதில் இந்த வாசகம் செதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

Monday, March 9, 2009

குப்பையில் கிடக்கும் 'தங்கத்தாய்'


தெருக்களில் கிடக்கும் குப்பைகளை சேகரித்து தனது மலைபோல் குவித்து வைத்துள்ளார் ஒரு மனநிலை பாதித்த பெண். குப்பைகள் உள்ள வீட்டிற்குள்ளேயே சமையல் செய்து, சாப்பிட்டு தூங்குகிறார். தேனி மாவட்டம், கூடலூர் ஞானியர் கோனார் தெருவில் வசிப்பவர் தங்கத்தாய் (30). இவர் 10 வயது வரை நல்ல வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்து மனநிலை பாதிப்பிற்குஉள்ளானார். தற்போது தனது வயதான தாய் எல்லம்மாவுடன் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளாக தெருக்களில் கிடக்கும் குப்பைகளை எடுத்து தனது வீட்டிற்குள் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் வீட்டிற்குள் போடும் குப்பைகளை தனது தாய் உட்பட யார் வந்து அகற்றினாலும் அவர்களை அடிப்பதும், விரட்டுவதுமாக யாரும் குப்பைகளை அகற்ற முன்வரவில்லை. சிறிது சிறிதாக சேகரிக்கும் குப்பைகள் வீட்டிற்குள் அதிக அளவில் தேங்கி விடுகிறது. கூடலூர் நகராட்சி நிர்வாகத்தினர் 2 மாதத்திற்கு ஒரு முறை மனநிலை பாதித்த பெண்ணை சமாதானம் செய்து வீட் டிற்குள் குவிந்து கிடக்கும் குப்பைகளை மிகுந்த சிரமத்துடன் அகற்றி வருகின்றனர். தெருக்களில் கிடக்கும் குப்பைகள் மட்டுமின்றி சாக்கடையில் இருக்கும் குப்பைகளையும் வீட்டிற்குள் போடுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளுக்கு உள்ளேயே அவரது தாய் சமையல் செய்கிறார். இவர்கள் இருவரும் சாப்பிடுவதும், இரவு நேரத்தில் தூங்குவதும் இந்த குப்பையில் தான்.மனநிலை பாதித்த பெண்ணுக்காக அவரது வயதான தாய் படும் சிரமம் பார்ப்பவர்களை நெகிழச் செய் துள்ளது. சில மாதங்கள் ஏர்வாடியில் இருந்த இப்பெண் அங்கு தீப்பிடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் மீண் டும் கூடலூருக்கு வந்து விட்டார். குப்பையில் கிடக்கும் தங்கத்தாயை மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க ஏதாவது ஒரு தொண்டு நிறுவனம் முன்வராதா என அவரது வயதான தாய் ஏக்கத்தில் உள்ளார்.

Sunday, March 8, 2009

நடிகர், நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம்


ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர், நடிகைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதுண்டு. கடந்த சட்டசபை தேர்தலில் .தி.மு.க.,வுக்காக சிம்ரன், சி.ஆர்.சரஸ்வதி,
விந்தியா, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், முரளி, செந்தில்,
ராமராஜன், விஜயகுமார், மனோபாலா, குண்டு கல்யாணம், தாமு, சூரியகாந்த், அருள்மணி, ஆனந்தராஜ் என பெரிய பட்டாளமே பிரசாரம் செய்தது. மயிலாப்பூர் தொகுதியில் நடிகர் எஸ்.வி.சேகர் அ.தி.மு.க., வின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தி.மு.க.,வுக்காக நடிகர்கள் நெப்போலியன், வாகை.சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து,
திரைப்படத் தயாரிப்பாளர் ராம.நாராயணன் என வழக்கமான திரைப்பட்டாளம் களமிறங்கியது. புதிய வரவாக, இயக்குனர் பாக்யராஜும் கலந்து கொண்டார். மதுரை இடைத்தேர்தலின் போது நடிகர் ரித்தீஷ், தி.மு.க.,வுக்காக பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா, மாயா, திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், வசந்தகுமார் மகன் விஜய் ஆகியோர் உள்ளனர். விஜயகாந்த் பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும் அவர், சினிமாக்காரர்ககளை பிரசாரத்துக்கு பயன்படுத்தவில்லை. கடந்த தேர்தலின்போது சிம்ரனுக்கு படவாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாதிருந்ததால் அவர் அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம் செய்தார். சிம்ரனுக்காக அப்போது 75 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டதாக பேசப் பட்டது. ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன்ஆகியோருக்கு ஒரு மேடைக்கு 25 ஆயிரம் ரூபாயும், நடிகை விந்தியாவுக்கு ஒரு மேடைக்கு 15 ஆயிரம் ரூபாயும், தாமுவுக்கு 10ஆயிரம் ரூபாயும், சி.ஆர்.சரஸ்வதி, சூர்யகாந்த்துக்கு ஒரு மேடைக்கு 5,000 ரூபாயும் கொடுக்கப்பட்டது. விஜயகுமார் மொத்தமாக ஒரு தொகை வாங்கிக்கொண்டு தான் பிரசாரம் செய்ததாகவும், நடிகர் முரளிக்கும், செந்திலுக்கும் நாள் கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டு பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.

தற்போது சினிமாவிலிருந்து சின்னத் திரைக்கு வந்துள்ள சிம்ரன், டில்லியில் வசித்து வருகிறார். இந்தத் தேர்தலில் யார் பிரசாரத்திற்கு அழைத்தாலும் செல்ல மாட்டேன் என அறிவித்திருக்கிறார்.ராதாரவிக்கும், கட்சி தலைமைக்கும் ஏற்பட்ட வருத்தத்தில் தலைமை நிலைய பேச்சாளர் பட்டியலில் முக்கிய இடத்தில் பெயர் இருந்தும், கட்சிக் கூட்டங்களில் பேச அழைக்கப்படவில்லை ராதாரவியின் அம்மா சமீபத்தில் இறந்தார். அவருக்கு ஜெ., மூலம் இரங்கல் கடிதம் கூட அனுப்பவில்லை என ராதாரவி வருத்தில் இருப்பதாவும் கூறுகின்றனர். இதனால் விஜயகாந்தின் தே.மு.தி.கபக்கம் ராதாரவி தாவினாலும் வியப்படைவதற்கில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.எஸ்.சந்திரன் அவ்வப்போது கட்சிக் கூட்டங்களில் பேசி வருகிறார். நடிகர் ஆனந்தராஜ் புதுச்சேரி தொகுதியில் அ.தி.மு.க வின் சார்பில் போட்டியட முயற்சித்து வருகிறார்.தேர்தல் பிரசாரம் செய்யப்போனதால் நடிகர் முரளிக்கும், செந்திலுக்கும் சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் இந்தத் தேர்தலில் அவர்கள் பிரசாரம் செய்ய வருவது கேள்விக்குறியே.ராமராஜன் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராக இருந்தாலும் அவருக்கு கட்சியிலிருந்து அழைப்பு இருக்குமா எனத் தெரியவில்லை.

கேமரா பேனா அபாயம்


கேமரா பேனாக்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் விஷமிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளம்பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். மொபைல் போன் மூலம் இளம் பெண்களை ரகசியமாக படம் எடுத்த சில விஷமிகளுக்கு வசதியாக தற்போது கேமரா பேனாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமான தோற்றத்தில் இருக்கும் பேனாவில் புள்ளி அளவில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. பேனா மேல் பகுதியை அழுத்தியதும் "ரெக்கார்டிங்' உறுதி செய்யப்படும்.


இதன் மூலம் சகஜமாக பேசியபடி எதிரில் நடப்பதை ஆடியோவுடன் கூடிய வீடியோவாக பதிவு செய்யலாம். தைவான் நாட்டு தயாரிப்பான இதில் "2 பிக்சல்" கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் "4 ஜி.பி., முதல் 8 ஜி.பி., " வரை பதிவு கொள்ளலாம். யு.எஸ்.பி., போர்ட் மூலம் "சார்ஜ்' செய்வதுடன் வீடியோவும் "டவுன்லோடு" செய்யலாம். தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பேனாவின் விலை 7 ஆயிரத்து 500 ரூபாய் இளம் பெண்களே கேமரா பேனா விஷமிகளிடம் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள உஷாராக இருங்கள் .

Thursday, March 5, 2009

நாய்களுக்கும் டயாபர்குழந்தைகளுக்கு தான் "டயாபர்' என்று நினைக்க வேண்டாம்; நாய்களுக்கும் வசதியாக இந்த சாதனம் விற்பனைக்கு வந்து விட்டது. பச்சிளம் குழந்தைகள் "நம்பர் 1' மட்டுமல்ல, "நம்பர் 2' போனாலும், தரை விரிப்பு, படுக்கையில் சிந்தி அசிங்கமாகாமல் தடுக்கவே
"டயாபர்' பயன்படுத்தப்படுகிறது. ஈரப்பசையை தாங்கக்கூடியது இது; துணியினாலானது மட்டுமின்றி, இப் போது, பிளாஸ்டிக் மற்றும் ரசாயன
இழைகளால் செய் யப்பட்ட டயாபர்களும் விற்பனை செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கு அடுத்தபடியாக செல்லமாக வளர்க்கப்படுவது நாய்கள்
தானே. குழந்தைகள் போல, நாய்களும் வீட்டில் ஆங்காங்கு "ஆய்' போய்விடுவதும் நடக்கிறது. அதற்கு பயந்தே, பல வீடுகளிலும், காலை,
மாலையில் "வாக்கிங்' போவதற்கு நாயையும் கூடவே அழைத்து செல்வதுண்டு.இனி இந்தக் கவலை வேண்டாம் நாய் வளர்ப் போருக்கு. குழந்தைகளுக்கு
பயன்படுத்தப்படுவது போல, நாய்களுக்கும் "டயாபர்' சாதனம் வந்து விட்டது. ஜட்டி போல இதை நாய்களுக்கு அணிவித்துவிட்டால் போதும், எந்த அசிங்கமும் செய்வது தவிர்க்கப்படும். அமெரிக்கா, கனடா, சீனா
நாடுகளில் உள்ள கால்நடை சாதனங்கள், உணவுப்பொருட்கள் தயாரிக்கும்
நிறுவனங்கள், நாய்களுக்கான "டயாபர்' களையும் தயாரித்து வருகின்றன.

மேற்கத்திய நாடுகளில் விற்பனை செய்த இந்த நிறுவனங்கள் இன்டர்நெட் மூலம் இந்தியாவிலும் விற்பனை செய்து வருகின்றன. மும்பை உட்பட
முக்கிய நகரங்களில் , கடைகளிலும் இப்போது விற்பனைக்கு வந்து விட்டன. பல்வேறு சைஸ்களில் இது கிடைக்கிறது. இது போல, பல்வேறு தரத்துடனும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள் ளன.
ஒரு பாக்கெட்டில் 11 டயாபர் உள்ளது; இதன் விலை 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சீன தயாரிப்பு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையிலும் வெகு சில கடைகளில் இந்த டயாபர்கள்
கிடைக்கின்றன. "குட்டிகளுக்கு டயாபர்கள் அணியக்கூடாது; அணிந்தால், அவை டயாபரை கடித்து சாப்பிடும் அபாயம் உள்ளது. இது நாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இதுபோல, ஆண் நாய்கள், டயாபர் அணிய மறுக்கும் வாய்ப்பும் அதிகம். அதை சமாளித்து தான் அணிய வைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில்
வெளியில் அழைத்துச் சென்று விட்டாலே, நாயை வழக்கப்படுத்தி விடலாம். அது தான் சிறந்த வழி' என்று நாய்கள் தொடர்பான மருத்துவர்கள் கூறுகின்றனர்

காந்திஜிகைப்பட எழுதிய உயில்தான் பயன்ப டுத்திய பொருள்கள், தனது புத்த கங்கள், தனது படைப்புகள் யாவும் நவஜீவன் அறக்கட்ட ளைக்குத்தான் சொந்தம் என்று மகாத்மா காந்தி உயில் எழுதி வைத்துள்ளார்
இந்த உயிலை மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதியுள்ளார்
இதை கடந்த 1940-ம் ஆண்டு பிப் ரவரி 20-ம் தேதி எழுதப்பட்டுள் ளது
"எனது பொருள்களை சொந் தம் கொண்டாடுவதற்கான சட் டப்பூர்வ உரிமை நவஜீவன் அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு' என்று உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்
"எனக்கு சொத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருந்தா லும், நமது சமூக வழக்கப்ப டியோ அல்லது சட்டத் தேவைக் காகவோ எனக்குச் சொந்தமான அசையும், அசையா பொருள் கள், நான் எழுதிய புத்தகங்கள் அல்லது இனி எழுதவிருக்கும் புத்தகங்கள் - அது அச்சிடப்பட் டிருந்தாலும் அச்சிடப்படாமல் இருந்தாலும் அவை யாவும் நவ ஜீவன் அறக்கட்டளைக்கே சொந்தம்' என்று உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த உயிலில் 1940-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி காந்தி கையெழுத்திட்டுள்ளார். பியார் லால் நாயர், கிஷோர்லால் ஜி மாஷ்ருவாலா ஆகிய இருவரும் சாட்சிகளாக கையெழுத்திட் டுள்ளனர்
நவஜீவன் அறக்கட்டளை 1929-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி காந்தியால் நிறுவப்பட் டது
காந்தியின் பொருள்கள் தங்க ளுக்கே சொந்தம் என்று நவஜீ வன் அறக்கட்டளை சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
இந்தப் பொருள்களை சட்டப் படி விலை கொடுத்து வாங்க வழியே இல்லை. சட்டவிரோத மாகவே எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் தனது மனு வில் அறக்கட்டளை கூறியுள் ளது குறிப்பிடத்தக்கது

Wednesday, March 4, 2009

11ம் நூற்றாண்டின் தலைப்பலி சிற்பம்


பண்ருட்டி அருகே, கி.பி., 11ம் நூற்றாண்டைச்
சேர்ந்த தலைப்பலி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடலூர்
மாவட்டம், பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தில் நங்கை
அம்மன் கோவில், கொற்றவை கோவிலின் முன்புறமுள்ள வேப்ப மரத்தில் பல
தலைமுறையாக, உடைந்த நிலையில் சிற்பம் காணப்பட்டது.

இச்சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கல்வெட்டு
ஆய்வாளர் தமிழரசன், கல்லூரி விரிவுரையாளர் வேல்முருகன் ஆய்வு
செய்தனர்.கி.பி., 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த, "நவகண்டம்' என்ற
வகையைச் சேர்ந்த தலைப்பலி சிற்பம் இது என தெரிந்தது. ஒரே கல்லில்
செதுக்கப்பட்ட இச்சிற்பம், உடைந்த நிலையில் உள்ளது. இடது கையால்
கழுத்தைத் தாங்கி, வலது கையில் ஒரு குறுவாளை கொண்டு தன் தலையைத்
தானே அறுத்து கொள்ளும் நிலையில் உள்ளது. தலைப்பலி கொடுக்கும்
வீரன் பத்மாசனம் இட்டு அமர்ந்து கண்களை மூடிய நிலையில்
உள்ளான்.இச்சிற்பத்தை சுற்றி பொறிக்கப்பட்டிருக்கும் சோழர் காலத்
தமிழ் எழுத்துக்கள், அதன் வரலாற்றை அரிய உதவியது. கி.பி., 11ம்
நூற்றாண்டின் எழுத்துக்களுடன் காணப்படும் கல்வெட்டு மொத்தம்
எட்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு, "அதிராஜ மாங்கல்ய புரத்து அழிதகா நாட்டைச்
சேர்ந்த முண்டன் மகன் என்பவன் தன் தலையை தானே பலி கொடுத்தான்'
என்றும், "தன் தலைவனான அரசன் வேந்தவேல், போரில் வெற்றி அடைய
வேண்டி, இங்குள்ள கொற்றவை தெய்வத்திற்கு மனப்பூர்வமாக தன் தலையை
தானே பலி கொடுத்து "நவகண்டம்' செய்து கொண்டான்' என்றும்
கூறுகிறது.தலைப்பலி கொடுத்தவன் பெயர் உள்ள பகுதி அழிந்து போய்
இருப்பதால் இந்த வீரனின் பெயர் அறிய முடியவில்லை; எனினும்
முண்டன் மகன் என்று தெரிகிறது. எந்த அரசனுக்காக தன் தலையை பலி
கொடுத்தான் என தெரியவில்லை."கொற்றவைக்குப் பலி கொடுத்த
வீரனுக்கு, இந்த ஊரைச் சேர்ந்த பேறகடிச்சான் பிள்ளை சேட்டையை
சேவித்தான்' என கல்வெட்டு கூறுகிறது

Sunday, March 1, 2009

ரகுமானுக்கு விருது தந்த பாடல்


ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்...
வா வா ரசிக்கும் வாழ்க்கையின் பக்கம்
வா வா நீல வானத்தின் பக்கம்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
கொஞ்சம் கொஞ்சம் நிஜமாக நான் உயிரை இழந்தேனே
சுடும் சுடும் தீயில் இரவுகள் கழித்தேனே
கண்ணில் இருக்கும் தூக்கத்தை துரத்திவிட்டேன்
நீல நட்சத்திரத்தால் நான் விரலை எரித்தேனே
வா வா ரசிக்கும் வாழ்க்கையின் பக்கம்
வா வா நீல வானத்தின் பக்கம்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ருசி பார் ருசி பார் இந்த இரவு தேனானது,
ருசி பார்
வைத்துக்கொள் இதயம்தான் கடைசி இலக்கு,
நீ வைத்துக்கொள்
கறுப்பு கறுப்பு மை உன் கறுப்பு மந்திரம்தானே
கறுப்பு கறுப்பு மை உன் கறுப்பு மந்திரம்தானே
வா வா ரசிக்கும் வாழ்க்கையின் பக்கம்
வா வா நீல வானத்தின் பக்கம்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
அப்போதிலிருந்து நீ உதட்டோடு நிறுத்தியதை சொல்லிவிடு
சொல்லிவிடு சொல்லிவிடு இமை மூடி சொல்லிவிடு
இப்படி ஒளிமயமான கண்கள் இரண்டும் ஒளியோடு இருக்கிறதா
வா வா ரசிக்கும் வாழ்க்கையின் பக்கம்
வா வா நீல வானத்தின் பக்கம்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்...
பாடல் எழுதியவர்: குல்சார்
பாடியவர்கள் சுவிந்தர்சிங், மாலக்ஷ்மி [முதல்வனில் குறுக்குசிறுத்தவளே,அலைபாயுதேயில் யாரோ யாரோடி ஆகியபாடல்களைப்பாடியவர்]