மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏப்., 8ம் நடக்கிறது. இதை முன்னிட்டு, அம்மன் சன்னிதி தங்கக் கோபுரத்தில் 1,200 சதுர அடிக்கு புதிதாக 33 லட்சம் ரூபாய் செலவில் தங்கத்தகடு
பதிக்க முடிவு செய்யப்பட்டது. இக்கோபுரம் 1559ம் ஆண்டு சிராமலை செவ்வந்திமூர்த்தி செட்டி என்பவரால் கட்டப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் ஸ்தபதி தலைமையிலான குழுவினர் இதற்கான பணியில் மூன்று மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர் கோவிலுக்குக் காணிக்கையாகக் கிடைத்த 30 கிலோ தங்கத்தை உருக்கி பிஸ்கட்டாக மாற்றினர். அதை வெட்டி மெல்லிய தகடாக்கி வேலைப்பாடுள்ள தாமிரத் தகட்டில் பதித்து வருகின்றனர்.நேற்று மதியம் கோபுரத்தில் தங்கத்தகடு பதிக்கும் பணி துவங்கியது. இம்மாத இறுதிக்குள் முழுமையாகப் பதிக்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள தங்கத்தகட்டை புதுப்பிக்கும் பணியும் நடக்க உள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு விருந்து: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8ம் நடக்கிறது. அன்று ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இம்மாதம் 26ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகத்திற் கான பூஜைகள் துவங்குகின்றன. அடுத்த மாதம் 2ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகி றது. அம்மன் மற்றும் சுவாமி சன்னிதி கோபுரத்திற்கென தலா 33 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன.அடுத்த மாதம் 6ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக 40 யாக குண்டங்கள் தயாராகின்றன.
No comments:
Post a Comment