குழந்தைகளுக்கு தான் "டயாபர்' என்று நினைக்க வேண்டாம்; நாய்களுக்கும் வசதியாக இந்த சாதனம் விற்பனைக்கு வந்து விட்டது. பச்சிளம் குழந்தைகள் "நம்பர் 1' மட்டுமல்ல, "நம்பர் 2' போனாலும், தரை விரிப்பு, படுக்கையில் சிந்தி அசிங்கமாகாமல் தடுக்கவே
"டயாபர்' பயன்படுத்தப்படுகிறது. ஈரப்பசையை தாங்கக்கூடியது இது; துணியினாலானது மட்டுமின்றி, இப் போது, பிளாஸ்டிக் மற்றும் ரசாயன
இழைகளால் செய் யப்பட்ட டயாபர்களும் விற்பனை செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கு அடுத்தபடியாக செல்லமாக வளர்க்கப்படுவது நாய்கள்
தானே. குழந்தைகள் போல, நாய்களும் வீட்டில் ஆங்காங்கு "ஆய்' போய்விடுவதும் நடக்கிறது. அதற்கு பயந்தே, பல வீடுகளிலும், காலை,
மாலையில் "வாக்கிங்' போவதற்கு நாயையும் கூடவே அழைத்து செல்வதுண்டு.இனி இந்தக் கவலை வேண்டாம் நாய் வளர்ப் போருக்கு. குழந்தைகளுக்கு
பயன்படுத்தப்படுவது போல, நாய்களுக்கும் "டயாபர்' சாதனம் வந்து விட்டது. ஜட்டி போல இதை நாய்களுக்கு அணிவித்துவிட்டால் போதும், எந்த அசிங்கமும் செய்வது தவிர்க்கப்படும். அமெரிக்கா, கனடா, சீனா
நாடுகளில் உள்ள கால்நடை சாதனங்கள், உணவுப்பொருட்கள் தயாரிக்கும்
நிறுவனங்கள், நாய்களுக்கான "டயாபர்' களையும் தயாரித்து வருகின்றன.
மேற்கத்திய நாடுகளில் விற்பனை செய்த இந்த நிறுவனங்கள் இன்டர்நெட் மூலம் இந்தியாவிலும் விற்பனை செய்து வருகின்றன. மும்பை உட்பட
முக்கிய நகரங்களில் , கடைகளிலும் இப்போது விற்பனைக்கு வந்து விட்டன. பல்வேறு சைஸ்களில் இது கிடைக்கிறது. இது போல, பல்வேறு தரத்துடனும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள் ளன.
ஒரு பாக்கெட்டில் 11 டயாபர் உள்ளது; இதன் விலை 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சீன தயாரிப்பு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையிலும் வெகு சில கடைகளில் இந்த டயாபர்கள்
கிடைக்கின்றன. "குட்டிகளுக்கு டயாபர்கள் அணியக்கூடாது; அணிந்தால், அவை டயாபரை கடித்து சாப்பிடும் அபாயம் உள்ளது. இது நாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இதுபோல, ஆண் நாய்கள், டயாபர் அணிய மறுக்கும் வாய்ப்பும் அதிகம். அதை சமாளித்து தான் அணிய வைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில்
வெளியில் அழைத்துச் சென்று விட்டாலே, நாயை வழக்கப்படுத்தி விடலாம். அது தான் சிறந்த வழி' என்று நாய்கள் தொடர்பான மருத்துவர்கள் கூறுகின்றனர்

No comments:
Post a Comment