Tuesday, May 25, 2010

ஆண்மைக் குறைவுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம்


புதிதாக ஒரு இன்ஹேலர் வரப் போகிறது. இதன் வேலை என்ன தெரியுமா? - ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் தருவதுதான்.
இந்த இன்ஹேலரில் அபோமார்பின் என்ற மருந்து பவுடர் வடிவில் இடம் பெற்றுள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், இந்த இன்ஹேலரைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது, ஒரு பஃப் எடுத்துக் கொண்டால் போதும். நமது மூளையின் கெமிக்கல் ரிசெப்டார்களை தூண்டுவித்து செக்ஸ் உறவுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்குமாம்.
உண்மையில் இந்த அபோமார்பின் பர்கின்சன் வியாதிக்காக தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் ஆய்வுகளின்போது இது ஆண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதை ஆய்வாளர்கள் கண்டனர். இதையடுத்து ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக இதை இன்ஹேலர் வடிவில் கொண்டு வருகின்றனர்.
இன்னும் இது விற்பனைக்கு வரவில்லை. பரீட்சார்த்த நிலையில்தான் உள்ளது. ஆஸ்த்மா இன்ஹேலர் போலவே இது பார்ப்பதற்கு இருக்கும். எழுச்சிக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த அபோமார்பின் இன்ஹேலர் பெரும் நிவாரணமாக அமையும், அவர்களும் செக்ஸ் வாழ்க்கையில் இயல்பாக ஈடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.
கடந்த பத்து வருடங்களாக வயாகரா, சியாலிஸ், லெவிட்ரா ஆகியவைதான் செக்ஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கான மருந்தாக உள்ளது. இந்த நிலையில் இதன் அடுத்த கட்டமாக பவுடர், இன்ஹேலர் வடிவில் ஆண்மைக் குறைவுக்கான மருந்து உருவாகியிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள வயாகரா உள்ளிட்ட மருந்துகளால் உடனடி நிவாரணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வயாகரா எடுத்துக்கொண்டால் குறைந்தது 40 நிமிடங்களாகும் - 'மூட்' வருவதற்கு.
அதேபோல, சியாலிஸ், லெவிட்ரா போன்றவையும் கூட உடனடி நிவாரணத்தைத் தராது. மேலும் இந்த மருந்துகளைப் பயன்படுத்திய ஆண்களில் 30 சதவீதம் பேருக்கு இது குறிப்பிட்ட பயனைத் தரவில்லை.
ஆனால் தற்போது வெக்சுரா நிறுவனம் தயாரித்துள்ள இந்த அபோமார்பின் இன்ஹேலரை ஒரு முறை எடுத்துக் கொண்டால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் உறுப்பு எழுச்சி அடைந்து உல்லாசத்திற்கு மனதும், உடலும் தயாராகி விடுகிறதாம்.
இதுதொடர்பாக 600 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில் பெரும்பாலானவர்களுக்கு இது நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக வெக்சுரா நிறுவனம் கூறுகிறது

No comments: