Tuesday, April 7, 2009

தேன்நிலவு கொண்டாட ரூ.11,000


ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் படுக்கையில், புது மணத்தம்பதியர் தேன்நிலவு கொண்டாடலாம். ஒரு நாள் இரவுக்கு கட்டணமாக ரூ.11,000 செலுத்த வேண்டும்.
ஈராக்கின் சிங்கமாக இருந்த அதிபர் சதாம் உசேன், அமெரிக்க படையினரால் 2003ல் பதவியை விட்டு விரட்டப்பட்டார். பின்னர் பாதாள குகை ஒன்றில் பதுங்கியிருந்த அவரை அமெரிக்க படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2006ல் அவரை தூக்கிலிட்டு கொன்றனர்.
சதாம் இருந்த காலம் வரையில் சர்வாதிகாரியாக, ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது கழிவறை, கை கழுவும் குழாய் கூட தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன என்றால், அவரது சொகுசு வாழ்க்கை புரிந்து இருக்கும். அவர் ஓய்வெடுப்பதற்காக, தலைநகர் பாக்தாத் அருகே ல்லா நகரில் ஒரு அரண்மனையை கட்டியிருந்தார்.
அமெரிக்க படையினர் வசம் ஈராக் வீழ்ந்தபின், இந்த அரண்மனையில்தான் அமெரிக்க வீரர்கள் தங்கினர். அவர்கள் அரண்மனையை ஒருவழி செய்திருந்தனர். சுவற்றில் கூரான பொருட்களால் கிறுக்கி சிதைத்து வைத்திருந்தனர். இந்த அரண்மனை மீண்டும் ஈராக் அரசிடம் கொடுக்கப்பட்டது.
இப்போது அந்த அரண்மனை சீர் செய்யப்பட்டு ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளது. ரோமானிய காலத்துக்கு கட்டிக்கலை பாணியில் பெரிய, பெரிய தூண்கள், மிக அழகான சர விளக்குகள், விசாலமான குளியல் அறைகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றுகள் என்று முன்பிருந்த நிலைக்கு அரண்மனை மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள அறைகளில், சதாமின் பிரத்யேக படுக்கை அறை உள்ளது. அதில் விசாலமான மெத்தையு டன் கட்டில் உள்ளது.
இந்த கட்டிலில் புது மணத்தம்பதிகள் தேனிலவு கொண்டாட அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாள் இரவு கட்டணமாக ரூ.11,000 செலுத்த வேண்டும். ஈராக்கில் இப்போது அமைதி திரும்பியுள்ள நிலையில், உலகம் முழுவதும் இருந்து புது மணத்தம்பதிகள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//இரவுக்கு கட்டணமாக ரூ.11,000 செலுத்த வேண்டும்.//

எப்படியெல்லாம் சம்பாதிக்கறாங்க?

its your wish to remove the word verification. its burdon..