Wednesday, April 22, 2009

நடிகர் ஜிதேந்திரா மீது செருப்பு வீச்சு

மகாராஷ்டிராவில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகர் ஜிதேந்திரா மீது செருப்புகள் வீசப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மீது, ஈராக் நிருபர் ஒருவர் ஷ§ வை எறிந்ததில் இருந்து, இந்த கலாசாரம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ஜிண்டால், பா.ஜ. தலைவர் அத்வானி ஆகியோர் மீதுஷூ க்கள் வீசப்பட்டன.
கோவாவில், காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மீது பிரியாணி பொட்டலம் வீசப்பட்டது. இப்போது, காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் ஜிதேந்திரா மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் ஜிதேந்திராவின் நெருங்கிய நண்பர், மகாராஷ்டிரா முன்னள் அமைச்சர் அமரீஷ் படேல், காங்கிரஸ் சார்பில்தூ
லி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்ய தூ
லிக்கு ஜிதேந்திரா நேற்று வந்தார். இதையட்டி உள்ள நந்தூ
ர்பார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்ராவ் கவிட் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நந்தூ
ர்பாருக்கு சென்றார் ஜிதேந்திரா, அங்கு சாலையோரங்களில் கூடியிருந்த மக்களிடம் பிரசாரம் செய்தார். அப்போது, ஜிதேந்திரா மீது ஒருவர் செருப்புகளை தூ
க்கி விசினார். அவரது அருகில் செருப்புகள் விழுந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
செருப்புக்களை விசிய நபர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. வீடியோவில் பார்த்த போது, தாடி வைத்த ஒருவர், ஜிதேந்திரா மீது செருப்புகளை வீசியுள்ளது தெரியவந்தது.
இதுபற்றி அமரீஷ் படேல் கூறுகையில், ஜிதேந்திரா மீது செருப்புகளை வீசிய ஆசாமி குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. திட்டமிட்டே செருப்புக்கள் வீசப்பட்டுள்ளனஎன்றார். செருப்புகளை வீசிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments: